வால்மீகி ராமாயணம் தமிழ்

valmiki ramayanam tamil pdf cover page

14.0K

Comments

w4Gsn

மரணத்தின் உருவாக்கம்

சிருஷ்டியின் போது, பிரம்மா உலகம் விரைவில் உயிர்வாழும் பிராணிகளால் நிரம்பி விடும் என நினைக்கவில்லை. பிரம்மா உலகின் நிலையை பார்த்தபோது கவலைப்பட்டார் மற்றும் எல்லாவற்றையும் எரிக்க அக்னியை அனுப்பினார். பகவான் சிவன் தலையிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு முறையான வழியை பரிந்துரைத்தார். அப்போதே பிரம்மா அதை செயல்படுத்த மரணத்தையும், மரண தெய்வத்தையும் உருவாக்கினார்.

ஆஞ்சநேயர் என்ன நற்பண்புகளை அடையாளப்படுத்துகிறார்?

ஆஞ்சநேயர் பக்தி, விசுவாசம், தைரியம், வலிமை, பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறார். இவர் உங்கள் சொந்த வாழ்க்கையில் நற்பண்புகளை உள்ளடக்கி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வழிகாட்டுவார்.

Quiz

பாண்டவர்களின் ஸ்வர்காரோஹண யாத்திரையில் இறுதி வரை யுதிஷ்டிரர் பின் சென்ற கால்நடை எது?

தேவதைகள் விஷ்ணுவிடம் சென்று ராவணனுடைய துஷ்டத்தனத்
தைச் சொல்லுதல், ருச்யச்ருங்க மாமுனிவர் மேதாவியும் அதர்வவே தங்களை நனகறிந்தவருமாயிருப்பவர். ஆகையால் அவர் அவ்வரசனுக்குப் புதல்வர் உண்டாவரென்று, வாக் களித்த பின்பு 'இவனுக்குப் பிள்ளை பிறக்கும் பொருட் டுச் செய்யவேண்டிய கருமம் யாது' என்று சற்று கேரம் தியானித்து மதியாளராகையால் அவ்வளவிலே தகுந்த உபாயத்தை நினைவு மூட்டிக்கொண்டு ராஜனைப் பார்த்து 'கான் உனக்குப் பிளளை யுண்டாகும் பொருட்டு சாஸ்த்ரங்களில் ஏற்பட்டதும் பிள்ளையைப் பிறப்பிக்க வல்லதும் அதர்வவேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரங் களைக் கொண்டு செய்யவேண்டியதுமான ஓர் யாகத் தை விதிப்படி செய்யப்போகின்றேன்' என்று சொல்லி னர். பின்பு அப்படியே பிள்ளை யைத் தரவல்ல அந்த யாகத்தை அவ்வரசனுக்குப் பிள்ளையுண்டாகும் பொருட் டுச் செய்யத் தொடங்கி மந்த்ரங்களிற் சொல்லியபடி அக்தியில் ஹோமம் செய்தனர். பிறகு தேவதைகளும் கந்தர்வர்களும் ஸித்தர்களும் நான்முகக்கடவுளும் மற் றும் மஹர்ஷிகளும் அந்த யாகத்தில் தங்கள் தங்கள் ஹவிர்ப்பாகம் வாங்கிக்கொள்வதற்காக ஒன்றாகக் கும் பல் கூடி வந்தனர்.
அங்ஙனம் வந்து சேர்ந்த தேவதைகள் யாவரும் அந்த யாகஸபையில் பிறர் காணாதபடி யிருந்து உலகத் தைப் படைக்கும் ப்ரஹ்மதேவனைப் பார்த்து இச்சிறந்த வார்த்தையை மொழிந்தனர். 'ஓ பகவானே! உமது அருள் பெற்று யாவராலும் தடுக்க முடியாத பராக்ரமங் கொண்ட ராவணனென்னும் ராக்ஷஸன எங்களை யனைவரையும் தொந்திரவு செய்து கொண்டிருக்கி எறனன். நாங்கள் அவனை அடக்க வல்லமை யற்றிருக் கின்றனம். முன்பு நீர் அவனிடம் - மிகுந்த ப்ரீதி கொண்டு எங்களால் எவ்விதத்திலும் சாவுண்டாகாமற் படி வரங்கொடுத்தீர். நீர் கொடுத்த வரத்தைப் பா ராட்டிக்கொண்டு நாங்களும் அவன் செய்யுஞ் செயல் களை யெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கின் றனம். அவ்வறிவுகேடன் மூன்று லோகங்களையும் நடுங்கச் செய்கின்றனன். உயர்ந்தவர்களாகிய திக்பாலர்களையும் பகைக்கின் றன்ன். இவர்களை அவர்களை யென்று சொல்லி யென்? தேவர்களுக்கெல்லாம் அரசாகிய மஹேந்திரனை யே பட்டத்தினின்றும் தொலைக்க விருப்புகின்றனன். அவன் நீர் கொடுத்த வரத்தினால் மதிமயங்கிக் கொழுத்து, எதிரிடக் கூடாத ரிஷிகளையும் யக்ஷர்களை யும் கந்தர்வர்களையும் ராகு முதலிய அஸுரர்களையும அந்தணர்களையும் அலக்ஷயஞ்செய்து வருத்துகின்ற னன்.
அவன் க்ரீடாபர்வதம் முதலிய இடங்களில் திரிந்து சொண்டிருக்கும்பொழுது சுடும்படி சூரியன் வெய்யிற் காயமாட்டான், அவன் பூந்தோட்டங்களில் விளையா டிக்கொண் டிருக்கையில் வேகமாக வீசில் மேலே புஷ் பங்கள் விழுமோ வென்று பயந்து காற்றும் வேகமாக வீசுகின்றதில்லை. எப்பொழுதும் கரையில் வீசுகின்ற அலை களை யுடைய ஸமுத்ரமும் அவனைக் கண்டால் கொஞ்ச மும் அசையாமலிருக்கின்றது. கர்ப்பங்கலங்கும்படி மிக வும் பயங்கரமாகத் தோன்றுகின்ற அந்த ராக்ஷஸனி டத்தில் எங்களுக்கும் பயம் அதிகமாக உண்டாயிருக் கின்றது. ஆகையால் அவனைக் கொல்ல வேண்டிய உபாயத்தை நீர் ஆலோசித்துச் செய்யவேண்டும்' என்று வேண்டினார்கள்.
இப்படி தேவர்களனைவராலும் வேண்டிக்கொள் ளப்பட்ட நான்முகனும் சற்றுநேரம் ஆலோசித்து உடனே ஸந்தோஷமாக 'துராத்மாவாகிய அந்த ராவணனைக் கொல்ல உபாயம் எனக்கு இங்ஙனம் தோற் றினது. அது யாதெனில், அவன் கந்தர்வர்களா லும் யக்ஷர்களலும் தேவர்களாலும் அஸுரர்களாலும் எனக்கு வதம் நேரிடக்கூடா தென்று வரங் கேட் டனன. நானும் அப்படியே யாகட்டு மென்று சொல் லிவிட்டனன். அவ்வரக்கன் அங்ஙனம் வரம் கேட்கும் போது மானிடர்களைப் பற்றிக் கேட்டால் தனக்கு அவமதியா யிருந்ததைப்பற்றி அவர்களால் தனக்கு வதம் நேரிடக் கூடாதென்று கேட்கவில்லை. யால் மானிடர்களைக் கொண்டே அவனைக் கொல்ல வேண்டும். இவனுக்கு வேறு ம்ருத்யு இல்லை' என்று மொழிந்தனன்.
ஆகை
இப்படி நான்முகன் உரைத்த இனிய அம்மொழி யைக் கேட்டுத் தேவதைகளும் மஹர்ஷிகளும் மிகுந்த ஸந்தோஷங் கொண்டனர். இங்ஙனமிருக்கும் ஸமயத் தில் எப்பொருள்களிலும் உள்ளும் புறமும ஒருங்க நெருங்கி வியாபித்திருக்குந் தன்மையனாகையால் இவை யெல்லா மறிந்த ஸாவேச்வரனாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு தாம் சிலரை ரக்ஷிக்குமபடியான காலம் வாய்த்ததே யென்று ஸந்தோஷத்தினால் திருமேனி யெங்கும் மிக்க ஒளி பெற்று ஆச்ரிதர்களைக் காக்குங் கருவிகளாகிய சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களை யேந்திக்கொண்டு பீதாம்பரம் விளங்கத் தான ஜகத்பதியாயினும் அப் பெருமையைப் பாராமல் அங்கே யெழுந்தருளி நான் முகக்கடவுளின் அருகே வந்து நின்றனன இப்படி யெழுந்தருளின ஸர்வேச்வரன நான்முகனுடன் கலந்து ஆச்ரிதரக்ஷணத்திற்குரிய செயல்களை ஊக்கத்துடன் நினைவிட்டுக்கொண்டிருக்க, தேவர்கள் அனைவரும் எழுந்து பணிந்து பலவகையாகப் புகழ்ந்து இங்ஙனம் மொழிந்தனர்.
ஓ மஹா விஷ்ணுவே!

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |