தூம்ராக்ஷனின் மனைவியின் அழிவு

0:00 0:00

தூம்ராக்ஷனின் மனைவியின் அழிவு

பல அசுரர்களை அழித்துவிட்டு சுவாமி ரதத்தை எடுத்துண்டு காசிராஜாவோட போயிண்டு இருந்தார். ஒரு அசுரன் பெரிய கல்லுக்குள்ள நுழைஞ்சு வேகமாக உருண்டு வந்துண்டு இருந்தார். சுவாமி ஒரு கோடாலி எடுத்து அவனோட மேல எறிஞ்சார். அந்த கல் அப்படியே பொடியாயிடுத்து. அதிலிருந்து கூடல் என்ற அசுரன் வெளியில வந்தார். நகரவாசிகள் எல்லாம் அவனை பார்த்து பயந்துட்டா. பெரிய உடம்பு, சிவந்த கண்கள், வெளியில வந்திருக்கிற பெரிய பற்கள். சுவாமி தன்னோட ஆயுதங்களால அவனை அடித்து அடித்து பூமியில வீழ்த்தினார்.

காசி நிவாசிகள் இதப் பார்த்து சொன்னா:

நராந்தகன் கிட்டேந்து இந்த பூமிக்கு முக்தி கொடுக்க ஒருத்தர் பிறந்தாச்சு. அவர் தான் மகோற்கடர்.

ராஜா சுவாமிக்கு ஷோடசோபசார பூஜையை செய்து அவரை அரண்மனையில விஸ்ராமம் செய்ய சொன்னார். அரண்மனையில் விஸ்ராமம் செய்து காலையில் எழுந்து சுவாமி ஸ்நானானுஷ்டானங்களை முடிச்சார். தர்மதத்தன் என்ற ஒருவன் சுவாமியை அவனோட வீட்டுக்கு கூட்டிண்டு போகணும் அப்படின்னு ஆசைப்பட்டான். சுவாமியும் தர்மதத்தன் கூட போயிண்டு இருந்தார்.

அப்போது காமனும் குரோதனும் இரண்டு ராட்சசர்களும் கழுதையோட ஸ்வரூபத்துல சண்டை போட்டுண்டு இருந்தார்கள் வழியில. சண்டை போட்டுண்டே சுவாமி மேல வந்து விழுந்தா. சுவாமியோட தியானம் ஒருவன் மேல போகும்போது பின்பக்கத்துல இருந்து இன்னொருவன் அடிக்கலாம் அப்படின்னு திட்டம் போட்டுருந்தா. சுவாமி ரெண்டு கைகளிலும் இரண்டு கத்தியை எடுத்துக்கொண்டு ஒரே நேரத்துல ரெண்டு பேரையும் சம்ஹாரம் செய்துட்டார்.

கொஞ்சம் தூரம் போன அப்புறம் ஒரு மதம் பிடித்த யானை வேகமா ஓடி வந்துண்டு இருந்தது. வழியில இருக்கிற வீடுகளை எல்லாம் தும்பிக்கையால பிடுங்கி எறிஞ்சுண்டு இருந்தது. சுவாமியை பார்த்த உடனே அவரை அடிக்க அவரை நோக்கி வந்துண்டு இருந்தது. சுவாமி மின்னல் வேகத்துல குதித்து அந்த யானையோட தும்பிக்கையை வெட்டினார். அந்த யானை வலி தாங்க முடியாம உயிரிழந்தது. அது சுயரூபத்தை எடுத்த அப்புறம் குண்டலன் என்கிற ராட்சசன் தான் யானை ரூபத்துல வந்திருந்தான் அப்படின்னு தெரிய வந்தது.

தூம்ராக்ஷனை சுவாமி சம்ஹாரம் பண்ணார். தூம்ராக்ஷனோட மனைவி ஜ்ரும்பகை. சுவாமியை பழிவாங்க வேண்டும்னு நினைச்சுண்டு இருந்தா. ஒரு நல்ல குலஸ்திரீயை போல வஸ்திரதாரணம் செய்து கொண்டு விநாயகர் கிட்ட போனாள். சுவாமி கிட்ட சொன்னாள்:

உங்களோட அம்மா அப்பா நிறைய புண்ணியம் பண்ணிருக்கா. நீங்க ராட்சசர்களை எல்லாம் அழித்து இந்த பூமியை உத்தாரணம் பண்ணுவேள். நான் உங்களுக்கு கந்தச்சூரணம் கொண்டு வந்திருக்கேன். அதை உங்க சரீரத்துல லேபனம் பண்ண விரும்புறேன்.

அவள் கொண்டு வந்திருந்த சூரணம் உஷ்ணச் சூரணம். அதை சரீரத்துல பிரட்டினா சுவாமி சரீரத்துல சூடு அதிகமாயிடும் அப்படின்னு நினைச்சுண்டு கொண்டு வந்திருந்தா. சுவாமியும் கையில ஒரு தேங்காயை எடுத்துண்டு ஜ்ரும்பகை பக்கத்துல போய் அவ தலையில பொறுமையாக அடித்தார். அதே இடத்துல ஜ்ரும்பகை சுயரூபம் எடுத்து உயிரிழந்தாள். காசி மக்கள் எல்லாம் இனிமே நமக்கு கஷ்டம் வராது அப்படின்னு நினைச்சுண்டு சந்தோஷப்பட்டார்கள்.

 

தமிழ்

தமிழ்

கணபதி

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies