கர்ப்ப காலத்தில் நலனுக்கான வழிமுறைகல்

Pregnancy

தர்ம சாஸ்திரம் சுகமான கர்ப்ப காலத்திற்காக மற்றும் தாய் சேய் நலத்திற்கான பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது.

 

Click below to listen to Garbha Rakshambika Stotram 

 

Garbha Rakshambika Stotram

 

மனைவிக்காக

  • மேடு பள்ளமான சாலை, சுற்றுலா, அதிகமாகச் சுவாசிக்கும் நிலைகள், பதற்றமான நிலைகள், படகு சவாரிகள், அதிக பலமான பொருட்களைத் தூக்குதல், வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்தல் இவைகளை தவிர்க்க வேண்டும்.
  • துயரம், மன அழுத்தம், துன்பம், இவைகளை விலக்கவேண்டும்.
  • அதிகமான வேலையை விலக்கவேண்டும்.
  • பகலில் உறங்காமல் இருக்க வேண்டும்.
  • இரவில் உறங்க வேண்டும்.
  • பும்சவனத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளாத இருக்க வேண்டும்.
  • கடுமையான மற்றும் வலுவான மாத்திரைகளை மற்றும் மசாலாக்களை தவிர்க்கவேண்டும்.
  • ஐந்து மாதத்திற்குப் பிறகு மதச் சடங்குகளில் பங்கேற்காமல் இருக்க வேண்டும்.
  • அந்திமாலைப்பொழுதில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
  • எறும்பு புற்றுகளின் அருகிலும் சாம்பல் மேடு, எலும்பு, மண்டையோடு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும்.
  • ஆழமான நீர்நிலையில் குளிக்காமல் இருக்க வேண்டும்.
  • காளியான அறையில் தனித்திருக்க கூடாது.
  • தரையில் ஆணி, சாம்பல் மற்றும் கரி கொண்டு வரையாமல் இருக்க வேண்டும்.
  • கொட்டாவி விடாமல் மற்றும் உடலை வளைக்காமல் இருக்க வேண்டும்.
  • தலைமுடியைக் கட்டி வைத்து இருக்க வேண்டும்.
  • சுத்தமும் சுகாதாரமும் காக்க வேண்டும்.
  • யாரிடமும் சண்டை போடாமலும், அதிகாரம் செய்யாமலும், அமங்கல வார்த்தைகளை உச்சரிக்காமலும் இருக்க வேண்டும்.
  • கால் பாதம் உலர்ந்து இருக்க வேண்டும்.
  • பெரியவர்களுக்கு உதவியும், தானதர்மம் செய்தும், கணவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டு இருக்க வேண்டும்.
  • அனைத்து பொழுதும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்.

 

கணவருக்காக

  • மனைவியின் அனைத்து தேவையான ஆசையையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • மூன்று மாதத்திற்குப் பிறகு நீண்ட தூரம் செல்வது, கடலில் குளிப்பது மற்றும் முடி திருத்துதலை தவிர்க்கவேண்டும்.
  • பிணங்களை அடக்கம் செய்வதற்குத் தூக்கிச் செல்வதை தவிர்க்கவேண்டும்.
  • ஏழாம் மாதத்திற்குப் பிறகு யாத்திரை செல்வதை தவிர்க்கவேண்டும்.

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |