
சூதர் சொல்றார். பிரம்மா முடிகளுக்கு ஸ்ரவணத்தினாலும் கீர்த்தனத்தினாலும் மனனத்தினாலும் சிவபெருமான்ல அடையுற முறைகள சொல்லிக்கொடுத்தார்.
ரிஷிகள் சூதர்கிட்ட கேட்டாங்க. இது மூணும் செய்ய முடியாதவ, ஸ்ரவணமும் மனனமும் கீர்த்தனமும் செய்ய முடியாதவ என்ன பண்ணனும்?
சூதர் சொன்னார். ஸ்ரவனாதி த்ரஜே அசக்த: லிங்கம் வேரம் ச ஷங்கரம் சம்ஸ்தாப்ய நித்யமப்யார்ச்ய தரேத் சம்சார சாகரம்.
இவை மூன்றையும் செய்ய முடியாதவன் சிவபெருமானை லிங்கத்திலேயோ விக்ரகத்திலேயோ பிரதிஸ்தாபனம் செய்து அவருக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் உபசாரங்களும் செய்து அவரை அடையலாம்.
ஜலம், கந்தம், புஷ்பமாலை, தூபம், தீபம், நைவேத்யம், சத்ரம், சாமரம், த்வஜம் இவைகளை எல்லாம் அர்ப்பணம் செய்யலாம்.
இப்படி செய்கிறவர்களுக்கும் சிவப்பத பிராப்தி கிடைக்கும்.
முனிகள் அடுத்த கேள்விய கேக்குறாங்க. மற்ற எல்லாரையும் பிரதிம ஸ்வரூபமாதான் பூஜிக்கிறாங்க. ஆனா சிவபெருமான லிங்கத்திலோ பிரதிமையிலோ பூஜிக்கலாம் அப்படின்னு சொல்றாங்க. அது எப்படி? எங்களுக்கு இதுக்கான காரணம் சொல்லுங்க.
சூதர் சொல்றார். சிவைகோ பிரம்ம ரூபத்வான் நிஷ்கலப் பரிகீர்த்தித: ரூபித்வாத் சகலஸ்தத்வத் தஸ்மாத் சகல நிஷ்கல: நிஷ்கலத்வான் நிராகாரம் லிங்கம் தஸ்ய சமாகதம் சகலத்வாத் ததா வேரம் சாகாரம் தஸ்ய சங்கதம்.
சிவபெருமான் ஒருவர்தான் பரப்பிரம்ம ஸ்வரூபம். மற்ற தேவதைகளுக்கெல்லாம் ரூபமும் ஆகாரமும் உண்டு. சிவபெருமானுக்கு ஆகாரம் இல்லாததுனால அவர் நிர்குணர்.
பரப்பிரம்மம் என்கிற காரணத்தினால் அவர் நிராகாரம். ஆனா எல்லா வஸ்துக்களுக்குள்ளயும் இருக்கிறதுனால அவர் சாகாரம். சிவம் சகல நிஷ்கல:
அவர்தான் நிராகாரம் அவரேதான் சாகாரம்.
சாகாரமா இருக்குறதுனால அவர விக்ரகத்துல பூஜை பண்ணலாம். நிராகாரமா இருக்குறதுனால அவர லிங்கத்துலயும் பூஜை பண்ணலாம்.
அப்பரம்ம தத்த்வாதன்னயேஷாம் நிஷ்கலத்வம் நஹி க்வசித் தஸ்மாத்தே நிஷ்கலே லிங்கே நாராதயந்தே சுரேஸ்வர:
பரம்பொருள் என்றால் சிவபெருமான் மட்டும்தான். அவர் மட்டும்தான் நிர்குண பரப்பிரம்மா ஸ்வரூபம். அதனால அவர மட்டும்தான் லிங்கமாக பூஜிக்கிறாங்க. மற்ற தேவர்களை விக்ரகமாகத்தான் பூஜிக்கிறாங்க.
ஜீவத்வம் சங்கரான்னயேஷாம் பிரம்மத்வம் சங்கரஸ்ய ச வேதாந்த சார சம்சித்தம்.
வேதாந்தமும் இததான் சித்தி பண்றது. சிவபெருமான தவிர மற்ற தேவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஜீவன்னா என்ன? அவங்களுக்கு ஒரு ஆதியும் அந்தமும் உண்டு.
ஒரு யுககாலம், ஒரு மன்வந்தர காலம் இல்லனா ஒரு கல்ப காலம். சிவபெருமானுக்கு ஆதியும் அந்தமும் கிடையாது. அதனாலதான் அவர் பரம்பொருள். அவர்தான் பரமாத்மா.
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta