Special - Saraswati Homa during Navaratri - 10, October

Pray for academic success by participating in Saraswati Homa on the auspicious occasion of Navaratri.

Click here to participate

மகம் நட்சத்திரம்

Magha Nakshatra symbol throne

 

சிம்ம ராசியின் 0 டிகிரி முதல் 13 டிகிரி 20 நிமிடங்கள் வரை பரவியிருக்கும் நட்சத்திரம் மகம் எனப்படும்.

இது வேத வானவியலில் பத்தாவது நட்சத்திரம்.

நவீன வானவியலில், மகம் என்பது Regulusக்கு ஒத்திருக்கிறது. 

பண்புகள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்:

  • ஆர்வம்
  • தன்மானம்
  • வேலையில் திறமைசாலி
  • குறுகிய மனப்பான்மை உடையவர்
  • நீதியுடையவர்
  • அழகானவர்
  • செல்வந்தர்
  • மற்றவர்களுக்கு கீழே வேலை செய்யப் பிடிக்காதவர்
  • அவர்கள் நினைப்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துபவர்
  • வாழ்க்கையை அனுபவிப்பவர்
  • பறைசாற்றும் போக்கு
  • ரகசியம் காக்க முடியும்
  • அதிகாரிகளின் ஆதரவு
  • நல்ல மக்கள் தொடர்பு
  • ஆற்றல் மிக்கவர்
  • பொறுப்புள்ளவர்
  • சக்திவாய்ந்தவர்
  • விளையாட்டில் வீரம்
  • உதவியாளர்
  • நம்பகமானவர்
  • தைரியமுள்ளவர்
  • உயர்ந்த குறிக்கோளுடையவர்
  • சண்டையிடும் போக்குள்ளவர்
  • காதல் செய்பவர்

மந்திரம்

ௐ பித்ருப்⁴யோ நம꞉

சாதகமற்ற நட்சத்திரங்கள்

  • உத்தரம் 
  • சித்திரை
  • விசாகம்
  • பூரட்டாதி மீன ராசி
  • உத்திரட்டாதி
  • ரேவதி

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும், 

மேலும் இந்த நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுடன் கூட்டுறவைத் தவிர்க்கவும்.

உடல்நலப் பிரச்சினைகள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்: 

  • இதய நோய்கள்
  • முதுகு வலி
  • படபடப்பு
  • மயக்கம்
  • சிறுநீரகக் கல் (Kidney stone)
  • வாந்தி மற்றும் பேதி
  • மனநல கோளாறுகள்

பொருத்தமான தொழில்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொருத்தமான தொழில்களில் சில: 

  • ஒப்பந்ததாரர்
  • மருந்துகள் மற்றும் இரசாயனங்கள்
  • குற்றவியல்
  • பாதுகாப்பு சேவை
  • மருத்துவர்
  • இமிடேஷன் ஜுவல்லரி (Imitation Jewellery)
  • ஆயுதங்கள்

மகம்ம் நட்சத்திரம் வைரம் அணியலாமா?

சாதகமாக இல்லை.  

அதிர்ஷ்ட கல்

வைடூரியம். 

சாதகமான நிறம்

சிவப்பு.

மகம் நட்சத்திரத்திற்கான பெயர்கள்

மகம் நட்சத்திரத்திற்கான அவகஹடாதி அமைப்பின்படி பெயரின் தொடக்க எழுத்து: 

  • முதல் சரணம் - மா
  • இரண்டாவது சரணா - மீ
  • மூன்றாவது சரணம் - மூ
  • நான்காவது சரணம் – மே

இந்த எழுத்துக்களைப் பெயரிடும் விழாவின் போது வைக்கப்படும் பாரம்பரிய நட்சத்திரப் பெயருக்கு பயன்படுத்தலாம். 

சில சமூகங்களில், பெயர் சூட்டும் விழாவின் போது தாத்தா பாட்டியின் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

அந்த முறையைப் பின்பற்றுவதில் எந்தத் தீங்கும் இல்லை.பதிவுகள் மற்றும் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக வைக்கப்படும் அதிகாரப்பூர்வ பெயர் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. 

அதற்கு வ்யவஹாரிக நாமம் என்று பெயர். 

மேற்கண்ட அமைப்பின்படி நட்சத்திரப் பெயர், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். 

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிகாரப்பூர்வ பெயரில் நீங்கள் தவிர்க்க வேண்டிய எழுத்துக்கள் - த, த², த³, த⁴, ந, ய, ர, ல, வ, ஏ, ஐ, ஹ.

திருமணம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பாக்கியசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். 

அவர்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை இருக்கும், ஆனால் மன அழுத்தமும் இருக்கும். 

பரிகாரங்கள்

சூரியன், செவ்வாய், வியாழன் ஆகிய காலங்கள் பொதுவாக மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சாதகமற்றவை. 

அவர்கள் பின்வரும் பரிகாரங்களைச் செய்யலாம். 

மகம் நட்சத்திரம்

  • இறைவன் - முன்னோர்கள் (பித்ருக்கள்)
  • ஆளும் கிரகம் - கேது
  • விலங்கு - எலி
  • மரம் - ஆலமரம் (Ficus benghalensis)
  • பறவை - செம்போத்து
  • பூதம் – ஜலம் 
  • கனம் - அசுரன்
  • யோனி - எலி (ஆண்)
  • நாடி - அந்தியநாடி
  • சின்னம் - சிம்மாசனம்
  Image courtesy: https://commons.wikimedia.org/wiki/File:Throne_of_Sultan_Mahmud_II_(1808-1839).jpg
52.1K
7.8K

Comments

83428
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

தகவல் நிறைந்த இணையதளம் -சுப்பிரமணியன்

அனைவருக்கும் உதவிகரமான இணையதளம் -கிருஷ்ணன் ராமச்சந்திரன்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

Read more comments

Knowledge Bank

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா மற்றும் ஷ்ரேயாவின் வித்தியாசத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்?

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா (பிரியமானது, இனிமையானது) மற்றும் ஷ்ரேயா (நல்லது, பயனுள்ளது) இவ்விரண்டின் வித்தியாசத்தை விளக்குகிறார். ஷ்ரேயாவை தேர்வு செய்வது நன்மை மற்றும் உயர் இலக்கினை அடைய வழிவகுக்கும். இதற்குப் பதிலாக, ப்ரேயாவைத் தேர்வு செய்வது என்பது தற்காலிகமான இன்பங்களில் ஈடுபடுவது. இது இலக்கினை மறப்பதற்கும் காரணமாகிவிடும். ஞானமிக்கவர்கள் ப்ரேயாவிற்குப் பதிலாக ஷ்ரேயாவை தேர்வுசெய்வர். ஷ்ரேயாவைத் தேர்வு செய்வது, பெறுவதற்கு கடினமான நித்திய ஞானம் மற்றும் அறிவை அடைவதற்கான நாட்டம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ப்ரேயாவைத் தேடுவது என்பது எளிமையானது‌‌, தற்காலிகமானது. அறியாமை மற்றும் மாயையில் இருக்க காரணமாகிறது. யமன் தற்காலிகமான இன்பங்களில் திருப்தி அடைவதை விட நிலையான நன்மையை தேடுவதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்

மோட்சம் என்றால் என்ன?

இந்து மதத்தின்படி மோட்சம் என்பது பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுவதாகும். மோட்சத்தைப் பெறுவதற்கான எளிய வழி ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பது.

Quiz

மகாபாரதம் எந்த சந்தசில் (அளவியில்) எழுதப்பட்டது?
தமிழ்

தமிழ்

ஜோதிடம்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon