திருக்கோயில்கள் வழிகாட்டி - கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள்

temples guide coimbatore nilagiri mavattam pdf cover page

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள கோயில்களின் புராணம், வரலாறு, பெருமைகள், திருவிழாக்கள், நேரங்கள் போன்றவற்றைப் பற்றிய புத்தகம் இது.

தலைப்புகள் -

ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், கோவை நகர்

சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், கோவை நகர்   

தண்டுமாரியம்மன் திருக்கோயில், கோவை நகர்   

நாகேசுவரசுவாமி திருக்கோயில், முட்டம்

வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், தேவராயபுரம்   

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், அனுவாவி 

நவகோடி நாராயணப்பெருமாள் திருக்கோயில், ஒத்தக்கால்மண்டபம்

புற்றிடங்கொண்டீசுவரர் திருக்கோயில், ஒத்தக்கால்மண்டபம்   

பொன்மலை வேலாயுதசாமி திருக்கோயில், கிணத்துக்கடவு   

மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி

மாரியம்மன் திருக்கோயில், உதகமண்டலம்   

பாலதண்டாயுதபாணி திருக்கோயில், எல்க்ஹில்   

சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்னூர்   

தந்திமாரியம்மன் திருக்கோயில், குன்னூர்   

விநாயகர் திருக்கோயில், குன்னூர்

பாலதண்டாயுதபாணி திருக்கோயில், அன்னமலை

மாரியம்மன் திருக்கோயில், பொக்காபுரம்

வேட்டைக்கொருமகன் திருக்கோயில், நம்போலாக்கோட்டை

PDF புத்தகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

5.அருள்மிகு முந்தி விநாயர் திருக்கோயில் புலியகுளம், கோவை நகரம்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயரமான விநாயகர் திருமேனி என்ற சிறப்பைப் பெற்ற முந்தி விநாயகர், கோவை நகரத்தின் மையப்பகுதியில், புலியகுளம் என்னும் இடத்தில் அமர்ந்து உள்ளார். சிலையின் எடை பீடத்துடன் 190 டன். உயரம் 19 அடி 10 அங்குலம். வலம் வந்து தொழுவோருக்கு நல்லவை அருளும் வலம்புரி விநாயகராக முந்தி விநாயகர் விசுவரூப தரிசனத்தோடு எழுந்தருளி யுள்ளார். கண்டாலே பிரமிப்பூட்டும் இந்த சிலை உருவாக 16 ஆண்டுகள் பிடித்தன.
ஊத்துக்குளி என்ற கிராமத்தில், பத்து சிற்பிகள் 1983ல் துவங்கி இரவு பகலாக 16 ஆண்டுகள் பணியாற்றி, சிலையை செய்து முடித்தனர். பிறகு அங்கிருந்து விநாயகர் சிலை 42 சக்கரங்கள் பொருத்தப்பட்ட சரக்கு உந்தில் ஏற்றப்பட்டு, நத்தை போல நகர்ந்து கோவை புலியகுளம் வந்து சேர 28 நாட்கள் ஆயின.
முக்கண்கள் கொண்ட முந்திவிநாயகர், கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். வலது இடது மேற்கரங்களில் அங்குசமும், பாசமும், வலது முன்கரத்தில் எழுத்தாணியும், இடது முன் கரத்தில் மோதகமும், துதிக்கையில் அமிர்த கலசத்தையும் ஏந்தியபடி அமர்ந்துள்ளார். வாசுகிப்பாம்பு விநாயகரின் வயிற்றைச் சுற்றி ஆபரணமாகத் திகழ்கிறது.
இத்தகைய பெரிய விநாயகர் சிலைக்கு எப்படி திருமஞ்சனம் செய்து மாலை, வஸ்திரம் செய்து அலங்கரிப்பார்கள்? பிரமிப்பாக உள்ளது அல்லவா? ஏணிப்படிகள் வழியே சென்று தலைக்கு உயரே நின்றபடி அபிகேம் செய்கிறார்கள். பக்கவாட்டுப்படிகள் மூலமாக உயரே சென்று நெற்றியில் திருநீறும், சந்தனமும் அணிவிக்கிறார்கள். மேலே நின்றபடி அகண்ட தோள்களுக்கு மாலையும், வஸ்திரமும் அருகம்புல் மாலையும் அணிவிக்கிறார்கள்.
முந்தி விநாயகருக்கு காலை 5.30 மணிக்கு, அதிகாலை காலசந்தி வழிபாடு, தமிழ்போற்றி வழிபாடு மற்றும் ருத்ர பாராயணம், மதியம் ஐந்து கிலோ பொங்கலுடன் பலவித சித்திரான்னங்கள் படைக்கப்பட்டு அன்னதானம், மாலையில் நவதானியம் வகைகள், நைவேத்தியம் படைக்கப்பட்டு தேவார, திருவாசக பதிகங்கள் ஓதி தீபாராதனை நடைபெறும். இரவில் 8.30 மணிக்கு அர்த்தசாமவழிபாட்டுடன் தினப்படி பூஜைகள் நிறைவேறும். |
வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, சஷ்டி ஆகியவை விநாயகருக்கு உகந்த நாட்கள். 1008 தாமரை மலர்களால் விநாயகருக்கு அர்ச்சனை செய்வது முந்தி விநாயகர் திருக்கோயிலின் சிறப்பு ஆகும். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, தமிழ்ப்புத்தாண்டு நாள் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நாள்தோறும் மூன்று கால பூசை நடைபெறும். திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 மணி - பகல் 12.00 மணி மாலை 4.00 மணி- இரவு 9.00 மணி
தொலைபேசி:0422-2318822

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |