ப்ரம்மாவுக்கும் விஷ்ணுவிர்க்கும் இடையில் யுத்தம்

0:00 0:00

ப்ரம்மாவுக்கும் விஷ்ணுவிர்க்கும் இடையில் யுத்தம்

ஸனத்குமாரர் நந்திகேஸ்வரர் கிட்ட கேட்டார் சிவபெருமான லிங்கத்துல பூஜை செய்யலாம் இது எப்படி உருவச்சு லிங்க பூஜை செய்தால் சிவபூஜை செய்வதற்கான பலன் எப்படி கிடைக்கிறது இதுக்கு என்ன காரணம்?

நந்திகேஸ்வரர் ஸனத்குமாரருக்கு பதில் சொன்னார்:

ஒருமுறை பிரம்மா வைகுண்டத்துக்கு வந்த போது விஷ்ணு ஆதிசேஷன் மேல படுத்துண்டிருந்தார். பிரம்மா வந்தத தெரிந்தும் விஷ்ணு எழுந்திருக்கல படுத்துண்டே இருந்தார்.

பிரம்மா விஷ்ணுவை உத்தேசித்து சொன்னார் "உன்னோட நாதன் வந்திருக்கேன் நான் வந்தது தெரிஞ்சுண்டும் படுத்துண்டிருக்கியே". விஷ்ணுவுக்கு கோவம் வந்தது. ஆனால் சாந்தமா எழுந்து வந்து பிரம்மாவை ஸ்வாகதம் செய்து சொன்னார்:

"நம்மளோட இடத்துக்கு நம்மள விட சின்னவா வந்தாலும் அதிதி சத்காரம் பண்ணனும் பதவியில நீங்க என்னோட சின்னவரா இருந்தாலும் என்னோட சத்காரத்தை ஏத்துக்கோங்கோ".

பிரம்மா சொன்னார் "நான் தான் இந்த ஜகத்த சிருஷ்டி பண்ணியிருக்கேன் நீங்க இருக்கிற இந்த வைகுண்ட லோகமும் நான் கல்பிச்சது தான். அதனால நான் தான் உங்களை விட ஸ்ரேஷ்டன்".

பெருமாள் சொன்னார் "எனக்குள்ள தான் அகில சராசரமும் இருக்கு. நீங்க என்னோட நாபி கமலத்தில் இருந்து உருவானவர் நான் தான் உங்களை விட ஸ்ரேஷ்டன்".

இப்படியே சர்ச்சை போயிண்டிருக்கும் போது பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய யுத்தம் ஆரம்பிச்சது. ரெண்டு பேரும் பரஸ்பரம் ஒருவர் மேல ஒருவர் அம்புகளையும் அஸ்திரங்களையும் எறிந்தார்கள். இது காரணத்தினால பூமியில இருந்த விஷ்ணு பக்தாளும் பிரம்மாவோட பக்தாளும் பரஸ்பரம் சண்டை போட ஆரம்பிச்சா இதை சொல்லி.

தேவா எல்லாம் இதை நிறுத்த முயற்சி பண்ணா. பிரம்மாவையும் பெருமாளையும் சாந்தமாக்குவதற்காக அவா மேல புஷ்ப மழையை பெய்ய வச்சா. ஆனாலும் அவா ரெண்டு பேரும் சாந்தமா இல்லை.

விஷ்ணு பிரம்மா மேல எரியுறதுக்காக மஹேஸ்வராஸ்திரத்தை எடுத்தார். அதே நேரத்துல பிரம்மா விஷ்ணு மேல ஆக்கிரமணம் பண்றதுக்காக பாசுபதாஸ்திரத்தை எடுத்தார்.

பூமியில பல சூராவளி காற்றுகள் உருவானது. இத பத்தி கவலைப்பட்டு தேவா எல்லாரும் கைலாசத்துக்கு போய் பரமேஸ்வரரை பார்த்தா.

அங்க மண்டபத்துக்கு நடுவுல சிவபெருமான் தன்னோட கணங்களால சுத்தப்பட்டும் கால் மேல கால் போட்டுண்டு உக்காந்துண்டு இருந்தார். தேவர்கள் சிவபெருமான் கிட்ட போய் அவரை நமஸ்காரம் பண்ணிட்டு சொன்னா:

"உங்களோட அனுகிரகத்தால தான் சிருஷ்டியும் ஸ்திதியும் சம்ஹாரமும் நடக்கிறது. நீங்க தான் அனுகிரஹம் செய்து பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் நடக்கிற யுத்தத்தை நிறுத்தணும்".

தமிழ்

தமிழ்

சிவன்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies