ஆயில்யம் நட்சத்திரம்

 

கடக ராசியின் 16 டிகிரி 40 நிமிடங்கள் முதல் 30 டிகிரி வரை பரவியிருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் என்று அழைக்கப்படுகிறது. இது வேத வானவியலில் ஒன்பதாவது நட்சத்திரம். நவீன வானவியலில், ஆயில்யம் δ, ε, η, ρ மற்றும் σ ஹைட்ரே ஆகியவற்றை ஒத்துள்ளது.

 

 

 பண்புகள்

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்:

  • தைரியமான இயல்பு
  • சந்தேகப்படுபவர்
  • சுபாவத்தில் முரண்பாடுகள்
  • புத்திசாலி
  • சுய்நலவாதி
  • முரட்டுத்தனமானவர்
  • நல்ல பேச்சு திறன்
  • எழுதும் திறன்
  • பல மொழிகள் தெரியும்
  • கெட்ட நட்பு
  • இசை மற்றும் கலைகளில் ஆர்வம்
  • இலக்கியத்தில் ஆர்வம்
  • பயணம் செய்வதில் விருப்பம்
  • பொறாமை
  • நன்றியின்மை
  • வாழ்க்கையில் எதிர்மறைகளை முன்னிலைப்படுத்துகின்றவர்
  • செல்வந்தர்
  • உடனடி பதிலளிப்பு
  • வாழ்க்கையை அனுபவிப்பவர்
  • பெண்கள் வீட்டை நிர்வகிப்பதில் வல்லவர்கள்

சாதகமற்ற நட்சத்திரங்கள்

  • பூரம்
  • ஹஸ்தம்
  • சுவாதி
  • அவிட்டம் கும்ப ராசி
  • சதயம்
  • பூரட்டாதி கும்ப ராசி

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நாட்களில் முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும், மேலும் இந்த நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுடன் கூட்டுறவைத் தவிர்க்கவும்.

உடல்நலனை பிரச்சினைகள்

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்: 

  • கீல்வாத நோய் (Rheumatism)
  • சுவாச நோய்கள்
  • இடிமா (Edema)
  • மஞ்சள் காமாலை
  • நரம்பில் பிரச்சினைகள்
  • படபடப்பு
  • மனநல கோளாறுகள்
  • செரியாமை
  • சலி மற்றும் இருமல்
  • மூட்டு வலி
  • கால்களில் வலி
  • சிறுநீரக நோய்கள்

பொருத்தமான தொழில்

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற சில தொழில்கள்: 

  • வர்த்தகம் (Trading)
  • தரகர்
  • கமிஷன் ஏஜென்ட் (Commission agent)
  • கலை
  • இசை
  • இறக்குமதி ஏற்றுமதி
  • பத்திரிகையாளர்
  • எழுத்தாளர்
  • நிறம் மற்றும் மை தொழில்
  • தகவல் பதிவு
  • தணிக்கையாளர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • ராஜதந்திரி
  • பயண முகவர்
  • சுற்றுலா வழிகாட்டி
  • உதவியாளர்
  • செவிலியர்
  • கணிதவியலாளர்
  • ஜோதிடர்
  • பொறியாளர்
  • நீர்ப்பாசனத்தொழில் 
  • உடை
  • ஒப்பந்ததாரர்
  • புத்தக்க் கடை
  • காகிதத் தொழில்

ஆயில்ய நட்சத்திரக்கார்ர்கல் வைரம் அணியலாமா?

சாதகமாக இல்லை. 

அதிர்ஷ்டக் கல்

மரகதம்.

சாதகமான நிறங்கள்

பச்சை, வெள்ளை 

ஆயில்ய நட்சத்திரத்திற்கான பெயர்கள்

ஆயில்ய நட்சத்திரத்திற்கான அவகஹடாதி அமைப்பின்படி பெயரின் தொடக்க எழுத்து: 

முதல் சரணம் - டீ³

இரண்டாவது சரணம் - டூ³

மூன்றாவது சரண - டே³

நான்காவது சரணம் - டோ³

இந்த எழுத்துக்களைப் பெயரிடும் விழாவின் போது வைக்கப்படும் பாரம்பரிய நட்சத்திரப் பெயருக்கு பயன்படுத்தலாம்.

சில சமூகங்களில், பெயர் சூட்டும் விழாவின் போது தாத்தா பாட்டியின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. 

அந்த முறையைப் பின்பற்றுவதில் எந்த தீங்கும் இல்லை.

பதிவுகள் மற்றும் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக வைக்கப்படும் அதிகாரப்பூர்வ பெயர் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. 

அதற்கு வ்யவஹாரிக நாமம் என்று பெயர். 

மேற்கண்ட அமைப்பின்படி நட்சத்திரப் பெயர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். 

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிகாரப்பூர்வ பெயரில் நீங்கள் தவிர்க்க வேண்டிய எழுத்துக்கள் - ட, ட², ட³, ட⁴, ப, ப², ப³, ப⁴, ம, ஸ.

திருமணம்

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்குத் திருமண வாழ்க்கை கடினமாக இருக்கலாம். 

அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் (dominating nature) கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். 

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தேகப்படும்படியான குணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். 

தவிர்க்கப்பட வேண்டிய மறைக்கும் போக்கு அவர்களிடம் உள்ளது. 

பரிகாரங்கள்

சந்திர, சுக்கிர, ராகு காலங்கள் பொதுவாக ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சாதகமற்றவை. 

அவர்கள் பின்வரும் பரிகாரங்களைச் செய்யலாம்.

மந்திரம்

ஓம் சர்பேப்யோ நம:

ஆயில்யம் நட்சத்திரம்

  • இறைவன் - நாகம் (பாம்பு)
  • ஆளும் கிரகம் - புதன்
  • விலங்கு - கருப்பு பூனை
  • மரம் - நாகமரம்
  • பறவை - செம்போத்து
  • பூதம் - ஜலம்
  • கனம் - அசுரன்
  • யோனி - பூனை (ஆண்)
  • நாடி - அந்தியநாடி
  • சின்னம் - பாம்பு

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |