வேதங்களைப்பற்றி தக்ஷிணாமூர்த்தி பெருமாள் சொல்கிறார்

0:00 0:00

வேதங்களைப்பற்றி தக்ஷிணாமூர்த்தி பெருமாள் சொல்கிறார்

சிருஷ்டியோட ஆரம்பத்துல ஓங்காரத்துல இருந்து வேதங்கள் எல்லாம் உருவாச்சு. பரம்பரை பரம்பரையா வேதங்களோட அத்யயனம் நடந்துண்டு இருந்தது. ஒருக்கா நைமிசாரண்யத்துல ரிஷி முனிகள் கவலைப்பட்டா. எல்லாரும் வேதங்கள் எல்லாம் அத்யயனம் பண்ணிருக்கோம், மந்திரங்கள் எல்லாம் சொல்லக்கூடிய சாமர்த்தியம் நமக்கு இருக்கு, ஆனா வேதங்களோட அர்த்தம் நமக்கு தெரியாது. வேதார்த்தத்தை சொல்லித்தர அளவுக்கு ஞானம் இருக்கக்கூடிய ஒரு குரு நமக்கு கிடைக்கல.

அந்த சமயத்துல ஹரபக்தன்னு ஒரு மகரிஷி அங்க வந்து சேர்ந்தார். அந்த ரிஷிகள் எல்லாம் சேர்ந்து அவரிடம் கேட்டா:

"வேதார்த்தத்தை தெரிஞ்சுக்குறதுக்கு ஒரு வழி சொல்லுங்கோ சுவாமி"

அவர் சொன்னார், "தபஸுனால எந்த காரியமும் சாதிக்கலாம். எந்த இடத்துல இருந்து தபஸ் பண்றோம் அத பொறுத்து பலத்துலயும் வித்தியாசம் இருக்கு. திவ்ய சேத்திரங்கள் விசேஷமான பலத்தை கொடுக்கும். அதுலயும் ஹாலாஸ்யமாகிய மதுரையில தபஸ் பண்ணா அத்தியுத்தமமான பலன் கிடைக்கும். அதிகமாகிய புண்ணியம், வித்யா சித்தி, யோக சித்தி, தபஸ் சித்தி, சர்வ சித்தி இதெல்லாம் ஹாலாஸ்யத்துல தபஸ் பண்ணா கிடைக்கும். மதுரைக்கு இன்னொரு பேரு இருக்கு, வித்யாபுரி. தட்சிணாமூர்த்தியோட அருளிருக்குற இடம் மதுரை. மதுரையில தட்சிண பாகத்துல இருக்கார் தட்சிணாமூர்த்தி. அவர தபஸ் பண்ணா உடனே வேதார்த்த போதம் உண்டாகும்."

முனிகள் எல்லாம் ஹரபக்தனோட சேர்ந்து மதுரையில வந்து சேர்ந்தா. பொற்றாமரை குளத்துல ஸ்நானம் பண்ணி சுந்தரேஸ்வர பெருமானையும் மீனாட்சி அம்பாளையும் வணங்கி தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு வந்தா. புஸ்தகம், ஞான முத்திரை, அமிர்தகும்பம், அட்சமாலை இதெல்லாம் தரித்துக்கொண்டு வட மூலத்துல இருக்கக்கூடிய திருநேத்திரதாரியாகிய தட்சிணாமூர்த்தியை வேத மந்திரங்களால ஸ்துதிக்க ஆரம்பிச்சா.

கண்வன் தொடங்கி மகரிஷிமார் எல்லாரும் இருந்த அந்த கூட்டத்துல தேஜஸ்வியாகிய தட்சிணாமூர்த்தி ஒரு 16 வயசு பிரம்மச்சாரியா அவா முன்னாடி பிரத்யக்ஷமானார். எல்லாரும் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணா. சுவாமி உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேட்டார். எங்களுக்கு எல்லாம் வேதங்களோட அர்த்தம் தெரியணும். சுவாமி எல்லாரையும் சுந்தரேஸ்வர பெருமாள் மூல லிங்கத்துக்கு பக்கம் அழைச்சிண்டு போய் பேச ஆரம்பிச்சார்.

"வேதம் ஒன்னு தான், அதோட அர்த்தமும் ஒன்னு தான். மாயையினால தான் வேதம் அனந்த சாக்கைகளா வேற வேறயா தெரியறது. ஸ்ரீ பரமேஸ்வரர் தான் வேதத்தை சிருஷ்டி பண்ணார். அந்த வேதத்தை பரமேஸ்வரர் தான் பிரம்மா கிட்ட ஒப்படைச்சார். சொர்க்கம், பூமி, பாதாளம் இந்த மூணு லோகங்கள்லயும் பிரம்மா கிட்ட இருந்து தான் வேதம் வந்து சேர்ந்தது. வேதத்துல என்ன சொல்றான்னா இந்த மகாலிங்கத்துக்கு, இதுக்கு ஆதியும் மத்தியமும் அந்தமும் கிடையாது. இது தான் பரப்பிரம்மம். இதோட கீழ் பாகம் ஆத்ம தத்துவம், நடு பாகம் வித்யா தத்துவம், மேல் பாகம் சிவ தத்துவம். சர்வ தத்துவம் இந்த லிங்கத்துல இருந்து தான் உற்பவமாச்சு. ஆத்ம தத்துவத்துல இருந்து அகாரம், வித்யா தத்துவத்துல இருந்து உகாரம், சிவ தத்துவத்துல இருந்து மகாரம்... ஆ, உ, ம... இது மூணும் சேர்ந்து ஓங்காரம் உருவாச்சு. அகாரம், உகாரம், மகாரம் என்கிறது அட்சரங்கள். அது காதுல கேட்கணும், சத்தம் வேணும், நாதம் வேணும். நாதம் உருவானது சர்வ தத்துவத்துல இருந்து. சர்வ தத்துவம் சிவலிங்கத்தோட அம்சம். ஆத்ம தத்துவத்துக்கு சுவாமி பிரம்மா, வித்யா தத்துவத்துக்கு சுவாமி விஷ்ணு, சிவ தத்துவத்துக்கு சுவாமி ருத்ரன். சிவபெருமான் ஆக்ஞையினால தான் இந்த சமஸ்த பிரம்மாண்டமும் உருவாச்சு. அப்புறம் காயத்ரி மாதா உருவானா. காயத்ரியோட விஸ்தாரம் தான் வேதங்கள். சைவாகமங்கள், மூல மந்திரங்கள் இதெல்லாம் சிவபெருமானோட ஈசானன் என்கிற மேல இருக்கக்கூடிய சிரசுல இருந்து உருவாச்சு. ரிக்வேதத்தோட 21 விதமான சாக்கைகள் சிவபெருமானோட தத்புருஷன் என்கிற சிரசுல இருந்து உருவாச்சு. அகோரன் என்கிற சிரசுல இருந்து எஜூர்வேதத்தோட 101 சாக்கைகள் உருவாச்சு. 1000 சாக்கைகள் இருக்கக்கூடிய சாமவேதம் சிவபெருமானோட வாமதேவன் என்கிற சிரசுல இருந்து உருவாச்சு. அதர்வ வேதத்தோட ஒன்பது சாக்கைகள் சத்யோஜாதன் என்கிற சிரசுல இருந்து உருவாச்சு. இந்த வேதங்களை ஆதாரமாக்கி தான் நாலு வர்ணங்கள், நாலு ஆசிரமங்கள், தர்மங்கள், யாகங்கள் எல்லாம் உண்டாச்சு. வேதத்தையே கர்ம காண்டம், ஞான காண்டம் அப்படின்னு ரெண்டா பிரிச்சிருக்கா. சிவலிங்க பூஜை தான் கர்ம காண்டம். சிவனோட சச்சிதானந்த ரூபத்தோட வர்ணனை தான் ஞான காண்டம். எல்லா தேவதைகளும் பரமசிவனோடயே அம்சம் தான். எந்த யக்ஞத்துல எந்த ஆகுதி கொடுத்தாலும் அதெல்லாம் பரமசிவன் கிட்ட தான் போய் சேரும். எந்த யக்ஞம் பண்ணாலும் அஸ்வமேதமா இருக்கட்டும், வாஜபேயமா இருக்கட்டும், அதிராத்திரமா இருக்கட்டும், எல்லாம் அந்த சுந்தரேஸ்வர பெருமானாகிய பரமசிவனோடயே வேற வேற விதமான பூஜைகள் மட்டும்தான். தத்துவமஸி முதலான வேதாந்த வாக்கியங்கள் எல்லாம் அவரப் பத்தியே தான் சொல்றது. சுந்தரேஸ்வர பெருமானோட பூஜை பண்ணா மனசு சுத்தமாகும், ஞானம் தானாகவே வரும், வேதார்த்தம் தானாகவே தெரிய வரும். ருத்ராட்ச தாரணம், பஸ்ம லேபனம், குரு சுஸ்ருஷை இதெல்லாம் பண்ணி பக்தியோட சிவலிங்கத்தை பூஜிக்கணும். சிவங்கப்யை நினைச்சுக்கணும். ஞானம் தானாகவே வரும். இதுக்கு மேல ஒரு தர்மம் கிடையாது. இது தான் வேதம் சொல்றது. எல்லாம் சிவனையே தான் தெரிய வரும். எல்லா சுகங்களும் கிடைக்கும், மோட்சமும் கிடைக்கும்."

இப்படிச் சொல்லி தட்சிணாமூர்த்தி எல்லாரையும் அனுக்கிரகம் பண்ணி மறைந்தார். எல்லாருக்கும் உடனே வேதார்த்தமும் தெரிய வந்தது.

தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies