ஸுந்தரேஸ்வர பெருமாள் சித்தராக வருகிறார்

0:00 0:00

ஸுந்தரேஸ்வர பெருமாள் சித்தராக வருகிறார்

 

  • ஒருக்கா சுந்தரேஸ்வர பெருமான் ஒரு சித்தரோட வேஷத்துல மதுரையில பிரகடனமானார். 16 வயசு, இடுப்புல புலித்தோல், செம்ப நிறத்துல ஜடை, அத பாம்பால கட்டி வச்சிருக்கார். கையில சொர்ண தண்டம், உடம்பெல்லாம் பஸ்மம், ஒரே தேஜஸ்வி. மதுரையோட வீதிகள்ல நடந்து அற்புதங்கள் பண்ணிண்டே இருந்தார் சித்தர். மக்களெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டுண்டா. வயசானவா வந்து இளமையைக் கேட்டா சித்தர் அவ தலையில கை வெப்பர், அவ இளைஞரா மாறுவா. குழந்தைகளில்லாத பெண்களுக்கு நெத்தியில விபூதி இட்டு விடுவார், அவளுக்குக் குழந்தை பிறக்கும். பார்வையற்றவாளுக்கு பார்வை, காது கேட்காதவாளுக்குக் கேள்வி எல்லாம் கொடுத்தார். தன்னோட தண்டத்தினால ஒரு அடி கொடுத்தா மகா வியாதிகளெல்லாம் ஓடியே போயிடும். பூனையை புலியாகவும் நாயை நரியாகவும் மாத்திக் காமிச்சார். பனைமரத்தை தென்னைமரமா மாத்திக் காமிச்சார், பூ இல்லாத மரங்கள்ல பூவை வரவழைச்சார். தூரே இருக்கிற மலைகளை பக்கத்துல கொண்டு வந்து அத கையில எடுத்து விளையாடினார். வைகையில இருக்கக்கூடிய தண்ணி எல்லாம் ஒரு நிமிஷத்துல வற்ற வச்சார், அடுத்த நிமிஷம் திருப்பிக் கொண்டு வந்தார். அவர் சொன்னா மேகங்கள் அப்ப மழை பொழியும், நிறுத்தச் சொன்னா நிறுத்தும், எல்லாரும் ஆச்சரியப்பட்டுண்டா.

    அபிஷேக பாண்டிய அரசனுக்கு இந்த சித்தரைப் பத்தி தெரிய வந்தது, அரண்மனைக்கு அழைச்சுண்டு வரச் சொன்னார். மந்திரிகள் போய் சித்தரை வரச் சொன்னார். அதற்கு சித்தர், "அவர் பெரிய அரசன், நான் ஒரு பிச்சை, சந்தித்து என்ன பிரயோஜனம்?" என்று கூறி மறுத்துவிட்டார். அரசனும் பேசாம விட்டு விட்டார். சுந்தரேஸ்வர பெருமான் கோவில்ல வாயு மூலையில ஒரு கல்லு யானை இருக்கு, ஒருக்கா அரசன் பூஜை பண்ண வந்தபோது அந்த சித்தர் அந்த யானை பக்கத்துல உட்கார்ந்து இருந்தார். அரசனோட பிருத்யா, "அரசன் வரார் வழி விட்டு மாறுங்கோ" அப்படின்னு சொன்னார். சித்தர் கண்டுக்கவே இல்ல. பாண்டியன் கேட்டார், "நீங்க யாரு? எதுக்கு இங்க வந்திருக்கேள்?". அதற்கு அவர், "நான் ஒரு பிக்ஷாம்தேஹி, ஹிமாலயத்தில இருந்து வந்திருக்கேன், ஊர் ஊராச் சுற்றிண்டிருப்பேன், இந்த மஹாலிங்கத்தோட தர்சனம் பண்ண இங்க வந்திருக்கேன், எனக்கு சில வித்தையெல்லாம் தெரியும், அத வச்சு மக்களுக்கு உதவி பண்ணிண்டிருக்கேன்" என்றார். அரசன் கேட்டார், "அப்படி என்ன வித்தை தெரியும் உங்களுக்கு?" அரசனுக்கு அவர் பேச்சு ரொம்பப் பிடிக்கல.

    இதுக்குள்ள அங்க ஒரு விவசாயி வந்தான், அரசனிடம் ஒரு கரும்பை வச்சு கும்பிட்டான், அந்த கரும்பு உடனே ஒரு தங்க தண்டமா மாறுது. ரத்தினங்கள் பதிச்ச ஒரு தங்கத் தண்டம். அரசன் சொன்னார், "அவ்வளவு சாமர்த்தியம் இருந்தா இந்தக் கல்லு யானையால இந்தத் தங்கக் கரும்பைச் சாப்பிட வையுங்கோ, நான் உங்களுக்கு என்ன வேணும்னாலும் சாதிச்சுக் கொடுக்கிறேன்". சித்தர் சொன்னார், "எனக்கு எதுவும் சாதிச்சுக் கொடுக்க வேண்டாம் ஆனா பாருங்கோ" அப்படின்னு சொல்லி அந்த கல்லு யானைகிட்ட, "அந்தத் தங்கக் கரும்பை வாங்கிச் சாப்பிடு" என்று சொன்னார். கல்லு யானை அதை வாங்கிச் சாப்பிட்டது, அப்புறம் அரசன் கழுத்துல இருந்த முத்து மாலையையும் எடுத்துச் சாப்பிட்டது. அபிஷேக பாண்டியன் அப்படியே சித்தர் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணார். "உனக்கு என்ன வேணும்?" கேட்டார் சித்தர். "நல்ல புத்திரன் பிறக்க அருள் பண்ணுங்கோ" அப்படின்னு அரசன் கேட்டுக் கொண்டார். "அப்படியே ஆகட்டும்" என்று அருள் பண்ணி அந்தச் சித்தர் மூலலிங்கத்திலேயே போய் லயமானார். அபிஷேக பாண்டியனுக்கு விக்கிரம பாண்டியன்னு ஒரு சத்புத்திரன் பிறந்தான்.

 

தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies