Aazhi Mazhai Kanna
ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்த....
Click here to know more..ஸுந்தரேஸ்வர பெருமாள் ஒரு பெரிய சேனையையே உருவாக்குகிறார்
அனிலாத்மஐ ஸ்துதி
ப்ரஸன்னமானஸம் முதா ஜிதேந்த்ரியம் சதுஷ்கரம் கதாதரம் க்....
Click here to know more..ஸ்ரீ ஸுதபுராணிகர் சௌநகாதி ருஷிகளை நோக்கிச் சொல்லுகிறார்: உறையூர் நகருக்கு அரசரான தர்மவர்மா என்பவர் பாகவதோத்தமரான தால்பிய மகாருஷியைப் பணிந்து, அனந்த திவ்விய சரித்திரத்தைச் சிரவணித்துப் பின்னும் தர்மவர்மா என்பவர் தால்பிய முனிவரைப் பார்த்து வினவியதாவது:- சுவாமி! பிராணிகள் அனை வரும் எந்த உபாயத்தினால் இவ்வுலகில் அளவற்ற செல்வத் தையும், சத்புத்திரரையும், ஆயுள் விருத்தியையும் பெற்று மகாசுகசாலிகளாய் இருப்பார்கள்? எவ்விதத்தினால் சகல பாபங்களும் நிவாரணமாகும்? திருமகள் கேள்வனான திருமாலிடத்தில் பக்தியுண்டாவது எங்ஙனம்? எவ்வித தர்மம் செய்வதனால் அக்கடவுள் சந்துஷ்டியடைந்து, மனிதர்களுக்குப் பக்தியையும் முக்தியையும் அளிக்கக் கிருபை கூறுவார்? மேலும், பாபமே ரூபமாயிருக்கிற இக் கலியுகத்தில் கேவலம் பஞ்சமகா பாதகர்களாயிருந்தபோ திலும் அவர்களது பாபங்களையெல்லாம் போக்கி, அவர் களை முக்தியடையச் செய்விக்கவல்ல உபாயம் யாது? இவைகளையெல்லாம் தமது சீஷனான தமது சீஷனான அடியேனுக்குத் தேவரீர் கருணை கூர்ந்து ஸவிஸ்தாரமாய்க் கூறியருள வேண்டும் என்று கேட்கவே, பிராம்மணோத்தமரான வியரும், தர்மவர்மாவை நோக்கி, ஓ! இராஜசிரேஷ்டரே! உமக்குப் பகவானுடைய திவ்ய சரித்திரங்களைக் கேட்க வேண்டுமென்கிற ஆசை அதிகமாயிருப்பதினால், அவை களைத் தெரிந்தவரை யான் உனக்கு வெகு சந்தோஷத் துடன் சொல்லுகின்றேன் கேளும்.
ஹரிச்சந்திரன் கிந்தமரை அவமதித்த பாவம் போக்கிக்கொண்டது.
முன் ஒருகாலத்தில் குருக்ஷேத்திரத்திரத்தில் சத்திய சந்தனாகிய ஹரிந்சந்திர மகாராஜன் அநேக ரிஷிகளின் முன்னிலையில் அகஸ்தியமாமுனிவரை நோக்கி, இதே விஷயத்தைக் கேட்க அகஸ்தியரும் அதனைச் சவிஸ்தார மாய்ச் சொல்லியருளினார். அதனை யான் இப்பொழுது நன்றாய் உமக்குப் புகலுகின்றேன்; கேட்பீராக:- முற் காலத்தில் அயோத்திமா நகரத்திற்கு அரசனாய் எங்கும் புகழ்பெற்று வாழ்ந்திருந்த ஹரிச்சந்திர மகாராஜன் அசுவ மேத யாகத்தைச் செய்யக் கருதி, மகாபுண்ணிய க்ஷேத்திர மாகிய குருக்ஷேத்திர மென்னுமிடத்திற்குச் சென்று, அங் கிருந்த சௌநகாதி முனீஸ்வரர்களைக்கிட்டி, மனக்களிப் யுடன் அவர்கள் அனைவரையும் நமஸ்கரித்து, மிக வணக்கத் துடன் நின்றான். அங்ஙனம் நின்ற அரசனை அவ்வுத்தம முனிவார்கள் பார்த்து, ஹே ஹரிபக்த சிரோன்மணி யான ஹரிச்சந்திர மகாராஜனே வருவாயாக; உனது நாட்டிலுள்ள பிரஜைகள் யாவரும் சுகமாயிருக்கிறார்களா? உனது பகைவர் எல்லோரும் உன்னால் ஐயிக்கப்பட்டு வரு கிறார்களா? தனதான்யாதி கோசங்களும் சேனைகளும் அபிவிருத்தியடைந்து வருகின்றனவா? பந்துக்களையும் நேசர்களையும் பரிபாலித்து வருவதோடு, குடிகளிடத்தில் ஆறிலொரு கடமைவாங்கி அவர்களைப் போஷித்து வருகி றாயா? ஏனெனில் யாவனொருவன் தனது குடிகளைப் பாறு காக்காமலிருக்கிறானோ அவன் ஓர் பிரம்ம கல்பம்வரையில் பலவித நாகானுபவங்களை அனுபவித்துக் கடைசியில் நீச யோனியில் பிறப்பான். அப்படி அல்லாமல் குடிகளை முறைப்படிப் பாதுகாத்துப் பிராமண பக்தி மேலிட்டிருப் பலனெவனோ அவன் பெரும் புகழையும் நீடியவாழ்வையும் அடைவான். மேலும் ேேயா பிராமண பக்தியுடையவனா யும்,பொறுமை, தவம், ஈகை, உறுதி, வீரம் முதலியவை களுக்கு இருப்பிடமாயும், நல்லோர்களால் கொண்டாடப் பட்டவனாயும் இருக்கிறாய்; உனக்கு யாது குறையிருக்கின் றது? என்றிவ்வாறு அவனைப் புகழ்ந்து கொண்டாடிய பின், அம் முனிவர்கள் எல்லோரும் அவனுக்குத் தருமத் தின்படி அதிதி பூசையியற்றி ஆசனமொன்றளிக்க, அரச னும் அதில் இருந்துகொண்டு அவர்களை நோக்கி, பக்தி யுடன் வணங்கி, அடிகளே! தபோமூர்த்திகளும் லோக பூற்றியருமான தேவரீரைத் தரிசித்தமாத்திரத்தில் நான் தனயனும், அருள்பெற்றவனும், பரமபத்திரனுமாயி னேன். தாங்களெல்லோரும் இவ்வுத்தம க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருப்பீரென்றே இங்கு வந்தேன்.அடியேன் விண்ணப்பமொன்றுண்டு. அதனைச் செவிசாய்த்து அதற் கிணங்குமாறு செய்தருளவேண்டும். ஓ விப்பிரோத்தமர் களே! கடுமையான குடும்ப பந்தங்களை எவ்வாறு கடப் பேன்? புத்தி முக்திகள் எவ்வாறு லபிக்கும்? சிரஞ்சீவி பதம் எப்படி லப்தமாகும்? குலவிருத்தியாவது எங்ஙனம்?
Please wait while the audio list loads..
Ganapathy
Shiva
Hanuman
Devi
Vishnu Sahasranama
Mahabharatam
Practical Wisdom
Yoga Vasishta
Vedas
Rituals
Rare Topics
Devi Mahatmyam
Glory of Venkatesha
Shani Mahatmya
Story of Sri Yantra
Rudram Explained
Atharva Sheersha
Sri Suktam
Kathopanishad
Ramayana
Mystique
Mantra Shastra
Bharat Matha
Bhagavatam
Astrology
Temples
Spiritual books
Purana Stories
Festivals
Sages and Saints