நமச்சிவாய வாழ்க - சிவபுராணம் தமிழ் பாடல் வரிகள்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப் பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக் கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய் வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச் செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் விமிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச் சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப் புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு
ஆரா அமுதே அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன் இருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பு அரிய பேர் ஒளியே ஆற்று இன்ப வெள்ளமே ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

 

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

40.1K

Comments Tamil

hi5nb
ஐயா நீண்ட கால நோக்கில் இது வரை தொடர்ந்து இந்த சிவபுராணம் கேட்டும் பார்த்தும் கேட்டும் படித்தும் என்று ஆண்டவனே வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா🙏 -Senthil Vinayagam

நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நமசிவாயம் என்னுள் இருக்கையிலே 🙏🙏🙏🙏🙏 -Rajarajendhiran

இந்த பாடல் என்னை மெய் சிலிக்க வைத்து விட்டன 😌 -Saravanakumar

இப்புரானத்தை போற்ற எனக்கு தகுதி இல்லை ஐயனே 😇🙏 -Thanush

அழுது கொண்டே கேட்டேன். அன்பே சிவம். அன்பே சிவம்.🙏💐 -Harithaa Mohanraj

Read more comments

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |