மயூரேஸ்வர கணபதி

0:00 0:00

மயூரேஸ்வர கணபதி

குரு கணேஷாப்யாம் நமஹ மயூரேஷாய நமஹ

மோரேஷ்வரம் மகாராஷ்டிரால மோர்காவ்னு ஒரு இடத்துல மயூரேஷ்வரரா இருக்கார் கணபதி

இத காணபத்திய தீர்த்தம்னும் பூஸ்வானந்தர்னும் சொல்லுவா

அஷ்ட விநாயக தர்சனங்கள்ல இவரைத்தான் முதல்ல தர்சனம் பண்ணனும்

முத்கல புராணத்துல ௨௨ அத்தியாயங்களால மயூரபுரின்னு இந்த இடத்தை பத்திதான் சொல்றார் முத்கல மஹர்ஷி

த்ரேதா யுகத்துல சிந்துங்கிற அசுரனை அழிக்கிறதுக்காக அவதாரம் எடுத்தவர் இந்த மயூரேஷ்வரர்

லேன்யாத்ரி என்கிற மலையில குகைக்குள்ள பார்வதி தபஸ் பண்ணிட்டு இருந்தா

அப்போ பார்வதிக்கு பொறந்தவர் மயூரேஸ்வரர்

இத ஆத்தியபீடம்னு சொல்லுவா

கணபதியோட எல்லா க்ஷேத்ரங்களிலும் முதல் முதலாக கட்டப்பட்ட க்ஷேத்ரம் இது

அதனால ஆத்திய பீடம்

கணபதியோட கோவில்களிலேயே ஸ்ரேஷ்டமான ஒரு கோவில்

18ஆம் நூற்றாண்டுல மராட்டா பேஷ்வா இவரைதான் தங்களோட குலதெய்வமா வணங்கிண்டு இருந்தா

கைலாசத்துல எப்படி சிவனோட சான்னித்தியம் எப்போதும் இருக்குமோ அதே மாதிரி இந்த மயூரபுரியில கணபதியோட சான்னித்தியம் எப்போதும் இருக்கும்

பூஸ்வானந்தம்

ஸ்வானந்த புவனம் கணபதியோட லோகம்

விஷ்ணுக்கு அப்படி வைகுண்டமோ அந்த மாதிரி கணபதியோட லோகம் ஸ்வானந்த புவனம்

இது பூஸ்வானந்தம் பூமியில இருக்கக்கூடிய கணபதியோட லோகம்

இந்த கணபதிக்கு ஆறு கைகள் வெள்ளை நிறம்

மயிலை தன்னோட வாகனமா வச்சுண்டு இருக்கிறதுனால மயூரேஸ்வரர்

சிவபெருமாள் லோகத்தை அழிக்கக்கூடிய விஷத்தை குடிச்சதுனால அவருக்கு கழுத்து நீளமாயிடுத்து

அதனால அவரை நீலகண்டன்னு சொல்றான்

மயிலுக்கும் கழுத்து நீளமா இருக்கு

மயிலுக்கும் நீலகண்டன்னு பேரு

அந்த மயில தன்னோட வாகனமா வச்சுண்டு கணபதி நான் சிவ தத்துவமே தான்னு எடுத்து காட்டுறார்

சிவன் எப்படி லோகத்தை அழிக்கக்கூடிய விஷத்தை குடிச்சு நம்ம எல்லாரையும் காப்பாத்தினாரோ, அதே மாதிரி கணபதி இந்த லோகத்துல இருக்கிற தீமையும் துரிதங்களையும் அழிச்சு நான் உங்களை காப்பாத்துவேன் அப்படின்னு எடுத்துக்காட்டுறார்

அந்த கோவில் முன்னாடி பார்த்தோம்னா ஒரு நந்திகேஸ்வரரோட சிலை இருக்கு

சாதாரணமா கணபதி கோவில்ல இருக்காது

அந்த கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற சிவன் கோவில்ல பிரதிஷ்டை பண்றதுக்காக எடுத்துண்டு போயிட்டு இருந்தாளாம்

அந்த நந்திகேஷ்வரர் அங்கேயே உட்கார்ந்துட்டார்

அதுக்கப்புறம் அவரை நகர்த்த முடியல

நந்திகேஷ்வரருக்கே தெரிஞ்சிடுத்து சிவன் பிரத்யக்ஷமா நேரா இருக்காரே இங்கேதான் நம்ம உட்காரணும்

உட்கார்ந்துட்டார்

சிவ தத்துவமே தான் இந்த கணபதி

ஆரம்பத்துல இவர் பார்வதி தேவிக்கு ஒரு சாதாரண குழந்தை மாதிரி பொறந்து சஸ்திர வித்தையும் சாஸ்திர வித்தையும் எல்லாம் கத்துண்டார்

அவருக்கு சிவன் குணேஷன்னு பேர் வச்சார்

எல்லா குணங்களுக்கும் ஈஷன்

சிந்து அசுரனை அழிக்கிற காலம் எப்ப வந்ததோ, அப்ப அழிக்கிறதுக்காக கிளம்பினார்

போகும்போது ஒரு மரத்துல போய் முட்டிண்டார்

ஒரு மயிலோட முட்டை வந்து கீழே விழுந்தது

ஒரு மயில் அதுல இருந்து வெளியில வந்தது

அந்த மயிலை தன்னோட வாகனமா எடுத்துண்டு அசுரனை அழிக்க போனார்

மயில்வாகனர் நம்ம முருகன் மாதிரி

சிந்து அசுரன் தபஸ் பண்ணி சூரியன்கிட்ட இருந்து வரமாக அமிர்தத்தோட ஒரு பாத்திரத்தை வாங்கி இருந்தான்

அதை குடிச்சிட்டு மூணு லோகங்களிலும் அக்கிரமம் பண்ணிட்டு இருந்தேன்

அவனை அழிக்கிறதுக்காக மயூரேஸ்வரரா அவதாரம் எடுத்த கணபதி அவனோட உடம்பை கிழிச்சு ஒரு சொட்டு அமிர்தம் கூட மிச்சம் இல்லாம எல்லாத்தையும் வெளியில எடுத்து அவனை அழிச்சார்

அப்பொழுது பிரம்மாவால் நிச்சயிக்கப்பட்டு கட்டப்பட்டதுதான் இந்த கோவில்

அவர்தான் கணபதிக்கு அபிஷேகம் பண்ணி பிரதிஷ்டை பண்ணார்

அவர் அபிஷேகம் பண்ண ஜலம்தான் இன்னைக்கு கர்ஹா நதியா அந்த ஊர்ல ஓடிண்டு இருக்கு

அந்த கோவில்ல நாலு கோபுரங்கள் இருக்கு

அங்க இருக்கக்கூடிய நாலு சிலைகள், நாலு புருஷார்த்தமும் இங்க வந்தா கிடைக்கும்னு எடுத்து காட்டுறது

கிழக்கு புறத்துல பால விநாயகர், ராமரோடையும் சீதையோடையும் இருக்கார்

அது தர்மம்

தெற்கு புறத்துல விக்னேஷ்வரர் சிவனோடையும் பார்வதியோடையும் இருக்கார்

அது அர்த்தம்

மேற்கு புறத்துல சிந்தாமணி கணபதி ரதியோடையும் காமதேவனோடையும் இருக்கார்

அது காமம்

வடக்கு கோபுரத்துல மகா கணபதி, வராக சுவாமியோடையும் பூமி தேவியோடையும் இருக்கார்

அது மோக்ஷம்

இப்படி நாலு புருஷார்த்தங்களையும் ஒரு தரிசனத்தினால கொடுக்கக்கூடிய கோவில் இந்த கோவில்

விசேஷமா இங்கே சுவாமி ருத்தியோடையும் சித்தியோடையும் தரிசனம் கொடுத்து அருள் பண்றார்

இப்படிப்பட்ட கணபதியை அந்த க்ஷேத்திரத்துல போய் தரிசனம் பண்ணா இருக்கக்கூடிய கஷ்டங்களும் வரப்போற கஷ்டங்களும் கட்டாயமாக நீங்கும்

மயூரேஷ்வராய நமஹ

 

  • அஷ்ட விநாயகர் திருத்தலங்களுள் மயூரேஸ்வரர் ஆலயம் முதன்மையானதாகக் கருதப்படுவதன் காரணம் யாது?
    கணபதியின் அனைத்துத் திருத்தலங்களிலும் முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்ட தலம் இதுவே என்பதால் இது ஆத்திய பீடம் என்று போற்றப்படுகிறது. மேலும் முத்கல புராணத்தின்படி கணபதி தத்துவத்தின் முழுமையான சாந்நித்தியம் நிலவும் இடமாக இது விளங்குவதால் அஷ்ட விநாயகர் தரிசனத்தில் இது முதலிடம் பெறுகிறது.
  • மயூரேஸ்வரரை பூஸ்வானந்தர் என்று அழைப்பதன் உட்பொருள் என்ன?
    கணபெருமானின் உறைவிடமான ஸ்வானந்த புவனம் என்பது வைகுண்டத்தைப் போன்றதொரு உன்னத லோகமாகும். அந்த ஸ்வானந்த புவனம் இந்தப் புவியில் மயூராபுரியாகத் திகழ்வதால் இங்கு உறையும் இறைவன் பூஸ்வானந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
  • கணபதியின் இந்த அவதாரத்தில் மயில் வாகனமாக அமைந்ததன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன?
    சிந்து என்ற அசுரனை அழிக்கப் புறப்பட்டபோது ஒரு முட்டையிலிருந்து வெளிப்பட்ட மயிலைத் தமக்கான வாகனமாகக் கணபதி ஏற்றார். நஞ்சினை உண்டு உலகைக் காத்த சிவபெருமான் நீலகண்டன் என்று அழைக்கப்படுவது போல நீலநிறக் கழுத்தைக் கொண்ட மயிலை வாகனமாகக் கொண்டு தாமும் சிவ தத்துவமே என்பதை மயூரேஸ்வரர் உணர்த்துகிறார்.
  • மயூரேஸ்வரர் ஆலயத்தின் முன் நந்திகேஸ்வரர் வீற்றிருப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் யாது?
    பொதுவாகச் சிவன் கோவில்களிலேயே நந்தி தேவர் பிரதிஷ்டை செய்யப்படுவார். ஆனால் இங்கு மயூரேஸ்வரர் சிவ தத்துவத்தின் வடிவமாகத் திகழ்வதை உணர்ந்த நந்திகேஸ்வரர் அங்கிருந்து நகர மறுத்து அங்கேயே அமர்ந்துவிட்டார். இது கணபதியும் சிவனும் வேறல்லர் என்ற அரிய உண்மையை மெய்ப்பிக்கிறது.
  • லேன்யாத்ரி மலைக்கும் மயூரேஸ்வரர் அவதாரத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
    திரேதா யுகத்தில் பார்வதி தேவி கணபதியை மகனாகப் பெற வேண்டி லேன்யாத்ரி மலைக் குகையில் தவமிருந்தார். அதன் பயனாக அன்னைக்குப் புதல்வனாக மயூரேஸ்வரர் அவதரித்தார். அங்கு அவர் கலைகளையும் ஆயுத வித்தைகளையும் பயின்றார் என்பது வரலாறு.
  • சிந்து என்ற அசுரனை வதம் செய்ய மயூரேஸ்வரர் கையாண்ட விசித்திரமான முறை யாது?
    சிந்து அசுரன் சூரியனிடமிருந்து பெற்ற அமிர்த கலசத்தைத் தனது வயிற்றில் கொண்டிருந்தான். மயூரேஸ்வரர் அவனது உடலைக் கிழித்து ஒரு துளி அமிர்தம் கூட எஞ்சாதவாறு வெளியேற்றி அவனை அழித்தார். இது தீமையின் வேரை முழுமையாக அகற்றும் பேராற்றலைக் குறிக்கிறது.
  • மயூராபுரியில் ஓடும் கர்ஹா நதியின் தோற்றம் குறித்துக் கூறப்படுவது யாது?
    சிந்து அசுரனை வதம் செய்த பிறகு பிரம்மதேவன் இத்தலத்தை நிர்மாணித்து கணபதிக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வித்தார். அந்தப் புனிதமான அபிஷேக நீரே இன்று கர்ஹா நதியாகத் தொடர்ந்து பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
  • இத்தலத்தின் நான்கு கோபுரங்களும் உணர்த்தும் வாழ்வியல் தத்துவங்கள் யாவை?
    இக்கோவிலின் நான்கு கோபுரங்களும் மனித வாழ்வின் நான்கு புருஷார்த்தங்களைக் குறிக்கின்றன. கிழக்கு தர்மத்தையும் தெற்கு அர்த்தத்தையும் (பொருள்) மேற்கு காமத்தையும் (விருப்பம்) வடக்கு மோட்சத்தையும் (வீடுபேறு) அருளும் விதமாகத் தெய்வத் திருவுருவங்களைக் கொண்டுள்ளன.
  • மராட்டியப் பேரரசின் வரலாற்றில் மயூரேஸ்வரருக்கு உள்ள இடம் என்ன?
    பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டியப் பேரரசின் வலிமைமிக்க பேஷ்வாக்கள் மயூரேஸ்வரரைத் தங்களின் குலதெய்வமாக ஏற்றுப் போற்றினர். அவர்களின் வெற்றியிலும் நிர்வாகத்திலும் இத்தெய்வத்தின் அருள் பெரும் துணையாக இருந்ததாக நம்பப்படுகிறது.
  • மயூரேஸ்வரர் தரிசனம் ஒரு பக்தனுக்கு எத்தகைய பலன்களை நல்கும்?
    மயூரேஸ்வரர் இங்கு சித்தி மற்றும் புத்தியுடன் இணைந்து காட்சியளிக்கிறார். இவரைத் தரிசிப்பதன் மூலம் ஒருவரது வாழ்வில் தற்போதுள்ள துயரங்கள் நீங்குவது மட்டுமன்றி வருங்காலத்தில் நேரவிருக்கும் தடைகளும் இன்னல்களும் வேரோடு அழியும் என்பது திண்ணம்.
தமிழ்

தமிழ்

கணபதி

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies