ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

ஶ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஶ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஶ்ரீசக்ர)
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் எனதகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி(ஶ்ரீசக்ர)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னோர் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஶ்ரீசக்ர)
துன்ப்ப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஶ்ரீசக்ர)

 

32.3K

Comments

ii7ij
பாடகர் மிகவும் அருமையாக பாடுகிறாள்! -ஐயாசாமி, காரைக்குடி

Read more comments

முனிவர் வியாஸர் ஏன் வேதவியாஸர் என்று அழைக்கப்படுகிறார்?

ஏனென்றால் அவர் வேதத்தின் முழு தொகுப்பினை நான்காக முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம் என்று நான்கு பாகமாகப் பிரித்தார்.

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

Quiz

கீழ்க்கண்டவற்றில் எது தசமகாவித்யாக்களில் ஒன்று இல்லை?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |