Special - Aghora Rudra Homa for protection - 14, September

Cleanse negativity, gain strength. Participate in the Aghora Rudra Homa and invite divine blessings into your life.

Click here to participate

மருதமலை மாமணியே முருகையா

 

மருதமலை மாமணியே முருகையா பாடல்

 

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்குமலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை.
மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே. முருகய்யா
மருதமலை மாமணியே. முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா.
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா. ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்.
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்.

மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா.
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

 

26.6K
1.3K

Comments

7b6v7
மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

மிக அழகான இணையதளம் 🌸 -அருணா

செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

சிறந்த கட்டுரைகள் கொண்ட இணையதளம் -user_xhdy

மகிழ்ச்சியளிக்கும் வெப்ஸைட் -தேவிகா

Read more comments

Knowledge Bank

க்ருஹ்யசூத்திரம்

க்ருஹ்யசூத்திரம் வேதங்களில் ஒரு பகுதி ஆகும், இதில் குடும்ப மற்றும் வீட்டிலிருந்து தொடர்புடைய சடங்குகள், வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி விவரிக்கப்படுகிறது. இது வேதகாலத்தில் சமூக மற்றும் ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கிறது. க்ருஹ்யசூத்திரங்களில் பல்வேறு வகையான சடங்குகள் பற்றி விவரிக்கப்படுகிறது, உதாரணமாக பிறப்பு, நாமகரணம், அன்னப்ராசனம் (முதலாவது தானிய உணவு), உபநயனம் (யஜ்ஞோபவீதம்), திருமணம் மற்றும் இறுதி சடங்கு (அந்தியஷ்டி) போன்றவை. இந்த சடங்குகள் வாழ்க்கையின் முக்கியமான ஒவ்வொரு கட்டத்தையும் குறிக்கின்றன. முக்கிய க்ருஹ்யசூத்திரங்களில் ஆஸ்வலாயன க்ருஹ்யசூத்திரம், பாரஸ்கர க்ருஹ்யசூத்திரம் மற்றும் ஆபஸ்தம்ப க்ருஹ்யசூத்திரம் அடங்கும். இந்த நூல்கள் பல்வேறு ரிஷிகளால் எழுதப்பட்டவை மற்றும் பல்வேறு வேத பிரிவுகளுடன் தொடர்புடையவை. க்ருஹ்யசூத்திரங்களின் ஆன்மீக முக்கியத்துவம் மிக அதிகம், ஏனெனில் இது ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கையின் சடங்குகளைக் குறிக்கின்றதல்லாமல், சமூகத்தில் ஆன்மீக மற்றும் நெறிமுறைகளின் அடிப்படை நிலைகளை நிர்மாணிக்க உதவுகிறது.

தனுர்வேதம் எந்த வேதத்தின் உபவேதம்?

ரிக்வேதம்.

Quiz

வைதீக திருமணங்களில் செயலாக்குபவர் யார்?
Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Whatsapp Group Icon