திருக்கோயில்கள் வழிகாட்டி - திருவள்ளூர் மாவட்டம்

திருக்கோயில்கள் வழிகாட்டி - திருவள்ளூர் மாவட்டம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை


திருத்தணிகைத் திருத்தலம் முருகன் உறையும் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகும். நக்கீரர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார், முத்துசாமி தீட்சிதர் ஆகிய அருளாளர்கள் பாடல் பெற்ற புனிதத்தலமாகும். இத்தலம் சென்னை மும்பை இரயில் மார்க்கத்தில் அரக்கோணத்திற்கு 13கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 84கி.மீ. தூரத்திலும், திருப்பதிக்கு தெற்கே 66கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு வடக்கே 44கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருப்பதி செல்வோர் அவசியம் வழிபடவேண்டிய திருத்தலம். அசுரர்களையும் அவர்கள் தலைவனான சூரபதுமனையும் அழித்த முருகப்பெருமான் தணிகைக்கு எழுந்தருளி வள்ளிம்மையை மணந்து அமைதியுடன் காட்சியளிக்கின்றார். முருகன் அசுரர்களுடன் போர்செய்து சினம் தணிந்து வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு தணிகை எனப்பெயர் ஏற்பட்டது. இப்பெரும்பதி ஓர் சிறந்த பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கின்றது.
மூலவர் - சுப்பிரமணியர்
உற்சவர் - சுப்பிரமணியர்
தாயார் : வள்ளி தெய்வானை
ஆகமம் : காமிகம்
திறப்பு : காலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |