ஸந்யாஸ யோகம்.

अर्जुन उवाच
सन्यास कर्मणां कृषण पुनर्योगं च शंससि ।
यच्छेय एतयोरेकं तन्मे हि सुनिश्चितम् ॥ १॥

1. அர்ஜுனன்:- கிருஷ்ணா! கர்மங்களை விடவேண்டுமென் கிறீர். மறுபடியும் கர்மயோகத்தை அநுஷ்டிக்கவேண்டுமென்று உபதேசிக்கிறீர். இவ்விரண்டில் எது எனக்கு க்ஷேமகாம் அதை நிச்சயமாய் எனக்குச் சொல்லும்,

श्रीनगवानुवाच
सन्यासः कर्मयोगश्च निःश्रेयसकरावुभौ।
तयोस्तु कर्मसन्यासात्कर्मयोगो विशिष्यते ॥ २ ॥

2. பகவான் --கர்மங்களை விடுவதும் கர்மங்களைச் செய்வதும் இவ்விரண்டும் மேலான மோக்ஷத்திற்கு ஸா தனங்களே. ஆனால், அவ்விரண்டில் கர்மங்களை விடுவதைக் காட்டிலும் கர்மயோகமே உன் தற்கால நிலைமைக்கு மேலானது.

ज्ञेयः स नित्यसंन्यासी यो नद्वेष्टि न कांक्षति ।
निद्वो हि महाबाहो सुखं बन्धात्प्रमुच्यते ॥ ३॥

3. ஒன்றையும் கண்டு வெறுப்படையாமலும் விருப்பமடை யாமலும் சீதோஷ்ண ஸுகதுக்கங்களைத் தாண்டினவனுமே என் றும் கர்மங்களை விட்ட ஸந்யாஸியெனப்படுவான். இந்தக் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவது அவனுக்குக் கஷ்டமேயில்லை.

सांख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पंडिताः ।
एकमप्यास्थितः सम्यगुभयोविन्दते फलम् ॥ ४ ॥

4. ஆனால் ஸாங்க்யமென்றும் யோகமென்றும் வேறு பெயர் களையுடைய இவ்விரண்டு மார்க்கங்களையும் வெவ்வேறென்.று பூர்ண ஞானமில்லாத சிறுவனைப் போன்றவர்களே சொல்வார்கள். விவேகிகள் அப்படிச் சொல்லமாட்டார்கள். இவ்விரண்டில் ஏதா வது ஒன்றை நன்றாய் அனுஷ்டித்தாலும் இவ்விரண்டையும் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

यत्सांख्यः प्राप्यते स्थानं न तद्योगैरपि गयो ।
एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति ॥ ५॥

5. அதாவது, கர்மங்களை விட்ட ஞான யோகிகளால் எந்த மேலான பதவி அடையப்படுகிறதோ அது கர்மயோகத்தை அனுஷ்டிப்பவர்களாலும் அடையப்படுகிறது. ஆகையால், ஞான யோகமும் கர்மயோகமும் ஒன்றென்று அறிகிறவனே உண்மை யான ஞானமுடையவன். -

सन्यासस्तु महाबाहो दुःखमाप्तमयोगत ।
योगयुक्तो मुनिब्रह्म न चिरेणाधिगच्छति ॥ ६ ॥

6. கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்காமல் கர்ம ஸக்யாஸ மென்ற ஞானயோகத்தை அனுஷ்டிப்பது வெகு கஷ்டம். கர்ம, யோகத்தில் நிலைபெற்று ஆத்ம ஸ்வரூபத்தை த்யானஞ்செய்கிறவன் அதி சிக்கிரத்தில் ப்ரஹ்மஸ்வரூபத்தை அடைகிறான்.

योगयुत्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः ।
सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते ॥७॥

7. கர்மயோகத்தில் நிலைத்து, அந்தக்காணத்தைக் களங்க மறச் செய்து, மனதை அடக்கி, இந்திரியங்களை வசப்படுத்தி, ஸகல பிராணிகளும் தானேயென்று நிச்சயமான அனுபவமுடையவனா யிருப்பவன், எந்தக் கர்மங்களைச் செய்தாலும் அவைகளின் பயன் அவனை ஒட்டாது.

नैव किंचित्करोमीति युक्तो मन्येत तत्त्ववित् ।
पश्यञ्शृप्वन्स्पृशजिघन्नश्नन्गच्छन्स्वपञ्श्वसन् ॥ ८ ॥
प्रलपन्धिसृजन्गृह्णन्नन्मिपन्निमिषन्नपि ।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ॥ ९ ॥ 8, 9.

ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை பறித்து யோகத் தில் நிலைபெற்றவன், மற்றவர்களைப்போல் பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, நடப்பது, உண்பது, உறங்குவது, மூச்சு விடுவது, பேசுவது, கொடுப்பது, வாங்குவது, விழிப்பது, கண் மூடுவது முதலிய காரியங்களைச் செய்துகொண்டிருந்தாலும், இந்திரியங்கள் தத்தம் வஸ்துக்களைத் தேடி அனுபவிக்கின்றன. நான் செய்வது யாதொன்றுமில்லை யென்று எண்ணுவான்.

ब्रह्मण्याधाय कर्माणि संगं त्यक्त्वा करोति यः।
लिप्यते न स पापेन पद्मपत्रमिवांभसा ॥१०॥

10. தான் செய்யும் ஸகல கர்மங்களையும் ஈசுவரனிடத்தில் அர்ப்பணஞ்செய்து பற்றைவிட்டுச் செய்கிறவனை, அந்தக் கர்மங் களால் வரும் பாடம், தா மரையிலையில் ஒட்டாத தண்ணீரைப் போல் ஒட்டாது.

कायेन मनसा बुद्धथा केवलैरिन्द्रियैरपि । योगिनः कर्म कुर्वन्ति संग त्यक्त्वाऽऽत्मशुद्धये ॥ ११ ।।

11. தங்களுடைய அந்தக்காணம் பரிசு ததமாகும் பொருட்டு போ கிகள் பற்றைவிட்டு, தேஹத்தாலும் மனதாலும் புத்தியா லூர் கேவலம் இந்திரியங்களாலும் கர்மங்களைச் செய் கிறார்கள்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |