சிவ உபாஸனையின் முறைகள்.

0:00 0:00

சிவ உபாஸனையின் முறைகள்

பிரம்மா சிவபெருமானை ஸ்ரவணத்தாலும் கீர்த்தனத்தாலும் மனனத்தாலும் சேவிச்சு அடையலாம் அப்படின்னு சொன்னார். அதைப்பற்றி இன்னும் விளக்கமாக தெரிஞ்சுக்க விரும்பிண்டு ரிஷிகள் கேட்கறா.

மனனம் கீத்ருஷம் பிரம்மன் ஸ்ரவணம் சாபி கீத்ருஷம் கீர்த்தனம் வா கதம்தஸ்ய கீர்த்தயேத்தத் யதா கதம்

சிவபெருமானை எப்படி மனனம் செய்யணும்? ஸ்ரவணம் எப்படி செய்யணும்? கீர்த்தனம் எப்படி செய்யணும்? இதற்கான பிரக்ரியையை எங்களுக்கு சொல்லுங்கோ.

பிரம்மா சொல்றார்:

  • ஸ்ரவணம்: அவரோட கதைகளையும் லீலைகளையும் கேட்கணும்.

  • கீர்த்தனம்: கீதமாகவோ பத்யமாகவோ கத்யமாகவோ சிவபெருமானோட மகிமைய பாடணும், சொல்லணும், அடுத்தவாளுக்கு புரிய வைக்கணும்.

  • மனனம்: அவரோட ஸ்வரூபத்தை மனசால பாக்கணும். மனசுல எப்போதும் அவரப்பத்தியே அவரோட ஸ்வரூபத்தப்பத்தியே நெனச்சுண்டு இருக்கணும்.

சத்சங்கம் இருந்தாதான் இது மூணும் வரும். நமக்கு சிவபெருமான் மேல பக்தி கூட கூட அவருக்கு நம்ம மேல பிரியம் கூடும். இப்படி அவர் நம்பல அருள் பண்ணுவார்.

ஒரு முறை வியாச முனி சரஸ்வதி நதியோட தட்டத்துல தபஸ்சு செய்துண்டு இருந்தார். அப்போது ஆகாசத்துல தன்னோட விமானத்துல போயிண்டு இருந்த சனத்குமாரர் வியாசர பாத்து இறங்கி வந்தா. வியாசர பாத்து கேட்டா: "பிரத்யக்ஷமாக இருக்கிற பரப்பிரம்ஹ ஸ்வரூபம் நீங்கள். தர்மார்த்தகாம மோக்ஷங்கள் கிடைச்ச அப்புறமும் நீங்க தபஸ்சு எதுக்காக பண்ணிண்டு இருக்கேள்?".

வியாசர் சொன்னார்: "எல்லாரும் முக்திய அடைய விரும்புறா. ஆனா அதுக்கு வழி அவாளுக்கு தெரியாது. நான் அவாளுக்கு புரியும்படியாக ஒரு வழிய தெரிஞ்சுக்க முயற்சி பண்றேன். உங்களுக்கு அது தெரிஞ்சா சொல்லுங்கோ".

சனத்குமாரர் சொன்னார்: "ஸ்ரவண கீர்த்தன மனனங்களால் எல்லாரும் சிவபெருமான அடைய முடியும். நானும் ஒரு காலத்துல இத தெரிஞ்சுக்கறதுக்காக மந்தராசலத்துல தபஸ்யாசரணம் பண்ணிண்டு இருந்தேன். அப்போது சிவனோட வாகனம் நந்திகேஸ்வரர் எனக்கு முன்னாடி வந்தார். நான் அவர்கிட்ட இதுக்கு வழிய கேட்டேன். அவர் சொன்ன பிரகாரம் இதுதான்: ஸ்ரவணம், கீர்த்தனம், மனனம். இவைகளைச் செய்து சிவபத பிராப்தியை பெறலாம்".

இதையெல்லாம் ஒரு முறை செய்தா போறாது. திருப்பித் திருப்பி செய்துண்டே இருந்தா கட்டாயமா சிவபெருமானோட அருளையும் சிவபெருமானோட சாயுஜ்யத்தையும் பெறலாம்.

தமிழ்

தமிழ்

சிவன்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies