திருத்தொண்டர் புராணசாரம்

மல்குபுகழ் வன்றொண்ட ரருளா லீந்த

வளமருவு திருத்தொண்டத் தொகையின் வாய்மை,

நல்கும்வகை புல்கும்வகை நம்பி யாண்டார்

நம்பிதிரு வந்தாதி நவின்ற வாற்றாற்

பல்கு நெறித் தொண்டர்சீர் பரவ வல்ல

பான்மையா ரெமையாளும் பரிவால் வைத்த

* செல்வமிகுந் திருத்தொண்டர் புராண மேவுந்

திருந்துபய னடியேனுஞ் செப்பலுற்றேன்.

- சுந்தரமூர்த்தி நாயனார்

தண்கயிலை யதுநீங்கி, நாவ லூர்வாழ்

சைவனார் சடையனார் தனய னாராய், மண்புகழ வருட்டுறையா னோலை காட்டி

மணம்விலக்க, வன்றொண்டா, யதிகை சேர்ந்து, நண்பினுட னருள்புரிய, வாரூர் மேவி,

நலங்கிளரும் பரவைதோ ணயந்து வைகித், திண்குலவும் விறன்மிண்டர் திறல்கண் டேத்துந்

திருத்தொண்டத் தொகையருளாற் செப்பி னாரே.

செப்பலருங் குண்டையூர் நெல்ல ழைத்துத்,

திருப்புகலூர்ச் செங்கல்செழும் பொன்னாச் செய்து, தப்பின்முது குன்றர்தரும் பொருளாற் றிட்டுத்,

தடத்தெடுத்துச், சங்கிலிதோள் சார்ந்து, நாத னொப்பிறனித் தூதுவந், தாறூடு கீறி,

யுறுமுதலை சிறுமதலை யுமிழ நல்கி, மெய்ப்பெரிய களிறேறி, யருளாற் சேர

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |