இராமரின் பால்யத்தில் ஹனுமார்

Quiz

இவர்களில் யார் ஹனுமானின் பிறப்புடன் சம்பந்தமற்றவர்?

பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் இடையே அன்பு அதிகம். இருவரின் தத்துவமும் ஒன்றே. பெருமாள் ஸத்துவஸ்வரூபி. ஆகையால் அவர் நிறம் வெண்மையாக இருக்க வேண்டும். சிவபெருமான் தாமஸ்ஸ்வரூபி. ஆகையால் அவர் நிறம் கருமையாக இ....

பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் இடையே அன்பு அதிகம்.
இருவரின் தத்துவமும் ஒன்றே.
பெருமாள் ஸத்துவஸ்வரூபி.
ஆகையால் அவர் நிறம் வெண்மையாக இருக்க வேண்டும்.
சிவபெருமான் தாமஸ்ஸ்வரூபி.
ஆகையால் அவர் நிறம் கருமையாக இருக்க வேண்டும்.
ஆனால் கற்பூரத்தை போன்ற வெண்மையான நிறம் சிவனுக்கு.
அவர்கள் இருவருக்கும் இடையே அன்பின் காரணமாக அவர்கள் தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டு விட்டனர்.
நாம் நினைப்பது போல் அல்லாமல் சிவனைப் பூஜித்தால் விஷ்ணுவே பூஜிப்பது போலவும் விஷ்ணுவைப் பூஜித்தால்
சிவனை பூஜிப்பது போலாகும்.
பெருமாள் எப்பொழுதெல்லாம் அவதாரம் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் சிவபெருமானும்
ஏதாவது ஒரு முறையில் வந்து அவருக்கு உதவி செய்வார்.
அவ்வாறு வந்தது தான் இராமாவதாரத்தில் ஹனுமான் ஆஞ்சநேயர்.
இராமர் குழந்தையாக இருக்கும் போது சிவபெருமான் பல்வேறு வேடங்களில் சென்று இராமரை தரிசிப்பதற்கு முயற்சி செய்தார்.
சில சமயங்களில் சாதுவின் வேடத்தில், சில சமயங்களில் இராமருடைய குணங்களை
பாடிக்கொண்டும் மற்றுமொருமுறை நாடோடியாக ஒரு குரங்கை கூட்டிக் கொண்டு சென்றார்.
அப்பொழுது அவ்வூரில் உள்ள அனைத்து குழந்தைகளும் வந்து சேர்ந்தனர்.
நாடோடியின் நன்றாக உடுக்கை வாசிப்பான்.
குரங்கு நன்றாக ஆடும்.
அப்போது இராமர் சிறு குழந்தை.
அவருக்கு அந்த குரங்கை மிகவும் பிடித்தது.
தனக்கு அந்த குரங்கு வேண்டும் என்று ராமர் கேட்டார்.
அதற்கு தசரதன் கூறினார் எவ்வளவு விலை வேண்டுமானாலும் தருகிறேன் அக்குரங்கை இராமருக்கு கொடுத்துவிடு என்று.
சிவபெருமானின் விருப்பமும் அதுவே அவர் அக்குரங்கின் உடம்பில் பிரவேம் செய்தார்.
இதுதான் ஹனுமன்.
இராமனுக்கு அனுமன் மீது மிகவும் பாசம் அதிகம்.
குழந்தை இராமர் அந்த குரங்குடன் விளையாடுவார்.
ஹனுமனும் இராமர் என்ன சொன்னாலும் செய்வார்.
விஸ்வாமித்திரரின் யாக பூஜையை காப்பதற்காக செல்லும் முன் ஹனுமானை தனியாக கூப்பிட்டு கூறினார் .
அவர் எதற்காக அவதாரமெடுத்தார் அதற்கான வேலைத் தொடங்கிவிட்டது என்றும் இலங்கையின் அதிபதி இராவணனின்
கொடுமை அதிகமாகி விட்டது. ஆகையால் அவர் கையால் இராவணனின் உயிர் பிரிந்து பூமியில் மீண்டும் தர்மத்தின் ஆட்சி
வரவேண்டும். அதனால் ஹனுமன் ரிஷ்யமூகமலைக்கு சென்று சுக்ரீவனுடன் நட்பு கொண்டு அவருக்காக காத்திரு என்றார்.
இராமர் தண்டகாரண்யம் வரும்போது வந்து அவரை சந்தித்து இராவண வதத்திற்கு உதவி செய்வாயாக என்றார்.
இராமரை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருந்தாலும் ராமரின் ஆணைக் காகவும் உலக நன்மைக்காகவும் ஹனுமன்
இதை ஏற்றுக்கொண்டார்.

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |