மஹிஷியின் பூர்வசரித்திரம்

0:00 0:00

மஹிஷியின் பூர்வசரித்திரம்

பிருகஸ்பதி கரம்பிகையோட பூர்வ சரித்திரம் சொல்ல ஆரம்பிச்சார்

இந்த கரம்பிகை பார்க்கிற மாதிரி கேவல ஒரு மஹிஷி இல்லை

இவள் ரொம்ப சக்திசாலி

பிரம்மா கிட்ட இருந்து வரம் வாங்கி இருக்கா

தபஸ் பண்ணி

ஆயிரம் வருஷம்

இவளை அழிக்கிறதுக்கு இப்போதைக்கு இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒரு சக்தியாலே ஆகாது

இவளோட நேருக்கு நேரா யுத்தம் பண்ண யாராலயும் முடியாது

ஒருக்கா திரிமூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இவ மூணு பேரும் பாற்கடல் தீரத்திலிருந்து விசாரம் பண்ணா

கலியுகம் வரப்போறது

ரொம்ப உக்கிரமான காலம் கலியுகம்

கலி தாபத்துல லோகங்கள் எல்லாம் வெந்து உருகும்

இந்த கலியோட சூட எப்படி குறைக்கிறது? இந்த லோகங்களை எப்படி காப்பாத்துறது? அப்படின்னு மூணு பேரும் சேர்ந்து விசாரம் பண்ணா

மூணு பேரும் சேர்ந்து மூணு பேரோடையும் சக்தியை சேர்த்து ஒரு அம்சாவதாரத்தை உருவாக்கினான்

அவர்தான் தத்தாத்ரேயர்

அழகு, ஞானம், தைரியம் எல்லாத்துலையும் முதல் இடத்தில் உள்ளவர்

அந்த பக்கம் சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவாளோட சக்திகளை சேர்த்து இன்னொரு அம்சாவதாரத்தை உருவாக்கினா

ஒரு கன்னிகை

அந்த கன்னிகையை காலவ முனிகிட்ட ஒப்படைச்சா

காலவ முனி அந்த கன்னிகைக்கு லீலைன்னு நாமகரணம் பண்ணி தன்னுடைய சொந்த பொண்ணை போல பாதுகாத்தார்

லீலையை காலவ முனி தத்தாத்ரேயருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தார்

ரெண்டு பேரும் சந்தோஷமா கொஞ்ச நாள் இருந்தா

இதுக்கு நடுவுல கார்த்தவீரியார்ஜுனனுக்கு அருள் கொடுத்த மாதிரி அதிசயங்கள் எல்லாம் நடந்தது

தத்தர் சொன்னார், லௌகிக விவகாரங்கள் எல்லாம் ரொம்ப நிறைய ஆயாச்சு

இதனால எல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை

இனிமே சந்நியாசம் எடுத்துக்குறோம்

தபஸ் பண்றோம்

மோக்ஷ பிராப்திக்காக பிரயத்னம் பண்றோம்

லீலைக்கு ஒரே அதிர்ச்சி ஆச்சு

இந்த சின்ன வயசுலேயே தபஸா? சந்நியாசமா? வாழ்க்கை மகிழ இப்பதான் ஆரம்பிச்சதே

அதுக்குள்ள சந்நியாசமா? லீலைக்கு அதிர்ச்சியும் கோபமும் எல்லாம் வந்தது

லீலை திருப்பி திருப்பி சொல்லிட்டே இருந்தா

ஒரு ஸ்திரீக்கு என்ன வேணாங்கிறது தெரியாம நீங்க இப்படி பேசுறாள்

தப்பு பண்றேள்

என்னோட வாழ்க்கை இப்பதான் ஆரம்பிச்சிருக்கு

நமக்கு கணவன் மனைவியா சுகமா சந்தோஷமா இருக்கிறோம்

எதுக்கு இந்த சந்நியாசம்? எதுக்கு இந்த வைராக்கியம்? வாழ்க்கை இப்பவே நன்னா தானே இருக்கு

நான் உங்க மஹிஷி

எனக்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டியது

உங்களோட கடமை

மஹிஷி என்கிற சப்தத்துக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு சம்ஸ்கிருதத்துல

ஒன்னு எருமை

மஹிஷ யோஷித்

ரெண்டு பத்தினி

கிருதாபிஷேகா ராஜபத்தினி

தத்தர் சொன்னார்

உன்னோட உடம்பில் இருக்கக்கூடிய இந்த காமம், போகத்துக்காக இருக்கக்கூடிய விருப்பம் ரொம்ப பெரிய விபத்து

ஏற்கனவே வாழ்க்கையில நம்ம நிறைய மகிழ்ச்சி பண்ணியாச்சு

அக்னியை மூட்டி அதனால எந்த வேலை இருக்கோ அதை முடிச்சாச்சுன்னா, அந்த அக்னியை போற இடத்துல எல்லாம் எடுத்துண்டு போகக்கூடாது

தீதான் பிடிக்கும்

எல்லாத்துக்கும் ஒரு இடமும் வேலையும் இருக்கு

அங்க வரத்தான் அப்ப வரத்தான் அத வச்சுக்கணும்

அக்னிக்கு ஒருக்காலும் விரகால திருப்தி வராது

போட போட அது ஜாஸ்தி எரிஞ்சுண்டே இருக்கும்

இந்த சுகங்களுக்கெல்லாம் ஒரு மூலியமும் இல்ல

இந்திரிய சுகம் கடைசியில பார்த்தா ரோகங்களை தான் கொடுக்கும்

இதையெல்லாம் விட்டு பரமபதத்துக்காக தபஸ் பண்ணுறதுதான் ஸ்ரேயஸ்கரம்

லீலை அப்பவும் சொல்லிண்டே இருந்தா

நான் உங்களோட மஹிஷி

மறக்காதுங்கோ

மஹிஷிக்கு சுகத்தை கொடுக்க வேண்டியது உங்களோட கடமை

தத்தருக்கு ஒரே கோவம் வந்து

சரி அப்படித்தான் நீ ஒரு மஹிஷியே ஆகி பொறப்பாய்

சாபம் கொடுத்தார் தத்தர்

இங்கே மஹிஷினா எருமை

சாபத்தை கொடுத்து தத்தாத்ரேயர் வனத்துக்கு கிளம்பி போயிட்டார்

லீலைக்கு துக்கம் தாங்கல

லீலையும் தத்தருக்கு சாபம் கொடுத்தா

பெரிய தர்மம் பேசுறேளே! கணவனோட தர்மம் தெரியாத நீங்களும் ஒரு மஹிஷமா பொறப்பேள்

இந்த லீலைதான் கரம்பனோட பொண் கரம்பியா பொறந்து இப்ப சொர்க்கத்தை ஆக்கிரமனம் பண்ணி உக்காந்து இருக்கா

பார்த்தா சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவிகளோட அம்சாவதாரம்

தத்தரோட பத்தினி லீலையோட புனர்ஜென்மம்

சுவாமியே சரணமையாப்பள்ளி

 

  • பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முமூர்த்திகள் ஒன்றிணைந்து தத்தாத்ரேயரை உருவாக்கியதன் முதன்மையான நோக்கம் யாது?
    வரப்போகும் கலியுகத்தின் உக்கிரமான கலிதாபத்தினால் உலகங்கள் வெந்து உருகாமல் காக்கவும், அந்த வெப்பத்தைத் தணித்து லோகங்களைக் காப்பாற்றவும் முமூர்த்திகள் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து தத்தாத்ரேயரை அம்சாவதாரமாக உருவாக்கினர்.
  • தத்தாத்ரேயரின் மனைவியான லீலையின் தோற்றம் மற்றும் வளர்ப்பு குறித்த ரகசியம் என்ன?
    தத்தாத்ரேயரைப் போலவே, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முத்தேவிகளும் தங்கள் சக்திகளைச் சேர்த்து ஒரு கன்னிகையை உருவாக்கினர். அவளே லீலை. இவள் காலவ முனிவரால் வளர்க்கப்பட்டு, பின்னர் தத்தாத்ரேயருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள்.
  • தத்தாத்ரேயர் இல்லற வாழ்வைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ளத் துணிந்தபோது லீலை முன்வைத்த வாதம் என்ன?
    லௌகிக வாழ்வு இப்பதான் தொடங்கியுள்ளது என்றும், ஒரு பத்தினிக்கு (மஹிஷி) மகிழ்ச்சி அளிக்க வேண்டியது கணவனின் கடமை என்றும் லீலை வாதிட்டாள். ஆன்மீக வைராக்கியத்தை விட இல்லறக் கடமையே முக்கியம் என்பது அவளது வாதமாக இருந்தது.
  • மஹிஷி என்ற சொல்லுக்கு தத்தாத்ரேயர் மற்றும் லீலையின் உரையாடலில் வெளிப்படும் இருவேறு பொருள்கள் யாவை?
    சமஸ்கிருதத்தில் மஹிஷி என்பதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று, முறைப்படி பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அரசபத்தினி (மனைவி). இரண்டாவது, எருமை. இந்தச் சொல்லே அந்தச் சரித்திரத்தில் சாபத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
  • புலன் இன்பங்களை அக்னியுடன் ஒப்பிட்டு தத்தாத்ரேயர் கூறிய தத்துவம் யாது?
    அக்னியில் விறகுகளைப் போடப் போட அது எப்படி அடங்காமல் எரியுமோ, அவ்வாறே புலன் இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க ஆசை வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர திருப்தி ஏற்படாது. இன்பங்கள் இறுதியில் நோய்களையே தரும் என்பதே தத்தரின் உபதேசம்.
  • லீலை எருமையாகப் பிறக்க தத்தாத்ரேயர் சாபமிட்டதற்குக் காரணம் என்ன?
    சந்நியாசத்தின் மேன்மையை உணராமல், தன்னை வெறும் போகப் பொருளாகக் கருதி 'மஹிஷி' (மனைவி) என்ற உரிமையைக் கோரியதால், நீ அந்தப் பெயருக்குரிய மற்றுமொரு பொருளான 'மஹிஷி'யாக (எருமை) பிறப்பாய் என சினந்து சாபமிட்டார்.
  • தத்தாத்ரேயருக்கு லீலை அளித்த எதிர்ச் சாபம் எத்தகையது?
    மனைவியின் தர்மத்தைப் புரிந்துகொள்ளாத நீங்களும் ஒரு மஹிஷமாக (ஆண் எருமை) பிறப்பீர்கள் என்று லீலை தத்தாத்ரேயருக்குப் பதில் சாபமிட்டாள்.
  • தற்போது சொர்க்கத்தை ஆக்கிரமித்துள்ள கரம்பி என்பவளுக்கும் லீலைக்கும் உள்ள தொடர்பு யாது?
    முத்தேவிகளின் அம்சமாகத் தோன்றி, தத்தாத்ரேயரின் மனைவியாக வாழ்ந்த லீலையே, சாபத்தின் விளைவாக கரம்பனின் மகளாக, கரம்பியாக மறுபிறவி எடுத்து சொர்க்கத்தை ஆக்கிரமித்துள்ளாள்.
  • கரம்பியை தற்போது எந்த ஒரு சக்தியாலும் அழிக்க முடியாமல் போவதற்கு என்ன காரணம்?
    கரம்பி பிரம்மாவிடம் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து அரிய வரங்களைப் பெற்றுள்ளாள். அவளது பூர்வ சரித்திரம் முத்தேவிகளின் அம்சம் கொண்டதாக இருப்பதாலும், அவளது தவ வலிமையாலும் அவளை நேருக்கு நேர் வெல்வது எவருக்கும் கடினமாக உள்ளது.
  • இந்தச் சரித்திரம் உணர்த்தும் மறைபொருளான உண்மை யாது?
    தெய்வ அம்சங்களே ஆனாலும், கர்ம வினையின் பிடியிலிருந்தும் சாபத்தின் விளைவிலிருந்தும் தப்ப முடியாது என்பதையும்; காமம் மற்றும் பற்று ஆகியவை ஞானிகளையும் கூடச் சீண்டக்கூடும் என்பதையும், முறையான தர்மத்தைப் பின்பற்றாதபோது உயர்ந்த சக்திகளும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.
தமிழ்

தமிழ்

ஐயப்பன்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies