ஸோமவார (திங்கட்கிழமை) விரதத்தின் விதிகள்

0:00 0:00

ஸோமவார (திங்கட்கிழமை) விரதத்தின் விதிகள்

சோமவார விரதம் ரொம்ப விசேஷம்

மதுரையில அனுஷ்டிச்சா அதுலயும் ரொம்ப விசேஷம்

பலவிதமா சோமவார விரதம் பண்ணலாம்

ஒரு நேர ஆஹாரம்

இது ராத்திரியிலேனா இன்னும் விசேஷம்

ஒரு நாள் முழுசா திங்கட்கிழமை கார்த்தால இருந்து சுவ்வாய்க்கிழமை கார்த்தால வரைக்கும் ஆகாரம் இல்லாம இருந்தா இன்னும் விசேஷம்

ஒரு நேரம் மட்டும் ஆகாரம் பண்ணி ராத்திரி தூங்காம இருந்தா அதுவும் விசேஷம்

௨௪ மணி நேரம் ஆகாரம் தூக்கம் இல்லாம சோமவார விரதம் பண்றது உத்தமோத்தமம்

சோமவார விரதம் ஆரம்பிக்கிறது கார்த்திகை மாசத்திலேயோ தை மாசத்திலேயோ இருந்தா ரொம்ப நல்லது

சோமன், சோமஹா, ச உமஹா, உமையோடு சேர்ந்திருக்கிறவன் சோமன்

திங்கட்கிழமை காத்தால எழுந்திருந்து சுந்தரீஸ்வர பெருமாளையும் மீனாட்சி அம்பாளையும் ஸ்மரணம் பண்ணி முதல் முதலாக ஞான தீர்த்தத்துல விதிவத்தா ஸ்நானம் பண்ணனும்

அதுக்கப்புறம் சுப்ர வஸ்திரத்தை கட்டிக்கணும்

சிவலிங்கத்துல பூஜை பண்ணனும்

சரியான பூஜா விதி தெரியலைன்னா தெரிஞ்ச ஆள வச்சு பண்ண வைக்கணும்

மத்தியானம் ஒருவேளை சாப்பிட்டு ராத்திரி ஒருக்கையில் இருந்தா மத்தியானத்துக்கு முன்னாடி பூஜை பண்ணனும்

ராத்திரி சாப்பிடாத இருக்கிறவாளும் முழுநாள் பட்டினியா இருக்கிறவாளும் ராத்திரி பூஜை பண்ணனும்

சோமவார விரத பூஜையில வெள்ளை புஷ்பங்கள் பிரதானம்

ஆனா ரொம்ப பிரதானம் வில்வம்

ஓம் நமச்சிவாய என்கிற பஞ்சாட்சர மந்திரத்தினால வில்வ பத்திரத்தினால பூஜை பண்ணனும்

அஞ்சு மகா பாதகங்கள் பண்ணுனவாளுக்கு கூட அதிலிருந்து முக்தி கிடைக்கும்

வில்வம் ரொம்ப சக்தி உள்ளது

வில்வத்தை பார்க்கிறது, தொடுறது, கும்பிடுறது இதெல்லாம் பண்ணுனா அந்த நாள் பண்ண பாவம் முழுவதும் நசிக்கும்

மரண காலத்துல யாரு வில்வ மூலத்துல இருக்கக்கூடிய மண்ணெடுத்து விபூதி மாதிரி இட்டுக்கிறாளோ, அவாளுக்கு சிவ சாயுஜ்யம் கிடைக்கும்

சோமவார விரதத்தின் போது தியானிக்க வேண்டிய சிவ சொரூபம் சிவனும் பார்வதியும் சேர்ந்தது

மகாதேவரை, கோடி சூரிய பிரகாசத்தோடையும், கோடி சந்திரனோட குளிர்ச்சியோடையும் ஒரே சமயத்துல இருக்கிறதாக நினைக்கணும்

சுவாமிக்கு அஞ்சு முகம்

அந்த அஞ்சு முகத்திலேயும் சேர்ந்து ௧௫ கண்ணு

பத்து கை

அந்த பத்து கைகள்ல சூலம், பரசு, வாள், வஜ்ராயுதம், அபயமுத்ரை, பாஷம், நாகம், அங்குஷம், மணி, அக்னி

திவ்யமான வஸ்திரங்கள்

சர்ப்பத்தையே யக்ஞோபவீதமா போட்டுண்டு இருக்கார்

நெற்றியில சந்திரக்கலை

கிரீடம், குண்டலம், ஹாரங்கள்

இதெல்லாம் சேர்ந்து கௌரி சமேதனா இருக்கிறதாக தியானம் பண்ணோம்

பூஜையில அப்பம், வடை, பாயசம், பழம் எல்லாம் நைவேத்தியம் பண்ணலாம்

பூஜை பண்ணி சுவாமிகிட்டயும் அம்பாள் கிட்டயும் இருக்கக்கூடிய அபேஷங்கள் எல்லாம் பிரார்த்திக்கணும்

சோமவார விரதம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அதோட காலாவதியை முடிவு பண்ணனும்

ஒரு வருஷம், ரெண்டு வருஷம், மூணு வருஷம், 12 வருஷம் இல்லைன்னா ஜீவன் இருக்கிற வரைக்கும்

ஒரு வருஷம், ரெண்டு வருஷம், மூணு வருஷம் இல்லைன்னா ௧௨ வருஷம் பண்றவா, அது முடிச்சதும் விரதத்தை விதியா உத்தியாபனம் பண்ணனும்

வெள்ளியால ௩௦, ௨௦ இல்லைன்னா ௧௦ பவன் தூக்கத்துல சிவபெருமாளோட பிரதிமை பண்ணனும்

நாலு கைகள்ல மான், பரசு, அபய முதிரை, பரத முதிரை இந்த மாதிரி பிரதிமை உருவாக்கணும்

உத்தியாபனத்துக்கு முதல் நாள் உரிக்கல்

அன்னைக்கு திவசம் முழுவதுமா சிவபுராணம் ஸ்ரவணம் பண்ணோம்

ராத்திரி நாலியாமம், சிவஸ்தோத்திர பாராயணம், பூஜை, பிரதக்ஷிணம்

உத்யாபனத்துக்கு ஒரு நல்ல மண்டபம் உருவாக்கணும்

அலங்காரங்கள், தோரணங்கள் எல்லாம் சேர்ந்த ஒரு மண்டபம்

அந்த மண்டபத்துல ஒரு பீடம் வச்சு கங்காஜலம் நிறைச்ச கலசத்திலேயோ, சிவலிங்கத்திலேயோ சுவாமியை அம்பாளையும் பூஜை பண்ணனும்

பக்கத்துல அந்த வெள்ளி பிரதிமையை வச்சு அதுக்கும் பூஜை பண்ணனும்

பஞ்சாமிருதத்தினாலேயும் பஞ்சகவ்யத்தினாலேயும் அபிஷேகம் பண்ணனும்

ராத்திரி நாலு யாமத்திலேயும் ஹோமம் பண்ணோம்

மிருத்யுஞ்சய மந்திரத்தினாலே 108 ஆவிருத்தி ஹோமம்

முதல் யாமத்தில நெய், ரெண்டாவது யாமத்தில சர்க்கரை

மூணாவது யாமத்துல திருப்பி நெய்

நாலாவது யாமத்துல பாயாசம்

கார்த்தால குளிச்சு திருப்பியும் அன்னவும் நெய்யும் சேர்த்து 108வது ஹோமம்

மண்டபத்துல ௧௩ பால் குடங்களை வச்சு வேதம் தெரியுற பிராமணால பூஜை பண்ணி அன்னம் வெல்லம்

நெய் இதெல்லாம் வச்சு அந்த குடங்களை தானம் பண்ணனும்

குருநாதருக்கு பாத பூஜை பண்ணனும்

ராத்திரி இரண்டாவது யாமத்துல தம்பதி பூஜை பண்ணனும்

மறுநாள் காத்தால ஸ்நானமானதும் அந்த வெள்ளி பிரதிமையை வஸ்திரம், தட்சிணை இதெல்லாம் வச்சு குருநாதருக்கு தானம் பண்ணனும்

ஒரு பசுமாடு குழம்பில வெள்ளியும் கொம்புல கனகவும் வாலுல முத்து மாலையை அலங்காரம் பண்ணி

கன்னுக்குட்டியையும் கரக்கர பாத்திரத்தையும் சேர்த்து தானம் பண்ணனும்

அவாவா சக்திக்கு தகுந்தபடியா மத்த தானங்களும் பண்ணலாம்

இந்த தானங்கள் எல்லாம் பண்ணி மறுநாளைக்கு பந்துக்களும் நண்பர்களும் எல்லாரும் சேர்ந்து பாரணை பண்ணி விரதத்தை முடிக்கணும்

பாரணைனா விரதம் முடிச்சு பண்ற ஆகாரம்

பிரம்மாவும் பெருமாளும் வரை சோமவார விரதம் பண்ணிருக்கா

தனம், தானியம், சம்பத்து, வம்ச விருத்தி இதுக்கெல்லாம் சோமவார விரதம் ரொம்பவே விசேஷமானது

ஹாலாஸ்ய நாதாய நமஹ 

  • சோமவார விரதத்தின் பெயரிலேயே பொதிந்துள்ள தத்துவார்த்தமான உட்பொருள் யாது?
    சோமன் என்னும் சொல்லிற்குச் ச உமஹா என்று பொருள். உமையவளாகிய பார்வதி தேவியுடன் கூடிய சிவபெருமான் என்பதே இதன் உட்பொருள். எனவே, திங்கட்கிழமை சிவனை மட்டும் வழிபடாமல், அம்மையப்பராகச் சேர்த்து வழிபடுவதே இவ்விரதத்தின் அடிப்படை ரகசியமாகும்.
  • சிவ வழிபாட்டில் வில்வத்திற்கு ஏன் இத்தனை அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?
    வில்வம் சிவபெருமானின் திருவுருவமாகவே கருதப்படுகிறது. வில்வத்தைத் தொடுவதும், காண்பதும், பூஜிப்பதும் ஒருவன் அன்றைய தினம் செய்த பாவங்களை வேரோடு நசிக்கும் ஆற்றல் கொண்டது. மரண தறுவாயில் வில்வ மரத்தின் அடியில் இருக்கும் மண்ணை எடுத்துத் திருநீறாக அணிந்து கொள்வோருக்குச் சிவ சாயுஜ்யம் எனும் முக்தி நிலை கிட்டும் என்பது இதன் மறைபொருள்.
  • சோமவார விரதத்தின் போது தியானிக்க வேண்டிய சிவ சொரூபத்தின் தனிச்சிறப்பு என்ன?
    சிவபெருமான் ஒரே சமயத்தில் கோடி சூரியப் பிரகாசத்துடனும், கோடி சந்திரனின் குளிர்ச்சியுடனும் விளங்குவதாகத் தியானிக்க வேண்டும். அவனது ஐந்து முகங்களில் உள்ள பதினைந்து கண்கள் மற்றும் பத்து கரங்கள் ஏந்தியிருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் சகல ஆற்றல்களையும் ஒரு புள்ளியில் இணைப்பதைக் குறிக்கின்றன.
  • இவ்விரத முறையில் கூறப்பட்டுள்ள உத்தமோத்தமம் எனப்படும் உயர்ந்த நிலை எது?
    திங்கட்கிழமை அதிகாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இருபத்தி நான்கு மணி நேரமும் உணவு உட்கொள்ளாமலும், உறங்காமலும் சிவ சிந்தனையிலேயே இருப்பது உத்தமோத்தமம் எனப்படும் மேலான நிலையாகும். இது உடலையும் மனதையும் முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்கும் செயலாகும்.
  • பஞ்சாட்சர மந்திரத்தின் வலிமை சோமவார விரதத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது?
    ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது, ஒருவன் செய்த ஐந்து மகா பாதகங்களிலிருந்து கூட அவனுக்கு விடுதலையை அளிக்கும் வல்லமை கொண்டது. இது மந்திரத்திற்கும் சிவவடிவமான வில்வத்திற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பைக் காட்டுகிறது.
  • விரதத்தை நிறைவு செய்யும் உத்யாபனச் சடங்கில் வெள்ளிப் பிரதிமையின் முக்கியத்துவம் யாது?
    ஒருவன் தன் சக்திக்கு ஏற்ப குறிப்பிட்ட எடை கொண்ட வெள்ளியில் சிவபெருமானின் உருவத்தைச் செய்து வழிபட வேண்டும். நான்கு கரங்களில் மான், மழு ஏந்தி அபய மற்றும் வரத முத்திரைகளைத் தாங்கிய அந்தப் பிரதிமையை முறையாகப் பூஜித்துத் தானம் செய்வது, செய்த விரதத்தின் பலனைப் பன்மடங்காகப் பெருக்குகிறது.
  • உத்யாபனத்தின் போது செய்யப்படும் நான்கு யாம ஹோமங்களின் ரகசியம் என்ன?
    நான்கு யாமங்களிலும் மிருத்யுஞ்சய மந்திரத்தைக் கொண்டு 108 ஆவிருத்தி ஹோமம் செய்ய வேண்டும். ஒவ்வொரு யாமத்திலும் நெய், சர்க்கரை, மீண்டும் நெய், பின்னர் பாயசம் என முறையே ஆகுதி கொடுப்பது, மனிதனின் நான்கு விதமான உணர்வுகளையும் இறைத்தீயில் அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.
  • விரத நிறைவில் பசு தானம் செய்வதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன?
    பசுவின் குழம்பில் வெள்ளியும், கொம்பில் தங்கமும், வாலில் முத்து மாலையும் சூட்டி, கன்றுடனும் கறவை பாத்திரத்துடனும் தானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும். இது உலகியல் ரீதியான செல்வத்தையும், ஆன்மீக ரீதியான உயர்வையும் ஒருசேர வழங்கும் ஈடற்ற அறச்செயலாகும்.
  • சோமவார விரதத்தை எக்காலங்களில் தொடங்கினால் கூடுதல் பலன்கள் கிட்டும்?
    கார்த்திகை மாதம் அல்லது தை மாதம் சோமவார விரதத்தைத் தொடங்குவதற்கு மிகவும் உகந்த காலங்களாகும். இயற்கை மாறுதல்களும் ஆன்மீக அதிர்வுகளும் ஒருமித்திருக்கும் இக்காலத்தில் தொடங்கும் விரதம் எளிதில் சித்தியடையும் என்பது பெரியோர் வாக்கு.
  • இவ்விரதத்தை மேற்கொள்வதால் ஒருவனுக்குக் கிடைக்கும் இறுதிப்பயன் யாது?
    பிரம்மா மற்றும் விஷ்ணு கூட அனுஷ்டித்த பெருமை கொண்டது இந்தச் சோமவார விரதம். இதனை முறையாகக் கடைப்பிடிப்பவர்களுக்குத் தனம், தானியம், சந்தான விருத்தி போன்ற உலகியல் நன்மைகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், முடிவில் பிறவிப் பிணி நீங்கிப் பரமேஸ்வரனின் திருவடி நிழலை அடையும் முக்திப் பேறும் கிட்டும்.
தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies