வடநாட்டுத் தலபுராணங்கள்
தமிழ்நாட்டு எல்லைக்கு வடக்கே திருவேங்கடம் முதல் இயை மலை வரையிலான பரந்த நிலப்பகுதிகள் அனைத்தும் வடநாட்டுப் பகுதி களாக எண்ணப்படுகின்றன. இவ் வடநாட்டுப் பாடுகளெங்கும் சைவம், வைணவம் ஆகிய சமயக் கோயில்கள் நிறைந்த கார்கள் பல உள்ளன. இவற்றுள் பல மிகவும் புகழ் வாய்ந்தவை, புராதனச் சிறப்பும் வரலாறு களும் கொண்டவை. வேதம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் குறிக் கப்பெற்ற பல தலங்கள் இவ்வட்தாட்டுப் பகுதியிலேயே இருப்பதும் சுட்டத்தக்கதாகும்.
வடநாட்டிலுள்ள சிவத்தலங்கள் ஐந்து. அவை ஸ்ரீபர்ப்பதம் (ஸ்ரீசைலம், மல்லிகார்ச்சனபுரம்), இந்திரநீல பருப்பதம். அநேகதங்காபதம், திருக்கேதாரம். தொடிக்கான் மலை (ஸ்ரீகைலாசம் என்பன. அங்குள்ள வைணவத் தலங்கள் பதினொன்று. அவை, இருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ராயாகை) இருச்சாளக்ராமம், இருச்சிங்கவேள்குன்றம், இருத்வாரகை (துவாரபா, திருநைமிசாரண்யம், இருப்பகுதி (ஜோழிமட்), திருவடமதுரை (மதுரா) திருவதிரியாச்சிரமம் (பத்சிநாத், திருவயோத்தி (அயோத்யா), திருவாய்ப்பாடி கோலம்), திருவேங்கடம் இருமலை) என்பன.
இவையன்றி வடநாட்டிலுள்ள புராணத்தலங்களும், அபிமான தலங்களும், ஆசு பத்தொன்பது உள்ளன. அவை பண்டாபுரம், பஞ்சவடி அவந்தி, எபர் (மாங்கயா), புத்கரம் (காற்வீர்), மாயா கோத்ரம் (ஹரித்வார்), பாண்டு கேச்வர், விஷ்ணுப்ராயாகை, ஜோஷிமடம் (பத்ரீமார்க்கம், பிரயாகை (அலகாபாது, கயாகோத்ரம், ஸ்ரீகூர்மம், புவனேசரி, பூரி ஜகத்தாதம், விம்ஹாசவம், பத்ராசலம், அன்னவரம், மகாதத்தி, மங்களகிரி என்பன.
வடநாட்டிலுள்ள சிறந்த தலங்களுக்குத் தமிழ்நாட்டில் தோன்றிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருப்பாகரங்களையும், திருப்பதிகம் களையும் அருளியுள்ளனர். அவர்கள் வழியே அவ்வவ் தலங்களுக்கும் தமிழ்த் தலப்புராணங்கள் பல தோன்றியிருத்தல் வேண்டும். ஆயின் நில தலபுராணங்களே கிடைக்கின்றன. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
வடதாட்டுச் சைவத்தலங்களுள் ஒன்றாகிய இது ஸ்ரீசைலம் என்றழைக்கப்படுவதாகும். ஆந்திர மாதிவத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கும் பக்கத்திலுள்ள தலம். சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது. மல்லிகார்ஜுனம் என்பதும் இத்தலத்திற்குப் பெயராகும். அர்ஜுனம் என்பது மருதமரம் மருதமரக்கைத் தலமரமாகக் கொண்டதனால் இப்பெயர் பெற்றது. அர்ஜுனத் தலங்கள் மூன்றில் ஒன்றாக இது விளங்குகிறது. மற்ற இரண்டு, திருவிடைமருதூர் (மத்தியார்ச்சுனம்) மற்றும் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் (புடார்ச்சனம்) என்பன. சந்திரவதி என்னும் பெண் மல்லிகை மலர்களால் அருச்சித்து வழிபட்டதால் இத்தல இறைவர் மல்லிகார்ச்சுனர் என அழைக்கப்பெற்றார்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இதுவும் ஒன்று. சிலாதமுனிவர் தவஞ்செய்த தலமாதலின் (ஸ்ரீ) சைலம் எனப்படுகிறது. நந்திதேவர் இங்குத் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; அவரே இங்கு மலையாக இருந்து இறைவனைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தில் அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. வீரசைவர்கள் இம்மலைப் பகுதியை 'பூகயிலாயம்' என்றழைப்பர்.
தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்ற மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை இராமேசுவரம், திருக்கேதாரம் என்பனவாம்.
தொலைவிலிருந்து வழிபடுவார்ககும் வீடு அருளும் திருவூர், இறந்தவர்க்கு எண்ணிய நன்மைகளை மறுபிறப்பில் அளிக்கும் திருவூர் எனப்பல சிறப்புப் பொருந்திய இத்தலத்தை மூவரும் பாடியுள்ளர். சம்பந்தரும் சுந்தரரும் காளத்தியைத் தொழுத பின்னர் அங்கிருந்தே வடக்கு நோக்கித் தொழுது பாடினர். திருநாவுக்கரசர் மட்டும், தம்முடைய கயிலை யாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடினார். சம்பந்தர், அப்பர் பதிகங்களில் இத்தலம் 'திருப்பருப்பதம்' என்றும் சுந்தரர் பதிகத்தில் 'சீபர்ப்பதம்' என்றும் குறிக்கப்படுகிறது.
இத்தலத்தினைப் போற்றி பல பாடல்கள் எழுந்துள்ளன. அருணகிரிநாதர், வள்ளலார் போன்றோரும் பாடியுள்ளனர். இத்தலம் பற்றிய ஒரு தலபுராணம் தமிழில் இருந்ததாகத் தெரிகிறது. ஸ்ரீசைல வைபவம், ஸ்ரீசைல வரலாறு போன்ற நூல்கள் இத்தலவரலாற்றைத் தெரிவிக்கின்றன.
இந்திரநீலப் பருப்பதம்
வடநாட்டில் திருக்கேதாரம் செல்லும் வழியில் உள்ள தலம். இது இந்திரனால் பூசிக்கப்பட்ட தலம் என்றும், அருச்சுனன் தவம் புரிந்து பாசுபதப்படை பெற்ற திருவூர் என்றும், மூகாசுரனை இறைவன் அட்ட திருவூர் என்றும் கூறுவர். இங்குள்ளோர் இம்மலையை ‘நீலகண்ட பர்வதம்' என்று கூறுவர்.
சம்பந்தர் தென்கயிலாயமான திருக்காளத்தியைத் தொழுத பின்பு அங்கிருந்தே இத்தலத்தைத் தொழுது பாடிப் போற்றினார்.
'பூவி னானொடு மாலும் போற்றுறுந்
தேவ னிந்திர நீல பர்ப்பதம் யாஎழு வாரைத் தம்வினை கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே'.
பாவி
என இத்தலச் சிறப்பை எடுத்துரைப்பர் சம்பந்தர்.
இத்தலம் பற்றிய பல புராணக் கதைகள் இருப்பினும் தலபுராண நூல் எதுவும் கிடைக்கவில்லை.
அநேகதங்காபதம்
அரித்துவாரிலிருந்து திருக்கேதாரம் செல்லும் வழியில் உள்ளது இத்தலம். இது அம்பிகை தவம் செய்த இடம் என்றும், சூரியனும் சந்திரனும் வழிபட்ட தலம் என்றும் கூறுவர். சம்பந்தர் திருக்காளத்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே தொழுது இத்தலத்தைப் பாடியுள்ளார்.
'தந்தத் திந்தத் தடமென்றருவித் திரள்பாய்ந்து போய்ச்சிந்த வெந்த கதிரோ னோடு மாசறு திங்களார் அந்தமில்ல அளவில்ல அநேகதங் காபதம் எந்தை வெந்த பொடிநீ றணிவார்க்கு இடமாவதே.'.
என இத்தலச் சிறப்பைக் குறிப்பிடுவர் இவர்.
இத்தலம் பற்றிய பல புராணக் கதைகள் இருப்பினும் தலபுராண நூல் எதுவும் கிடைக்கவில்லை.
திருக்கேதாரம்
இமயமலைச் சாரலில் உள்ளது இத்தலம். ஜோதிர்லிங்கத் தலம். பிருங்கி முனிவரின் பொருட்டு உமையம்மை இறைவனை வழிபட்டு இடப்பாகம் பெற்ற தலம் என்று கூறுவர். இக்கோயிலில் பனிக்காலங்களில் பூசை இல்லை. மே மாதம் முதல் அக்டோபர் வரை ஆறு மாதம் மட்டுமே பூசைகள் நடைபெற்று வருகின்றன. மண்ணவர் பூசை ஆறு திங்களும் விண்ணவர் பூசை ஆறு திங்களும் நடைபெறுவதாக உரைக்கின்றனர்.
சம்பந்தரும் சுந்தரரும் தென்கயிலாயமான திருக்காளத்தி யிலிருந்தே இமயமலைச் சாரலிலுள்ள இத்தலத்தைப் பாடித் தொழுதுள்ளனர்.
திருக்கேதாரீச்சுர மகிமை போன்ற தல வரலாறுகள் கிடைப் பினும் இத்தலம் பற்றிய தமிழ்த் தலபுராணங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
திருக்கயிலாயம் (நொடித்தான்மலை)
சிவபெருமான் அம்பிகையோடு எழுந்தருளியுள்ள மலை திருக்கயிலாயம். இம்மலை இமய மலையின் வடக்கில் திபெத் நாட்டின் மேற்பால் அமைந்துள்ளது. இன்று இம்மலைப்பகுதி சீன அரசின் கட்டுப்பாட்டுள் இருந்து வருகிறது. இங்கு இயற்கையான கோயிலமைப்பில் பனி மூடியே சிவலிங்கமாகக் காட்சியளிக்கின்றது. 'ஏதமில பூதமொடு கோதைதுணை யாதிமுதல் வேத விகிர்தன் கீதமொடு நீதிபல வோதிமற வாதுபயி னாதன கர்தான் தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதல் நலியக் காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோதுகயி லாயமலையே'.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |