திருக்கோயில்கள் வழிகாட்டி - விழுப்புரம் மாவட்டம்

திருக்கோயில்கள் வழிகாட்டி - விழுப்புரம் மாவட்டம்

 

அருள்மிகு அங்காளம்மன்

திருக்கோயில் மேல்மளையனூர், செஞ்சி வட்டம்

 

திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை வழிபாக 35 வோமீட்டர் தூரத்திலும், செஞ்சியிலிருந்து வளத்தி வழியாக வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்தியும், சென்னையிலிருந்து திராடிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்தியும் உள்ளது மேல்மளையனூர்.

போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்ஞி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நாரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரதந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்டகாருண்யத்தின் மையப் பாதியான இடமே இன்றய மேல்மளையனூர் ஆகும் . தண்டகாருண்ய பகுதிகனே சோழமண்டலத்தில் தொண்டைமண்டனம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. காடையேழு வள்ளல்களின் பாரம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே  மலையன்  என்பவரானார்.

இவர் தன்டகாருண்யத்தின் மையப்பகுதியான பூங்காவனத்தை ஆட்சி புரிந்துள்ளார். தண்டகாருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்குமேல் மலைப்பகுதியை

கொண்டதாகும். மேல்மலைப்பகுதியை ஆண்ட மலையான் என்பாரின் பெயராலேயே மலையம் ஊர் மளையனூர் என்ற காரணப்யபெயரானது. மேல்மளையனூரில் மலையன் ஆட்சிபுரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தனங்களின் அடிச்சுவடுகள்

இருந்தன. இன்றும் மேல்மலயனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத்தெரு என்று இருப்பது இதர்கு சான்றாக அமைகிறது.

ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனை பூங்காவனத்தாள் என்றே அழைத்து வழிபாடு செய்துள்ளனர்.

இதற்கு சான்றாக பதிற்றுப்பத்தில் பத்து பாடல் கொண்ட பதிகப்பாடலில்  பூங்காவில் ஊனுழலுரை ஒங்கார சக்தியே பூங்காவனத் தாயே  என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் அமைகிறது.

மேல்மலையனூரின் வடகிழக்கு பகுதில் அடிகள் மிகவும் பழமை வாய்ந்த  அக்னி தீர்த்தம்  திருக்குளம் அமைந்துள்ளது.

புராண வறலாரு     

ஆதிகாலத்தில் சிவபெருமானைப் பொன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப் பொன்று இருந்த அவன் ஒரு சமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது தனது 

பதியே என நினைத்த பார்வதி தேவி, பிரம்மனை வணங்கி அவனுக்குப் பாதபூசை செய்தால். அவ்வமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட, பார்வதி தனது தவற்றை உணர்ந்தால். பின்பு பிரம்மனுக்குத் தண்டனை

அளிக்க உருதிகொண்டு பெருமாளை வணங்கி, சுவாமி இவன் தங்களைப்போன்று உள்ளான். அறியாமல் நான் செய்த பூஜைக்கு இவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

 

மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்
திருக்கோயில் திருவக்கரை, வானூர் வட்டம்.
இறைவன் : சந்திரமௌலீஸ்வரர் இறைவி : அமிர்தாம்பிகை, வடிவாம்பிகை தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் தலவிருட்சம் : வில்வம் ஆகமம் - : காமிகம்
அமைவிடம்
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னுமிடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 7 கி.மீ. தூரம் சென்றால், திருவக்கரையை அடையலாம். விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருக்கனூரில் இறங்கி வடக்கு நோக்கி 5 கி.மீ சென்றும் திருவக்கரையை அடையலாம்.
தல வரலாறு
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவத் தலங்களுள் திருவக்கரையும் ஒன்று. தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் இது 30வது ஸ்தலமாகும்.
புராண வரலாறு
வக்கிராசூரன் என்னும் அரக்கன் சிவ பெருமானை தனது கண்டத்தில் (தொண்டையில்) வைத்து பூஜை செய்தான். தனது தவ வலிமையால் சாகா வரம் பெற்றான். தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களை கொடுமை செய்து வந்தான். அவன் செய்கைகளை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் மகாவிஷ்ணுவை அழைத்து வக்கிராசூரனை வதம் செய்யும்படி கூற அவரும் சூரனுடன் போரிட்டு தனது சக்கரத்தை வக்கிராசூரன் மீது பிரயோகம் செய்து அவனை அழித்தார்.
வக்கிராசூரன் தங்கையான துன்முகியும் தன் அண்ணனைப் போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள். அரக்கியான
அவளை வதம் செய்ய சிவபெருமான் பார்வதியிடம் கூற பார்வதி தவியும் துன்முகியை வதம் செய்யச் சென்றாள். ஆனால் அப்போது துன்முகி கருவுற்றிருந்தாள்.
சாஸ்திரமுறைப்படி கர்ப்பிணியையோ அல்லது சிசுவையோ வதம் செய்யக்கூடாது. எனவே பார்வதி தேவி துன்முகியின் வயிற்றை கிழித்து அவள் வயிற்றிலிருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு அரக்கியான துன்முகியை வதம் செய்தாள். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்கிரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். வரலாற்று பின்னணி:
இத்திருக்கோயில் ஆதித்ய சோழனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது. முதலாம் பராந்தக சோழனின் மகனான இராஜாதித்த சோழனால் நிதி அளிக்கப்பட்டு அவனுடைய தம்பியான கண்டராதித்த சோழனால் (கி.பி 950-957 திருக்கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவரது பெயரிலேயே ‘கண்டராதித்தன் திருக்கோபுரம்' என்றும் வழங்கப்பட்டது. கண்டராதித்தன் மனைவியான செம்பியன் மாதேவி இத்திருக்கோவிலை கற்றளியாக்கி நிலம், பொன் முதலியவற்றை வழங்கியுள்ளார். திருக்கோவில் அமைப்பு:
இத்திருக்கோயில் பெரிய இராஜகோபுரத்துடன் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
இராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் முதலானவை ஒரே நேர்கோட்டில் அமையப்பெறாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிரமாக அமைந்துள்ளதை வேறெங்கும் காண முடியாது.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |