
குரும் கணேசம் கிரிஜாம் பிரணம்ய சிவம் மஹேசம் கருணாகராப்திம் பூதேஷமவ்யక్త சரீரமீஷம் ஹாலாஸ்யநாதம் சரணம் பிரபத்யே
மலையத்வஜன் பாண்டிய குலத்திலேயே தீபமா இருந்தார்
பாண்டிய குலத்துக்கு பூஷணம்
காமதேவன் அளவுக்கு அழகு
இந்திரன மாதிரி சௌரியம்
எல்லா சாஸ்திரங்களிலும் வித்வான்
பெரிய அறிவாளி
தன்னுடைய சரணத்தில் வருவோர்களை பாதுகாப்பவர்
இதுக்கெல்லாம் மேல சுந்தரேஷ்வர் பெருமாளோட பரம பக்தர்
சூரசேன ராஜாவோட புத்தி காஞ்சனமாலை அவரோட தர்மபத்னி
ஆனா கல்யாணமாகி நிறைய வருஷம் போயிட்டும் அந்த தம்பதிக்கு புத்திர பிராப்தி உண்டாகல
ரொம்ப வருத்தமான சூழ்நிலை
நிறைய பூஜைகளும் பரிகாரங்களும் பண்ணா
நிறைய விரதம், உபவாசம் எல்லாம் பண்ணா
கடைசியில தசரதன் பண்ண புத்திரகாமேஷ்டி யாகத்தையே பண்ணா
அந்த யாகத்திலிருந்து மீனாட்சி அம்பாள் ஒரு மூணு வயசு குழந்தையா அவதாரம் எடுத்து வெளியில வந்தா
வெளியில வந்த உடனே காஞ்சனமாலியோட மடியில அம்மான்னு கூப்பிட்டு உட்கார்ந்துண்டா
ஆனா அந்த குழந்தைக்கு மூணு ஸ்தனங்கள் இருந்தது
மலேத்வஜ பூபனுக்கு ஒரே வருத்தம்
கேட்டது புத்திரன, கிடைச்சது புத்திரி
அதுவும் ஒரு துர்லட்சணத்தோடு
ராஜாக்கு ஒரே வருத்தம்
நான் என்னதான் பாவம் பண்ணேனோ, பரமேஸ்வரருக்கு என் மேல எதனால கோபமோ, அந்த சமயத்துல ஒரு ஆகாஷவாணி கேட்டது
மலைத்வஜா கவலையே வேண்டாம்
இது சாக்ஷாத் ஜெகதீஸ்வரி மீனாட்சி அம்பாள்
லோகத்தை பரிபாலிக்கிறதுக்காக அவதாரம் எடுத்திருக்கா
உன்னோட புத்திரியாக, எப்பொழுது தன்னுடைய காந்தனை முதல் தடவை பார்க்கிறாளோ, அப்பொழுது அதிகமா இருக்கக்கூடிய ஸ்தனன் தானாகவே விழுந்து போயிடும்
கவலைப்படாத
இந்த குழந்தைக்கு ஜாதக கர்மாவை பண்ணி தடாதகான்னு நாமகரணமும் பண்ணு
இந்த குழந்தையினால பாண்டிய வம்சத்துக்கு எல்லா விதமான பெருமையும் சௌபாக்கியங்களும் வந்து சேரும்
இந்த அவதாரத்துக்கு ஒரு பூர்வ சரித்திரம் இருக்கு
விஸ்வாவசுன்னு ஒரு கந்தர்வன்
கந்தர்வாளுக்கு நேதா விஸ்வாவசு
அவருக்கு ஒரு புத்தி வித்யாவதி
ரொம்ப நல்லா பாடுவள்
அம்பாள் மேல ரொம்ப பக்தி
சந்தனாதி லேபனங்களுக்கும் ஆபரணங்களுக்கும் பதிலா உடம்புல ருத்ராட்சவும் விபூதியும் தாரணம் பண்ணாள் வித்யாவதி
பூர்ணா தன்னுடைய அப்பாகிட்ட கேட்டாள்
இந்த உலகத்திலேயே பரிபூரண சான்னித்தியம் இருக்கக்கூடிய பார்வதி கோவில் எது? விஸ்வாசு சொன்னார், ஒருக்கா பிரம்மா தராசோட ஒரு தட்டுல காசி, கைலாசம், ஸ்ரீசைலம் கூடிய க்ஷேத்திரங்களையும் மருதட்டுல ஆலாஸ்யமாகிய மதுரை சுந்தரேஷ்வரர் கோவிலையும் வைத்து தூக்கி பார்த்தாராம்
ஆலா சேர்ந்த தட்டு கீழே போச்சாம்
அப்படிப்பட்ட மதுரை க்ஷேத்திரத்தில ஒர்த்தாமர குளத்தோட தீரத்தில அருள் புரிந்து கொண்டிருக்கும் மீனாட்சி அம்பாள் கோவில்தான் கோவில்களிலேயே மட்டுமல்ல
சமஷ்ட லோகத்திலேயே அம்பாள் சாநித்யம் அதிகமா உள்ள இடம்
மோக்ஷ பிராப்திக்கு இதுக்கு மேல ஒரு இடம் இல்ல
இதை தொடர்ந்து அப்பாவோட அனுமதி வாங்கி வித்யாவதி ஒரு மகர சங்கிரமணத்துக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தா
சம்பத்சர விரதம் ஆரம்பிச்சா
ஒரு வருஷம் தினமும் அம்பாளுக்கு 108 கோடம் அபிஷேகம்
1008 நீல கமலத்தினால அர்ச்சனை
முதல் முதல்ல நித்திய ஒரு நேரம் சாப்பாடு
போக போக அதுவும் இல்ல
ஒரு நாளைக்கு பொருத்தாமர குளத்துல ஸ்நானம் பண்ணி அம்பாள் தரிசனம் பண்ணிட்டு இருந்த வித்யாவதிக்கு மீனாட்சி அம்பாள் ஒரு மூணு வயசு குழந்தையா பிரத்யக்ஷமானாள்
மஞ்ச பட்டு பாவாடை அணுந்திருந்தாள் அம்பாள்
உனக்கு என்ன வரம் வேணும் கேட்டா
வித்யாவதி அம்பாளோட பாதத்திலே அசஞ்சலமான பக்தியை வரமா கேட்டாள்
அப்புறம் இதே ரூபத்திலே அம்பாள் தன்னுடைய குழந்தையா பொறக்கணும் அப்படின்னு பிரார்த்திச்சாள்
அம்பாள் சொன்னா, வரக்கூடிய ஜென்மத்துல நீ பாண்டிய பூவனாகிய மலைத்வஜனோட மனைவி ஆவாய்
தற்பொழுது உத்திரகாமேஷ்டி பண்ணும்போது யாகாக்னியிலிருந்து நான் உத்பவமாகி உன்னோட குழந்தையா உன் கூடயே இருக்கிறேன்
உங்களோட அபீஷ்டத்தை எல்லாம் சாதிச்சு கொடுத்து கடைசியில மோக்ஷத்தையும் கொடுக்கிறேன்
அடுத்த ஜென்மத்துல வித்யாவதி காஞ்சன மாலையா பொறந்தா
அம்பாள் காஞ்சன மாலையோட புத்திரியா யாகாக்னியிலிருந்து அவதாரம் எடுத்தாள்
மலைத்வஜன் தடாதகைய புத்திரியா இல்ல புத்திரனாகவே வளர்த்தினார்
தனுர்வேதத்தையும் யுத்த கலகலையும் கத்துக்கொடுத்தார்
தடாதகைய ராஜ்யாபிஷேகம் பண்ணி பாண்டிய தேசத்துக்கு அதிபயா வாழ வச்சு உயிரிறந்தார் மலையத்வதன்
தடாதகை எல்லா சத்துர்களையும் ஜெயிச்சு புகழ் பெற்று பிரஜா பரிபாலனம் பண்ணினார்
ஹாலாஸ்யநாதாய நமஹ
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta