சிவபுராணம்

ஐந்தெழுத்து மந்திரத்தை, அதற்கு ஆதாரமான வனை, குருமணியை, ஆகமம் ஆனவனை வாழ்த்தி, அவன் திரு வடி தொழுது தொடங்கும் சிவபுராணம் என்ற 95 அடிகள் கொண்ட கலிவெண்பா வாதவூர் அடிகளால் திருப்பெருந்துறை யில் அருளப்பெற்றதாகும்.
புராணம் என்பது பழமை. ஆகவே, சிவபுராணம் என்பது சிவனது அனாதி முறைமையான பழமை கூறுவது என்று இதன் உட்கிடையைக் குறித்தனர் முன்னைச் சான்றோர். மூலங்காண முடியாத காலப்பழமையோன், காலங் கடந்தோன் ஆகலின் அவனது பழமை அனாதிமுறையான பழமை ஆயிற்று.
திருவாசகம் ஆகிய அருள்நூலுக்கு முதலில் அமைந்துள்ள இத்திருப்பாட்டு, அடியார்களால் நாடொறும் ஓதப்படுவதாகும். திருவாசகத்தில் உள்ள கருத்துக்களின் பொலிவும் உண்மையும் அருளும் இதில் நுட்பமாக அடங்கியுள்ளன.
என்ப.
திருவாசகத்துக்கு இதனைத் தற்சிறப்பாயிரம் (நூன்முகம்)
மறையே

வாழ்த்தும் வணக்கமும், முறையே வாழ்க என்று 5 அடி களாலும் வெல்க என்று 5 அடிகளாலும் போற்றி என்று 6 அடி களாலும் புகலப்படுகின்றன. அதன்பின் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை உரைப்பன் யான் என்று வருபொருள் உரைக்கிறார் அடிகள்.
அதன் பின் 25 ஆவது அடிவரை அவையடக்கம்; எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்த அலுப்பு 30அடி வரை; அடுத்து மெய்யே இறை வன் அடி கண்டு வீடுற்ற செய்தி என்பன விளம்பப்படுகின்றன.
..
அதன் பின் முன்னிலைப் பரவலாக இறைவனை நேரிடை யாகப் போற்றுதல் வருகின்றது. இறைவனின் ஐந்தொழில், சிந்தனையில் தேனாக அவன் ஊறுதல், நலம் இல்லாத தமக்கு இறைவன் நல்கியமை ஆட்கொண்ட கருணை, இறைவனின் வியத்தகு பெற்றிகள் என்பனவும் போற்றப் படுகின்றன. திரு வடிக்கீழ், சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் செல்வர், சிவபுரத்தில் சிவனடிக் கீழ்ப்பல்லாரும் ஏத்தப் பணிந்து சிவமயமாக இருப்பர் என்று நூற்பயனோடு முடிகிறது. அழகு, அமைதி, தெளிவு, உணர்ச்சி ஆகியவற்றின் கூடலாகச் சிவ புராணம் திகழ்கிறது.
சிவ பெருமானுக்கு வணக்கம் என்பதான] நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் வாழ்க. அந்த ஒலியின் பொரு ளாம் தலைவன் வாழ்க. கண் இமைக்கும் கால அளவிலும் அடி யேன் நெஞ்சினின்றும் நீங்காத பெருமானின் திருவடி கோகழி என்ற ஊரில் எழுந்தருளியிருந்தவன் திருவடி வாழ்க.
அடியேனை ஆட்கொண்ட
மேம்பட்ட
ஆசிரியரின்
வாழ்க.
திருவடி வாழ்க. தான் ஒருவனே என்றாலும் பலராகவும் பலவாகவும் காட்சி தருபவனாகிய இறைவன் திருவடி வாழ்க.
மன ஓட்டத்தை அழித்து அடியேனை ஆண்டு கொண்ட அறுப் ருளிய இறைவன் திருவடி வெல்க. பிறவித் தளையை பவன், சடைமுடியாம் தலைக்கோலம் அணிந்தவன் ஆகிய பெரு மானின் திருவடியில் கட்டிய கழல்கள் வெல்க. தன்னை அடை யார்க்குத் தொலைவில் இருப்பவனின் பொலிவுடைய வெல்க கைகூப்பித் தொழுவார் மகிழ்தற்கு ஏதுவாகிய இறை வன் திருவடிகள் வெல்க. தலைவணங்குவாரை செய்யும் சிறப்புடையோன் திருவடிகள் வெல்க.
அடிகள்
உயர்வடையச்
எல்லாம் உடைய பெருமானின் திருவடிக்கு வணக்கம்.
எம் தந்தையின் திருவடிக்கு வணக்கம். ஒளிவடிவானோனின் திருவடிக்கு வணக்கம். சிவபெருமானின் சிவந்த திருவடிக்கு வணக்கம். அன்பினில் நிலைத்த தூயோன் திருவடிக்கு வணக்கம். நிலையற்றதாக வரும் பிறப்புத் தொடரை அறுக்கும் அரசனின் திருவடிக்கு வணக்கம். சிறப்பு மிக்க பெருந்துறைக்கண் எழுந் தருளியுள்ள நம் தேவனின் திருவடிக்கு வணக்கம். தெவிட்டுதல் இல்லாத இன்பம் அருள்கிற மலைபோல்பவனுக்கு வணக்கம்.
சிவபெருமானாகிய இறையவன் எம் நெஞ்சில் நிலைத் தொழுது, திருத்தலால் அவன் அருளாலே அவன் திருவடி எல்லார் உள்ளமும் மகிழ, சிவபெருமானது பழைமையான முறைமையினைப் பழவினைகள் எல்லாம் ஓய்ந்து கெடும்படி அடியேன் இயம்பலானேன்.
நெருப்புக் கண் அமைந்த நெற்றியுடைய பெருமானின் அருட்பார்வை வழிகாட்ட அவன் திருமுன் அணுகி, நினைத்தற் கும் எட்டாத எழுச்சி நிரம்பிய வீரக்கழல் அணிந்த திருவடியை வணங்கி, அளவு
விண்ணில் நிறைந்தும் மண்ணில் நிறைந்தும் மேம்பட்ட வனே, காட்சிக்கு விளங்கும் ஒளியாக இருப்பவனே, கடந்து எல்லை யாவும் இகந்து
உள்ளவனே, உன் பெருஞ்
சீர்த்தியைப் புகழ்ந்து உரைக்கும் வழியைத் தீவினையேன் உன் அருளால் அன்றிச் சிறிதும் அறிந்திலேன்.
எம்பெருமானே, புல்லாகியும் பல்வகைப் பூடுகள் ஆகியும் புழுவாகியும் மரமாகியும் பல வகைப்பட்ட விலங்குகள் ஆகியும் பறவைகள் ஆகியும் பாம்புகள் ஆகியும் கல்ஆகியும் மனிதர்கள் ஆகியும் பேய்கள்ஆகியும் பூதகணங்கள்ஆகியும் வலியஅசுரர்கள் ஆகியும் முனிவர்கள் ஆகியும் தேவர்கள் ஆகியும் பிறந்து நிகழ்கின்ற இந்த நிலைத்திணை இயங்கு திணைப் பொருள் களுள்ளே எல்லா வகையான பிறப்புக்களிலும் பிறந்துமெலிந்து விட்டேன். உண்மையாகவே இந்நாள் உன் பொன் போலும் துன்பத்தினின்று திருவடிகளைக் கண்டு அடியேன் விடுதலை அடைந்தேன்.
பிறவித்
அடியேன் உய்யும் பொருட்டு என் உள்ளத்தில் ஓம் என்ற பிரணவ உருவமாக நின்ற மெய்யனே, மாசிலனே, அறத்தின் வடிவாம் காளையை ஊர்தியாக உடையவனே, ஐயனே என்று மறைகள் துதிக்க அவற்றுக்கு எட்டாது உயர்ந்தும் ஆழ்ந்தும் விரிந்தும் நுட்பமாகவும் இருக்கும் பெருமானே, உயிர் உருவான தூயனே, பொய்யான எண்ணமும் சொல்லும் யாவும் சென்று ஒழிய ஆசான் ஆக எழுந்தருளி மெய்யுணர்வாகித் திகழ்கின்ற என்றுமுள்ள பேரொளியே, எவ்வகை அறிவும் இல்லாத எளி யேனுக்கு இன்பம் தரும் பெருமானே, அறியாமை இருளை நீங்கச் செய்யும் நன்மை தரும் அறிவுருவே,
தனக்குத் தோற்றமும் நிலைபேற்றின் அளவும் முடிவும் இல்லாதவனே, எல்லா உலகையும் படைப்பாய் காப்பாய் ஒடுக்குவாய் அருள் தருவாய் பல்வகைப் பிறப்புக்களில் செலுத்தி மறைத்தலின் மயக்கம் தருவாய், அதன் பின் அடியேனை உன் தொண்டினுள் புகச் செய்வாய்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |