ஆசை முகம் மறந்து போச்சே

ஆசை முகம் மறந்து போச்சே இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ண னழகு முழிதில்லை
நண்ணு முகவடிவு கானில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
ஒய்வு மொழிதலுமில் லாமல் அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் அந்த
மாயன் புகழினை யெப்போதும்
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு
பெண்க ளினத்திலிது போலே ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த
வைய முழுதுமில்லை தோழி
கண்ணன் முகமறந்து போனால் இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் இனி
வாழும் வழியென்னடி தோழி

 

Aasai Mugam Song of Bharathiyar by Uttara Unnikrishnan

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |