இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியை
நெய் அபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
1. குளியல் 2. சந்தியா வந்தனம் - சூரியக் கடவுளிடம் பிரார்த்தனை. 3. ஜபம் - மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள். 4. வீட்டில் பூஜை/கோவிலுக்குச் செல்வது. 5. பூச்சிகள்/பறவைகளுக்கு சிறிது சமைத்த உணவை வீட்டிற்கு வெளியே வைத்திருப்பது. 6. குறைந்தது ஒருவருக்ககாவது உணவு வழங்குதல்.
சத்தியத்தின் வழியைப் பின்பற்றுபவர் மகத்துவத்தை அடைகிறார். பொய்யானது அழிவுக்கு வழிவகுக்கும், ஆனால் உண்மை மகிமையைக் கொண்டுவருகிறது. - மகாபாரத
தத்தாத்ரேயரின் அருள் பெற மந்திரம்
ௐ ஐம்ʼ க்ரோம்ʼ க்லீம்ʼ க்லூம்ʼ ஹ்ராம்ʼ ஹ்ரீம்ʼ ஹ்ரூம்ʼ ஸௌ....
Click here to know more..மனதை படிப்பது போன்ற அற்புத சக்திகளை அடைய கணேச மந்திரம்
ௐ ஶ்ரீம்ʼ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ க³ணேஶாய ப்³ரஹ்மரூபாய சாரவே ஸர்....
Click here to know more..விக்னராஜ ஸ்தோத்திரம்
கபில உவாச - நமஸ்தே விக்னராஜாய பக்தானாம் விக்னஹாரிணே। அப....
Click here to know more..Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Festivals
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta