Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

திருமால் 108 போற்றி

114.9K
17.2K

Comments Tamil

34866
அறிவு வளர்க்கும் தரமான இணையதளம் -மாதவி வெங்கடேஷ்

மிகவும் நல்ல இணையதளம் 👍 -தினேஷ்

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா

Read more comments

 

Video - Thirumaal 108 Pottri in Tamil 

 

Thirumaal 108 Pottri in Tamil

 

ஓம் அப்பனே போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவசயனா போற்றி
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புதலீலா போற்றி
ஓம் ஆறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்த தேவனே போற்றி
ஓம் ஆதியே அனாதியே போற்றி
ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயனே போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குணசீலனே போற்றி
ஓம் ஏழைப்பங்காளனே போற்றி
ஓம் எழில்நிற வண்ணனே போற்றி
ஓம் எழில்மிகு தேவனே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கண்கண்ட தேவனே போற்றி
ஓம் கருடவாகனனே போற்றி
ஓம் கல்யாணமூர்த்தியே போற்றி
ஓம் கல்பதருவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி
ஓம் சர்வலோகேசனே போற்றி
ஓம் சாந்தகுணசீலனே போற்றி
ஓம் ஸ்ரீனிவாசனே போற்றி
ஓம் சிங்காரமூர்த்தியே போற்றி
ஓம் சிக்கலை அறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாயணிவாய் போற்றி
ஓம் தமிழ்தேன் அருள்வாய் போற்றி
ஓம் கடலமுது அளித்தாய் போற்றி
ஓம் நந்தகோபாலனே போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவனே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவதாரா போற்றி
ஓம் தயாநிதி ராமா போற்றி
ஓம் தந்தை சொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிந்தவனே போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் நற்கதிர் தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்டவாசனே போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கலைஞானம் அருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினிலமர்வாய் போற்றி
ஓம் பவளம்வாய் உடையானே போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புஜங்களே போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்குசக்கரனே போற்றி
ஓம் சன்மார்கம் அருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் லோலா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத்தமனே போற்றி
ஓம் பொன் புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மனநிலை தருவாய் போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பத்மநாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்தசாரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரதராஜானே போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தரராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் ஹரி ஹரி நமோ நாராயணா போற்றி

 

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon