பிரம்மா முனிகள் கிட்ட சிவபெருமான் தான் ஜகத்துக்கு மூலம்னு சொல்றாரு. முனிகள் அந்த சிவ தத்துவத்தைப் பற்றி இன்னும் தெரிஞ்சுக்க விரும்பிண்டு கேட்கிறா.
அத்த கிம் பரமம் சாத்யம் கிம்வா தத்சாதனம் பரம் சாதக: கீத்ருஸ்த்தத்ர ததிதம் ப்ரூஹி தத்த்வத:
எந்த ஒரு தத்துவத்தை மனுஷ்யா சாதிக்க வேண்டும்? அடைய வேண்டும்? அது எப்படி அடையலாம்? அதை அடைய வைப்பது எது? இதை எங்களுக்கு உரையாற்றுங்கள்.
பிரம்மா சொல்றார்.
சாத்யம் சிவபத ப்ராப்தி: சாதனம் தஸ்ய ஸேவனம் சாதகஸ்தத்ப்ரஸாதாத்யோ நித்யாதி பல நிஸ்ப்ருஹ:
அடைய வேண்டியது சிவபெருமானோட பதம். பரப்பிரம்மாத்தில் லயம். அதைச் சிவபெருமானோட சேவனத்தினால அடையலாம். அதைக் கொடுக்கக் கூடியது சிவபெருமானோட அருள்.
தினமும் பூமியில் பண்ற சின்ன சின்ன கர்மாக்களோட பலனுக்கு ஆசைப்படாமல் சிவப்பத ப்ராப்திக்கு ஆசைப்பட்டால் அதை அடையலாம்.
கர்மக்ருத்வாது வேதோக்தம் ததர்ப்பித மஹாபலம் பரமேஷ பதப்ராப்தி: ஸாலோக்யாதி க்ரமாத் தத:
வேதங்கள்ல சொல்லியிருக்கிறபடி சிவபெருமானோட பதப்ராப்தியைப் பெறலாம். இதனால சிவபெருமானோட சாலோக்யத்தையும் சாயுஜ்யத்தையும் பெறலாம்.
அது எப்படி?
ஷ்ரோத்ரேண ஸ்ரவணம் தஸ்ய வசஸா கீர்த்தனம் ததா மனஸா மனனம் தஸ்ய மஹாசாதன முச்யதே ஸ்ரோதவ்ய: கீர்த்தி தவ்வியஸ்ச மந்தவ்யஸ்ச மஹேஸ்வர:
சிவபெருமானை மூன்று விதமாகச் சேவிக்கணும். ஷ்ரோத்ரேண ஸ்ரவணம் - அவரோட மகிமையைக் காதால கேட்கணும். வசஸா கீர்த்தனம் - வாயால அவரோட மகிமையைப் பாடணும், சொல்லணும். மனஸா மனனம் - மனசால எப்போதும் அவரைப் பத்தியே நினைச்சுண்டு இருக்கணும். இப்படிச் செய்தால் சிவப்பத ப்ராப்தி கிடைக்கும்.
மனுஷ்யா பிரத்யக்ஷமா இருக்கிற வஸ்துகளைக் கண்களால் பார்த்துத் தெரிஞ்சுப்பா. அப்ரத்யக்ஷமா இருக்கிற வஸ்துகளைக் காதால கேட்டுத் தெரிஞ்சுப்பா. சிவபெருமான் நிராகார மூர்த்தி. அவரைப் பற்றி முதல்ல காதால கேட்டுத் தெரிஞ்சுக்கணும். அதுக்கப்புறம் அவரைப் பற்றி வாக்கால சொல்லணும். இது ரெண்டும் செய்தால் சிவபெருமானோட மனனம் தனியே மனசுல வரும். அவரை மனனம் செய்து செய்து அவரை அடையணும்.
முதல்ல சரீரத்துல இருக்கிற எல்லா வியாதிகளும் அழியும். பிறகு சம்சாரத்துல ருசி குறைய ஆரம்பிக்கும். அதுக்கப்புறம் சரீரத் தியாகத்தினால சம்சாரத்துலேந்து முக்தி கிடைச்சு சிவ சாயுஜ்யம் கிடைக்கும்.
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta