கூட லம்பதியி லாடக மேருக்
கொடிய விற்குரிசி லடியவ னுக்குப் பாட லின்பரிசி லாகிய செம்பொற்
பலகை யிட்டபடி பாடின மன்னான் வீட ரும்பொருவில் கற்புடை யாளோர்
விறலி யைப்பரம னிறையருள் பற்றி
பாட கஞ்செறியும் யாழ்வழி பாடி
வாது வென்றவர லாறு மிசைப்பாம்.
வரகு ணன்கதி யடைந்தபி னம்பொன் மௌலி சூடிய விராச விராசப் புரவ லன்புவி மடந்தையை வேட்டுப்
புயந்த ழீஇக்கொடு நயந்தரு நாளிற்
பரவு மன்பதை புரந்தொழு கந்தப்
பஞ்ச வற்குரிய ரஞ்சன வுண்கண்
மரபின் வந்தமட வார்பல ரேனை
மையல் செய்யுமட வார்பலர் மாதோ.
அன்ன போகமட வாரு ளொருத்தி யரச னுக்கமுது மாவியு மாகும்
மின்ன னாண்மதுர கீத மிசைக்கும்
விஞ்சை யின்றுறைவ லாளவ ளுக்கும்
பன்ன காபரண னின்னிசை பாடும்
பத்தி ரன்பொருவில் கற்புடை யாட்கும்
மன்னு கீதவினை யாலிகன் மூள
வழுதி காதன்மட மாது பொருளாய்.
பாடி னிக்கெதிரொர் பாடினி தன்னைப் பாட விட்டிவள் படைத்த செருக்கை ஈட ழிப்பலென வெண்ணி யெழீஇத்தன்
னிறை மகற்கஃ திசைத்தலு மந்தத் தோடி றப்பொரு கயற்கணி னாடான்
சொன்ன வாறொழுகு மன்னவர் மன்னன்
நாடி யத்தகைய விறலியை யீழ
நாட்டி னும்வர வழைத்து விடுத்தான்.
பந்த யாழ்முதுகு தைவர விட்டுப்
பாட லாயமிரு பக்கமு மொய்ப்ப
வந்த பாடினி மடந்தையு மன்னர்
மன்ன னைத்தொழுதொர் கின்னர மாதிற்
சந்த வேழிசை மிழற்றின ணின்றா
டன்னை நோக்கியொரு மின்னிடை
யாண்மேற்.
சிந்தை போக்கிவரு தீப்பழி நோக்காத் தென்ன ருக்கரச னின்னது செப்பும்.
பத்தி ரன்மனைவி தன்னையெம் முன்னர்ப் பாடு தற்கழை யதற்கவ ளாற்றா
துத்த ரஞ்சொலினும் யாமவள் சார்பா
யுனைவி லக்கினும் விடாது தொடர்ந்தே
சித்த நாணமுற வஞ்சின மிட்டுச்
செல்ல னில்லென வளைந்துகொ ளென்ன எய்த்த நுண்ணிடையி னாளை யிருக்கைக் கேகி நாளைவரு கென்று விடுத்தான்.
வேறு
பின்ன ரின்னிசைப் பத்திரன் பெருந்தகை விறலி தன்னை யங்கழைத் துளத்தொன்று புறத்தொன்று சாற்றும் என்னோ டின்னிசை பாடுவா ருளர்கொலோ விங்கென் றுன்னி வந்திருக் கின்றன னிசைவலா ளொருத்தி.
ஆட மைத்தடந் தோளினா யவளொடுங் கூடப் பாட வல்லையோ பகரெனப் பாடினி பகர்வாள் கோட ருந்தகைக் கற்புமிக் கூடலெம் பெருமான் வீட ருங்கரு ணையுமெனக் கிருக்கையால் வேந்தே.
பாடி வெல்வதே யன்றிநான் பரிபவ முழந்து வாடு வேனலே னென்றுரை வழங்கலு மதுக்கால் ஏடு வார்குழ லவளையு மிருக்கையுய்த் திருந்தான் நீடு வார்திரைப் பொருநையர் தண்டுறை நிருபன்.
மற்றை வைகலவ் விருவரைப் பஞ்சவன் மதுரைக் கொற்ற வன்றன தவையிடை யழைத்துநேர் கூட்டிக் கற்ற வேழிசை கேட்குமுன் கலத்தினும் போந்த வெற்றி வேன்மதர் நெடுங்கணாள் விறலியை வைதாள்.
குற்ற மெத்தனை யெத்தனை குணங்கள்போழ்க் கோலுக் குற்ற தெய்வமே திசைப்பதெவ் வுயிருடம் புயிர்மெய் பெற்ற வோசையெவ் வளவவைக் குத்தரம் பேசி மற்றெ னொடுபா டில்லையேல் வசையுனக் கென்றாள்.
இருமை யும்பெறு கற்பினா ளியம்புவாள் கலத்தின் வரும ரும்பெறற் கல்வியும் வாதின்மே லூக்கப் பெருமை யும்பலர் விரும்புறு பெண்மையின் செருக்குள் திரும கன்சவை யறியவாய் திறக்கவேண் டாவோ.
நெய்யுண் பூங்குழன் மடவரா னின்னொடும் வாது செய்யும் பூசலுக் கெதிரலாற் றீயவாய் திறந்து வையும் பூசலுக் கெதிரலேன் மானம்விற் றுன்போல் உய்யும் பாவைய ரேயதற் கெதிரென வுரைத்தாள்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |