ஒரு காட்டினருகே உள்ள ஊரில் கைலாசம் என்ற வைத்தியர் இருந்தார். அவர் தம் மிடம் வரும் நோயாளிகளுக்கு சிகித்சை அளித்து விட்டு அவர்கள் கொடுக்கும் பணத்தை பணத்தை வாங்கி வந்தார். எழை எளியவர்களுக்கு இலவசமாகவே சிகித்சை அளித்து மருந்து கொடுத்து வந்தார்.

அவரது மனைவி பார்வதிக்கோ அவரது இந்தப் போக்கு சற்றும் பிடிக்கவில்லை. தன் கணவன் கை நிறையச் சம்பாதித்து நகை, பட்டுப் புடவை என்றெல்லாம் வாங்கி வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமென அவள் ஆசைப்பட்டாள். ஆனால் அது அவளுக்குப் பகல் போலத்தான் ஆயிற்று.

ஒரு நாளிரவு பதினோறு மணி. கைலாசமும் பார்வதியும் தூங்கிக் கொண்டிருக்கையில் யாரோ அவர் களது வீட்டுக் கதவைத் தட்டினார் கள். பார்வதி இதென்ன தொல்லை என்று முணு முணுத்தவாறே கதவைத்திறக்கச் சென்றாள். அவள் பின்னாலேயே கைலாசமும் சென் றார். பார்வதி கதவைத் திறந்ததும் அங்கு ஒரு ராட்சஸன் நிற்பதைக் கண்டு பயந்து அலறினாள். கைலாசம் அவளது பயத்தைப் போக்கும் போதே ராட்சஸன் வீட்டிற்குள் நுழைந்து பொத்தென விழுந்தான். அவன் எனக்கு கை கால் குடைச்சல். உடம்பெல்லாம் எரிச்சல் நாவறட்சி. நீங்கள் நல்ல வைத்தியர் என்று கேள்விப் பட்டு வந்தேன் என்றான். கைலாசமும் நிதானமாய் அவனது நாடியைப் பிடித்துப் பார்த்து விட்டு நீ நோய் முற்றியபின் இப்போது என்னிடம் வந்திருக்கிறாய். பரவாயில்லை. ஒரு மாதம் தினமும் வந்து நான் கொடுக்கும் மருந்தை நீ உட் கொண்டால் உனது இந்த அமர மேக வியாதி மறைந்து நீ குணமடை வாய் என்று கூறி சில மாத்திரை களைக் கொடுத்து விழுங்கச் சொல்லி ஒரு கஷாயமும் கொடுத் தார். அவனும் அதைப் பருகிவிட்டு மறுநாள் நள்ளிரவு வருவதாகக் கூறி எழுந்து சென்றான்.

ராட்சஸன் போனதும் பார்வதி அவன் தான் ராட்சஸனாயிற்றே. நிறையப் பணம் சேர்த்து வைத் திருப்பானே. வைத்தியம் பார்க்க ஐயாயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்காமல் இப்படி அசடாக இருக்கிறீர்களே என்று கடித்து கொண்டாள். கைலாசமோ நோயாளிக்கு சிகித்சை அளிப்பது என் கடமை.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |