விஷமக்காரக் கண்ணன்

விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
அவன் நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்

கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான்

எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு
அவள் விக்கி விக்கி அழும்போது
இதுதான்டி முகாரி என்பான்
விஷமக்காரக் கண்ணன்

வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க‌ ஒண்ணாது

சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லிவிட்டால்
அவனை திருடன் என்று சொல்லிவிட்டால்
உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்

 

Vishamakara Kannan by OS Arun

 

19.8K
1.0K

Comments

c2nri
அருமையான இணையதளம் 👌 -சக்திவேல்

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

அறிவு செழிக்கும் இணையதளம் -சுவேதா முரளிதரன்

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

Read more comments

ராஜசூய யாகம் மற்றும் வாஜபேய​ யாகம்

ஒரு க்ஷத்திரியன் ராஜசூய யாகத்தைச் செய்து அரசராகிறார், மற்றும் ஒரு அரசர் வாஜபேய​ யாகத்தைச் செய்து சக்கரவர்த்தியாகிறார்.

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

Quiz

பாண்டவர்களின் ஸ்வர்காரோஹண யாத்திரையில் இறுதி வரை யுதிஷ்டிரர் பின் சென்ற கால்நடை எது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |