மஹிஷாஸுரனின் பிறப்பு

0:00 0:00

மஹிஷாஸுரனின் பிறப்பு

தானவாளுக்கெல்லாம் தாயார் தனு. தனுவுக்கு ரெண்டு பசங்க இருந்தா - ரம்பன் மற்றும் கரம்பன். கல்யாணம் பண்ணி நிறைய நாள் ஆயிட்டும் அவாளுக்கு குழந்தை பிறக்கல. புத்திர பிராப்திக்காக ரெண்டு பேரும் தபஸ் பண்ண ஆரம்பிச்சா.

பஞ்சவாகினினு ஒரு நதி, அதோட கரையில பஞ்சாக்னி மத்தியத்துல ரம்பன்; பஞ்சாக்னினா நாலு திசையிலயும் சுற்றும் அக்னி, மேல சூரியன். கரம்பன் நதியில இறங்கி நின்னும் தபசு பண்ணான்.

கோரமான தபஸ பாத்ததும் இந்திரனுக்கு தன்னுடைய ஸ்தானம் போயிடுமோனு பயமாச்சு. இந்திரன்குறது ஒரு ஸ்தானம் தான். 100 யக்ஞம் பண்ணா அதோட புண்ணியத்தினால இந்திர பதவி கிடைக்கும். அதனால யாரையாவது தீவிரமா தபஸ் பண்ணறத பாக்கும்போது இந்திரனுக்கு பயம் வந்துடும். ஒரு முதலையாக வந்து இந்திரன் கரம்பன கடிச்சு கொன்னுட்டார்.

இத பாத்ததும் ரம்பனும் வருத்தப்பட்டுண்டு தற்கொலை பண்ணிக்க தன்னுடைய கழுத்துக்கு நேரே வாள ஓங்க துணிந்தான். உடனே அக்னி பகவான் வந்து ரம்பனோட கைய புடிச்சுட்டார். இப்படி பண்ணாத, உனக்கு எந்த ஆசை இருந்தாலும் நான் சாதிச்சு குடுக்கறேன் - அக்னி பகவான் ரம்பன்கிட்ட சொன்னார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மனுஷியாளுக்கும் என்ன அழிக்க சாமர்த்தியம் இருக்க கூடாதுனு ரம்பன் கேட்டுக்கொண்டான். ரம்பனுக்கு அந்த வரம் கிடைச்சது.

யக்ஷ லோகத்துல இருந்து ஒரு மகிஷிய - மகிஷினா எருமை. மகிஷிய கல்யாணம் பண்ணி நிறைய காலமிருந்தார் ரம்பன். அந்த மகிஷி கர்ப்பவதியா இருக்கும்போது ஒரு நாளைக்கு ஒரு மகிஷம் - ரொம்ப திமிரு பிடிச்ச ஒரு மகிஷம் - அந்த மகிஷி மேல ஆசையா வந்தது. தடுக்க போன ரம்பன அந்த மகிஷம் கொன்னுடுது. தேவர்களாலயும் அசுரர்களாலயும் மனுஷியாலாலேயும் ரம்பன வதிக்க முடியாதுனு தான் வரம். ஆனா இது மகிஷம் - மிருகம். மகிஷி பயந்துண்டு தன்னுடைய பொறந்தாத்துக்கு யக்ஷ லோகத்துக்கு ஓடி போயிட்டா.

அந்த மகிஷம் மகிஷிய துரத்திண்டே போச்சு. யக்ஷ லோகத்துல போய் சேர்ந்த உடனே அந்த மகிஷத்த யக்ஷர்களெல்லாமா வதிச்சா. ரம்பனோட உடம்ப சித தயார் பண்ணி எரிச்ச போது அந்த சிதயல குதிச்சு தன்னுடைய உயிர விட்டாள் மகிஷி. ஆனா மகிஷியோட கர்ப்பத்துல இருந்த குழந்தை அந்த சிதையில இருந்து வெளில வந்தது. பொறந்த உடனேயே அவன் ஒரு பலசாலியான தருணமா மாறி விட்டான். இது தான் மகிஷாசுரன்.

மகிஷாசுரன் பிரம்மாவ தபஸ் பண்ணி ப்ரீதி படுத்தினான். பிரம்மாகிட்ட தன்ன யாராலையும் வதிக்க முடியாது அப்டின்னு வரம் கேட்டான். ஆனா பிரம்மா பொறந்தா ஒரு நாளைக்கு எறந்து தான் ஆகணும், அதனால இப்படி ஒரு வரம் குடுக்க முடியாது அப்டின்னு சொன்னார். சரி அப்டின்னா ஒரு ஸ்த்ரியால தான் என்ன வதிக்க முடியும் - அப்டின்னு வரம் கேட்டான். பிரம்மா அந்த வரத்த குடுத்தார்.

திமிரு பிடிச்ச மகிஷாசுரன் இந்திரனையே சொர்க்கத்துல இருந்து தொரத்தி 14 லோகங்களையும் ஆள தொடங்கினான். எல்லாரும் அவனோட கொடுமையினால கஷ்டப்பட ஆரம்பிச்சா.

தமிழ்

தமிழ்

ஐயப்பன்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies