சோழநாட்டுத் தலபுராணங்கள்
தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தருள் முதல்வரான சோழர் என் தொன்றுதொட்டு ஆண்டுவந்த பகுதிகள் சோழ நாடெனப் பெருமையுடன் பேசப்பெறும். கிழக்கே கடலும், தெற்கே வென்னாறும், மேற்கே கோட்டைக் கரையும், வடக்கே ஓணாடும் ஆக மிகப் பரந்த நிலத்தைக் கொண்ட இச் சோழநாடு காவிரியால் வளம் பெற்று விளங்குவது. ஆயிரக்கணக்கான கோயில்களும் இங்கே சிறப்புற்று விளங்குகின்றன.
தமிழ் ஞானசம்பந்தர் தோன்றிய சீகாழிப் பதியும் இச்சோழ நாட்டைச் சேர்ந்ததே. சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் வரலாற்றைச் சிறப்புடன் இயற்றியளித்ததும் இச்சோழ நாட்டிலேயாம்.
சோழநாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 190. அவற்றுள், காவிரியின் வடகரையிலுள்ளவை 63: தென்கரையிலுள்ளவை 127. இவற்றுள் பாதிக்கும் மேற் பட்ட தலங்களுக்குரிய புராணங்கள் கிடைக்கின்றன.
சோழநாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் மொத்தம் 40. அவற்றுள், காவிரியின் வட கரையி துள்ளலை 21; தென்கரையிலுள்ளவை 19. இவற்றுள் பல தலங்களுக்குரிய புராணங்கள் கிடைக்கவில்லை.
மேற்கூறிய வகையில் பாடல் பெறாத சைவ, வைணவத் தலங்கள் பல இச்சோழ நாட்டிலுள்ளன. அவற்றுள் பல தலபுராணங்களைப் பெற்றுள்ளன. இவ்வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட தலபுராணங்கள் கிடைக்கின்றன. அவற்றை ஈண்டு நோக்குவோம்.
காவிரியின் வடகரையிலுள்ள தலங்கள்
காவிரியின் வடகரையிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 63 ஆகும். இவற்றுள் 27 தலங்களுக்குரிய புராணங்கள் கிடைக்கின்றன. அவை வருமாறு : கோயிற் புராணம்
சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று சிதம்பரம். இது காவிரி நதியின் வடபால் உள்ளது. சைவத்தில், 'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே அது சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப் பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப்பெயராக வழங்கி வருகிறது.
தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லை வனம் என்றும்; வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர் பூசித்த தலமாதலின் பெரும்பற்றப் புலியூர் என்றும்; சித் அம்பரம் (அறிவு - வெட்டவெளி) - சிதம்பரம் ஞானாகாசம் என்றும்; பூலோக கயிலாயம்; புண்டரீகபுரம்; சிதாகாசத்தலம் என்றும் பல பெயர்கள் இத்தலத்திற்குரிய தாகும்.
சேந்தனார் அருள் பெற்றதும்; மாணிக்கவாசகர் திருவாசகமும் திருக்கோவையாரும் பாடி முத்தி பெற்றதும்; வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சுகர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கூற்றுவ நாயனார், கணம்புல்ல நாயனார், சந்தனாசாரியர் முத்தி பெற்ற சிறப்புடை யதுமாகிய பழம்பதி இது.
இறைவன் - விராட்புருடனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா உந்தியாகவும், திருவண்ணா மலை மணிபூரகமாகவும், திருக்காளத்தி கழுத்தாகவும், காசி புருவமத்தியாகவும் கூறப்பெறும். இதில், சிதம்பரம் இருதய மாகவும் சொல்லப்படும்.
பஞ்சபூதத் தலங்களுள் இது ஆகாயத்தலம், பஞ்ச சபைகளுள் இது கன கசபை, பொற்சபை, சிற்சபை, பதஞ்சலி வியாக்ர பாதர்களுக்குப் பெருமான் கன கசபையில் நடனக்காட்சியருளிய தலம். தரிசிக்க முத்தி தரும் பதி என்பர்.
இக்கோயிலுள் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்னள.
பேரம்பலத்திற்கு மேரு என்னும் பெயருண்டு. வடக்கிலுமொரு மேரு இருப்பதால் இதைத் தட்சிணமேரு என்று கூறுவர்.
தில்லைவாழ் அந்தணர்களாகிய தீட்சிதர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது இக்கோயில்.
இராசராசன் வேண்டுதலின் பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப் பிள்ளையாரின் துணைகொண்டு திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட திருத்தலம் இது.
பெரியபுராணமென்னும் திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருமானால் அரங்கேற்றம் செய்யப்பட்ட தெய்வத் தலமாகிய இங்குப் பல அற்புதங்கள் நிகழ்ந்ததையும் வரலாறு சுட்டும். மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேச வைத்தது; திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவ கணங்களாகக் கண்டது; உமாபதிசிவம் கொடிக்கவி பாடிக் கொடியேற் வைத்தது; சேந்தனார் திருபல்லாண்டு பாடித் தடைப்பட்ட தேரை ஓடச் செய்தது; திருமுறைகளை வெளிப்படுத்தியது; சேக்கிழார் பெரியபுராணம் பாட அடியெடுத்துக் கொடுத்தது முதலிய பல அற்புதங்கள் இத்தலத்திலேயே நிகழ்ந்ததாக வரலாறு கூறுவர்.
பாடிய
தேவாரம் பாடிய மூவரும், திருவாசகம் மணிவாசகரும், இத்தலத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இவற்றுடன் எண்ணற்ற நூல்கள் இத்தலம் பற்றி எழுந்துள்ளன.
தமிழிலுள்ள கோயிற்புராணம், சிதம்பர புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் என நான்கு தலபுராணங் கள் இச் சிதம்பரம் கோயிலைப் பற்றிய நூல்களாகும்.
வடமொழியில் சிதம்பர ரகசியம், தில்லைவன மான்மியம், வியாக்கிரபுர மான்மியம், புலியூர் மான்மியம், புண்டரிகபுர மான்மியம், சிதம்பர மான்மியம், ஏமசபாநாத மான்மியம், சித்சபா பிரதிட்டா மான்மியம் போன்ற பல நூல்கள் இத்தல வரலாறுகளைக் கூறுவனவாக அமைந்துள்ளன.
1. உமாபதி சிவாசாரியர் இயற்றிய கோயிற் புராணம்
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அவர்கள் மறைஞான சம்பந்தரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் இயற்றியதே கோயிற் புராணம்.
Astrology
Atharva Sheersha
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rituals
Rudram Explained
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta