புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்

 

 

 

 

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |