அரசனின் கிரீடத்துக்கு நல்ல ரத்தினங்களை தேடுதல்

0:00 0:00

அரசனின் கிரீடத்துக்கு நல்ல ரத்தினங்களை தேடுதல்

வீரபாண்டிய அரசன் ஒன்றுக்கு மேல திருமணம் பண்ணார். ஆனா அந்த ராணிகளுக்கு யாருக்குமே குழந்தை பிறக்கல. ராஜ வம்சத்துக்கு வெளியில அரசனுக்கு குழந்தைகள் பிறந்தது. ஆனா அவா எல்லாரும் கொடுமை பட்டவாளும், கெட்டவாளுமா தெரிய வந்தது.

வீரபாண்டிய அரசன் சுந்தரேஸ்வர பெருமானையும் மீனாட்சி அம்பாளையும் நெறைய பூஜை பண்ணார். நெறைய சோமவார விரதம் அனுஷ்டிச்சார். அப்படி கடைசில அரசனுக்கு ராஜ வம்சத்துலயே ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அஞ்சு வயசான போது ஒருக்கா வேட்டைக்கு போன அரசனோட ஒரு புலி கையால உயிர் போச்சு.

இந்த விஷயம் தெரிய வந்த உடனே அந்த கொடுமைக்காராகிய பசங்கள் அரண்மனைக்கு வந்து பொக்கிஷம் எல்லாம் கொள்ளை அடிச்சா. மந்திரிமார் எல்லாரும் சேர்ந்து இளவரசனை மட்டும் பாதுகாப்பா இன்னொரு இடத்துக்கு மாத்தி விட்டா.

காட்டுக்கு போன சைன்யம் திருப்பி வந்ததும் எல்லாரும் சேர்ந்து இளவரசனுக்கு ராஜ்யாபிஷேகம் உடன் பண்ணனும்னு முடிவு பண்ணா. அதுக்கு புதுசா நவரத்தினத்தினால கிரீடம் உருவாக்கணும். பொக்கிஷத்துல போய் பார்த்தா ஒரு ரத்தினம் கூட இல்ல. சொர்ணம் எப்படியாவது கிடைக்கும், ஆனா நல்ல ரத்தினம் எங்க கிடைக்கும்?

அரசனோட கிரீடத்துல இருக்கக் கூடிய ரத்தினங்களுக்கு ஒரு தோஷம் இருக்கக் கூடாது. இல்லைனா அரசனுக்கே அது தோஷம் பண்ணும். எல்லாரும் இளவரசனை சுந்தரேஸ்வர பெருமான் சந்நிதிக்கு அழைச்சுண்டு போனா. சுந்தரேஸ்வர பெருமானை நமஸ்காரம் பண்ணி நன்னா வேண்டிண்டா.

சந்நிதியில இருந்து வெளியில வந்ததும் ஒரு ரத்தின வியாபாரி அவா முன்னாடி வந்தான். "என்ன எல்லாரும் ரொம்ப கவலையா இருக்கேள்?"னு கேட்டான் வியாபாரி. அவா விஷயத்தைச் சொன்னா. "கவலையே வேண்டாம், அரசனோட கிரீடத்துல வைக்கக் கூடிய யோக்கியதை இருக்கிற தோஷம் இல்லாத நல்ல நல்ல ரத்தினங்கள் என்கிட்ட இருக்கு" அப்படின்னு அந்த வியாபாரி சொன்னான்.

தன்னுடைய ரத்தினப் பையில இருந்து ஒவ்வொரு ரத்தினமா வெளியில எடுத்து காமிச்சு அந்த வியாபாரி பேச ஆரம்பிச்சான்.

"முன்னாடி வலன்னு ஒரு அசுரன் இருந்தானாம். இந்திரன் கையால வலனோட உயிர் போச்சு. இந்த வலன் ஒரு சமயத்துல மூணு லோகங்களுக்கும் அதிபதியா இருந்தானாம். அந்த வலனோட எலும்பு தான் வைரம். பல்கள் முத்துக்கள், ரத்தம் மாணிக்கம், ரோமங்கள் வைடூரியம், கண்கள் நீலம், மாம்சம் பவளம், பித்தம் மரகதம், கபம் புஷ்பராகம், மேதஸ்ஸு கோமேதகம். எல்லாரும் இந்த வலாசுரனோட கதை கேட்க விருப்பப்பட்டா."

"வலாசுரன் சின்ன வயசுல இருந்தே பெரிய சிவபக்தன். வலாசுரனுக்கு குரு சுக்கிராச்சாரியார். அசுரா எல்லாரும் கெட்டவா நினைக்காதீங்கோ. அசுராள்ள சில நல்ல குணங்களும் இருக்கும். ராவணனை மாறி சிவபக்தன் யார் இருக்கா? ஆனா அசுராள்ள அகங்காரம், கொடுமை, பொறாமை இதெல்லாம் இருக்கும். இதெல்லாம் அவா வீழ்ச்சிக்கு காரணமாகும்."

"வலாசுரன் நெறைய தபஸ் பண்ணான். வலாசுரனை புற்று வந்து மூடித்தது. அது மேல கொடியெல்லாம் வந்து பட்சிகள் கூட கூடு கட்டித்து. கடைசியில சிவபெருமான் பிரத்யட்சமானார். உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்டார். யுத்தத்துல யாருமே என்னை அழிக்கக் கூடாது. என்னோட உயிர் போன அப்புறம் என்னோட சரீரத்துல இருக்கக் கூடிய எலும்பு, சதை முதலாகிய ஏழு தாதுக்கள் ரத்தினங்களா மாறணும்னு கேட்டான். சிவபெருமான் அந்த வரங்களைக் கொடுத்தார். அதுக்கப்புறம் வலாசுரன் தேவர்கள் எல்லாரையும் யுத்தத்துல தோக்கடிக்க ஆரம்பிச்சான்."

"தேவா சொன்னா, "உன்னோட பராக்கிரமம் பார்த்து எங்களுக்கு அற்புதமா இருக்கு. என்ன வரம் வேணும்னா எங்கள்ட்ட இருந்து கேட்டுக்கோ"னு. வலாசுரன் சொன்னான், "உங்களுக்கு யுத்தம் பண்ண சாமர்த்தியம் இருக்கிறதா தெரியல, வரம் கொடுக்கவும் சாமர்த்தியம் இருக்கிறதா தெரியல. நான் கொடுக்கிறேன் வரம்"னு. தேவா, "சரி, அப்படீன்னா எக்ஞத்துல உன்னையே பலி கொடுக்க ஒத்துக்கோ"னு சொன்னா. வலாசுரன் சொன்னான், "இந்த சரீரம் நித்யம் கிடையாது. அதனால எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்ல. ஆனா எக்ஞத்துல பலி கொடுக்கப்பட்டா எனக்கு ரொம்ப புண்ணியமும் கீர்த்தியும் கிடைக்கப் போறது"னு. வலாசுரனை எக்ஞத்துல பலி கொடுக்கும் போது சாக்ஷாத் பரமேஸ்வரரே பிரத்யட்சமாகி அனுக்கிரகம் பண்ணார். புஷ்ப விருஷ்டி நடந்தது. அந்த வலாசுரனோட உடம்புல இருந்து தான் சொன்ன மாதிரி நவரத்தினங்கள் உருவாச்சு."

தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies