நட்சத்திர சிந்தாமணி : (மூன்றாம் பாகம்) உத்திராடம் முதல் ரேவதி முடிய

nakshtra chintamani part 3 pdf cover page

3. திருவோண நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர் களின் பூர்வ கர்மமும் சாந்தி பரிகாரமும்
காஷ்மீர தேசத்தில் கண்ட சர்மா என்ற பிராமணன் வசித்து வந்தான் இவன் மனைவி கங்கா மிகவும் கொடுமைக்காரி. எப்பொழுதும் கணவன் பேச்சைக் கேட்பதே இல்லை. நெய், காய்கறிகள், வெல்லம் முதலியவற்றை விற்று ஆதாயம் பெற்று வந்தாள், கண்ட சர்மா ஆகிய பிராமணன் குதிரை, எருது, தோல், உலோகங்கள் முதலியவற்றை விற்றுப் பிழைத்து வந்தான். இவன் கிழவனான பின் இறந்தான்.
இவனைப் பிடித்து எமதூதர்கள் ''கர் தமம்' என்ற நரகத்தில் 60 வருஷங்கள் தள்ளினர். அங்கு அளவற்ற துன்பம் அனுபவித்தபின், செம்மறி ஆடு, கழுதை, மற்றும் தவளை யாகவும் தொடர்ந்து பிறந்தான். பின்பு மத்ய தேசத்தில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் மனிதப் பிறவி பெற்றான். போன ஜென்ம மனை வியே இவனுக்கு மனை வியானாள். இவன் சந்த அற்றவனாக இருந்தான், இவனை நிறைய நோய்களும் பற்றிக் கொண்டன. போன ஜென்மத்தில் தன் குலத் தொழிலை விட்டதால் இவன் அளவற்ற கஷ்டத்திற்காளானான். இதற்கு சாந்தி பரிகாரம் வருமாறு.
முதலில் இவன் தன் சொத்தில் 6ல் ஒரு பாகத்தை உத்தம பிராமணர் களுக்குத் தானம் பண்ண வேண்டும். இவன் அதன் பின் 1000 முறை காயத்திரி மந்திரத்தையும்; சிவபெருமானின் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் ஒரு லட்சம் முறை ஜபம் செய்ய வேண்டும். அதன்பின் இந்த மந்திரங் களுக்கு முறைப்படி புரஸ்சரண முறையை செய்து முடிக்க வேண்டும். அதன்பின் பிராமணர்களுக்கு போஜனம் பண்ணி வைத்து தகுந்த தக்ஷணையும் கொடுக்கவேண்டும். அதன்பின் பிரயாகை புண்ணிய தீர்த்தத்தில் மனைவி படன் நீராட வேண்டும். அதன் பின் இளநீர் குடுவை, சுரைக்குடுவை இவற்றில் பஞ்ச ரத்தினங்களை நிரப்பித் தானம் பண்ண வேண்டும். இதனால் இவன் பாவங்கள் விலகுகின்றன. இவனுக்கு தீர்க்காயுள் உள்ள ஆண்குழந்தைகள் பிறக்கும். அதன் பின் இவன் குடும்பத்துடன் சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.
திருவோண நட்சத்திரத்தில் 40. பாதத்தில் பிறந்தவர் களின் பூர்வ கர்மமும் சாந்தி முறையும். சிவபெருமான் சொல்கிறார்!
அடக தேசத்தின் மேற்கு திசையில் யாதவபுரம் என்றொரு ஊரில் சித்தலால் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவியின் பெயர் தேவி என்பதாகும். இவள் ஒழுக்கமுள்ளவளாகவும் இனிமையாகப் பேசுபவளாகவும், பதிவிரதையாகவும் இருந்தாள், ஆனால் கணவனாகிய சித்தலால் என்பவனோ திருடும்களவும் செய்தே சம்பாதித்து குடும்பத்தைப் போஷித்து வந்தான். கடைசியில் இவன் இறந்தான். இவன் மனைவி இவனுடன் உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்தாள். இவளுடைய புண்யத்தால் பிராமணன் சத்திய லோகத்தில் வெகுகாலம் சுவர்க்க சுகம் அனுபவித்தான். அதன் பின் அதே புண்ணியத்தால் இவன் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தான். ஆனால் தன் குலத் தொழிலை விட்டு ஈனத்தொழில் செய்ததால் இந்த பாவம் காரணமாக இவனுக்குச் சந்ததி இல்லாமல் போயிற்று. இதற்கு சாந்தி பரிகாரம் பின் வருமாறு
தன் சொத்தின் 8ல் ஒரு பகுதியைப் புண்ணிய காரியங்களில் செலவு செய்ய வேண்டும். அதன் பின் பத்து வண்ணம் கொண்ட பசு ஒன்றை கன்றுடன் தானம் செய்யவேண்டும். அதன் பின் உத்தமர் ஒருவருக்கு படுக்கை தானம் பண்ண வேண்டும். அதன் பின் 'காயத்ரி' மந்திரத்தையும் விஷ்ணு மந்திரத்தையும் ஒரு லட்சம் முறை ஒவ்வொன்றையும் ஜபம் செய்ய வேண்டும். அதன்பின் 'புரஸ்சரணம்' என்ற சடங்ககை முறைப்படி செய்யவேண்டும். குடமும் தானம் பண்ண வேண்டும்.
இப்படிச் செய்வதால் இவன் பாபங்கள் தொலைந்து இவனுக்குத் தீர்க்காயுள் உள்ள ஆண். பெண் குழந்தைகள் பிறப்பார்கள். இவர்கள் இதன் பின் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்துவார்கள்,
இனி இந்த திருவோண நட்சத்திரத்திற்குரிய விம்சோத்தரி தசைகள்

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

தமிழ்

தமிழ்

ஆன்மீக புத்தகங்கள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara test | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...

We use cookies