என்ன தவம் செய்தனை

Raagam - Kaapi,
Thalam - Aadi,
Composer - Papanasam Sivan,
Singer - Rajalakshmee Sanjay,
Music - Sanjay Chandrasekhar.

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றைழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை யசோதா
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கணணனை தாயே
என்ன தவம் செய்தனை யசோதா
சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதித்ததை
புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா

 

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies