பொருளடக்கம்
அருள்மிகு கன்னிமாரம்மன் (ம) குளக்கரை கருப்பசாமி திருக்கோயில்
படுகளம் பூசாரிபட்டி, மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம்.
இறைவன்
இறைவி
தீர்த்தம்
தல விருட்சம்
ஆகமம்
அருள்மிகு பொன்னர் சங்கர்
அருள்மிகு கன்னிமாரம்மன்
தங்காள் தீர்த்தம் வன்னிமரம் சைவ ஆகமம்
தலச்சிறப்பு
கற்பக கிரகம் கருங்கல்லால் அமைக்கப்பட்டது. இங்குள்ள தங்காள் தீர்த்தத்தில் (கூவணாம்பள்ளம்) கூ என கூவினால் தண்ணீர் வரும் சிறப்புப்பெற்றது இத்திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் திருவிழாவின் போது பக்தர்கள் அருள்வந்து உணர்ச்சியற்று மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். இறந்தவர்கள் போல் சற்றும் அசைவற்று கிடப்பர். அவர்களை பொன்னர் சன்னதி முன் கிடத்தி துணி போட்டு மூடிவிடுவார்கள். இரவு பல்லக்கு மூலம் தீர்த்தம் குடம் திருக்கோயில் வந்தடையும். அதன்பின் பூப்பெய்தாத கன்னிப்பெண் ஒருவருக்கு அருக்காணி அருள் வந்து தீர்த்தம் எடுத்துத் தெளித்த பின் உயிர்நீத்ததுபோல் இருந்தவர்கள் மயக்கம் நீங்கி, துள்ளி எழுந்து கொள்வார்கள். இன்றும் ஒவ்வொரு திருவிழாவில் இந்நிகழ்ச்சியை நேரில் கண்ணாரக் காணலாம்.
திருவிழாக்கள்
கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் நம் சமயப்பெருமைகளையும் இறைவழிபாட்டின் மேன்மையையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. நமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடவும் வழி செய்கிறது. தைப்பூசம்
தைப்பூசத் திருவிழாவின் 10? ம் நாள் தனது சகோதரரான திருவரங்கனிடம் சீர்பெற கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளியும், தீர்த்தவாரி கண்டும் திருச்சீர் பெற்று வருவது சிறப்பம்சமாகும். பூச்சொரிதல்
மாசிமாதம் கடைசிஞாயிறு ஆரம்பமாகும் இப்பூச்சொரிதல் திருவிழா வேறெந்த திருக்கோவிலிலும் நடைபெறாத முறையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நாள் முதல் அம்பாளே உலக நன்மைக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது மகா சிறப்பு. இந்நாட்களில் அம்பாள் உண்ணாநோன்பு மேற்கொள்வதால் அன்னைக்கு உப்பில்லா நீர், மோரும், கரும்பு, பானகம், இளநீர் மற்றும் குளிரூட்டும் கனி வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகின்றது.
சித்திரைத் தேர்
பிரம்மோற்சவத்தின் 10? ஆம் நாள் தேர்த்திருவிழா, இத்திருவிழாவிற்கு உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெறவும், தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் வருகைபுரிவது மிகப்பெரிய சிறப்பாகும். இந்நாள் உள்ளுர் விடுமுறை தினமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Please wait while the audio list loads..
Ganapathy
Shiva
Hanuman
Devi
Vishnu Sahasranama
Mahabharatam
Practical Wisdom
Yoga Vasishta
Vedas
Rituals
Rare Topics
Devi Mahatmyam
Glory of Venkatesha
Shani Mahatmya
Story of Sri Yantra
Rudram Explained
Atharva Sheersha
Sri Suktam
Kathopanishad
Ramayana
Mystique
Mantra Shastra
Bharat Matha
Bhagavatam
Astrology
Temples
Spiritual books
Purana Stories
Festivals
Sages and Saints