
ஒரு சோழ அரசனுக்கு காந்தார சேதி அப்படின்னு ஒரு பேரு
அது என்னன்னா காஞ்சி காமாட்சி கோவில்ல ஜீரணோத்தாரம் பண்றதுக்காக அவர் அது பக்கத்துல இருந்த காந்தாரத்தை, காந்தாரம்னா மகாவனம்
அதையெல்லாம் சேதிச்சார்
வெட்டினார்
அதனால காந்தார செய்தி
அவரும் சிவபெருமாளோட பெரிய பக்தர்
அரசர்கள் சந்தனம், குங்குமம், ஆபரணங்கள் அதெல்லாம்தான் தாரணம் பண்ணுவார்
ஆனா இவர் அதையெல்லாம் விட்டு பஸ்மம், ருத்ராட்சம் இதையெல்லாம் தரிக்க ஆரம்பிச்சார்
ஒருக்கா காமாட்சி அம்பாள் தரிசனம் பண்ண வந்த சில மகாத்மாக்கள் சோழ அரசன்கிட்ட ஹாலாசியமாகிய மதுரை மீனாட்சி கோவிலோடையும் பொருத்தாமர குலத்தோடையும் மகிமையை பத்தி சொன்னா
அது கேட்டதும், சோழ அரசனுக்கு சுந்தரீஸ்வர பெருமாளை தரிசனம் பண்ணனும்னு ரொம்ப ஆசையாச்சு
ஆனா பாண்டிய அரசன் சோழ அரசனுக்கு சத்ரு
இது எப்படி நடக்கும்? சுந்தரீஸ்வர பெருமாள் காந்தார செய்தியோட கனவுல வந்தார்
நீ தனியா வந்து என்ன தரிசனம் பண்ணலாம்
ஒரு ஆபத்தும் வராத நான் பாத்துக்குறேன்
சோழ அரசன் மார்வேஷத்துல வேகவதியோட அந்த கரையில வந்தார்
ஆனா நதியில ஒரே வெள்ளம்
ரொம்ப வருத்தப்பட்டார்
என்ன பண்றது? இந்த நதியை எப்படி தாண்டுறது? ராத்திரி ஆச்சு
இங்கே சுந்தரேஷ்வர பெருமாள் கோவில்ல வாசல்களும் கோபுரங்களும் எல்லாம் மூடப்பட்டது
தன்னுடைய பக்தன் சோழ பூபன் நதிக்கரையில வந்திருக்கார் என்று சுந்தரேஷ்வர் பெருமாள் ஒரு சித்தர் வேஷத்திலே அங்க போய் நதியை தாண்ட வச்சு அரசனை அழைச்சுண்டு வந்தார்
கோவிலுக்குள்ள ஒரே இருட்டு
அரசனுக்கு இருட்டுலையும் கண்ணு தெரியுற மாதிரி திவ்ய திருஷ்டியையும் கொடுத்தார்
மீனாட்சி அம்பாளோடையும் ஹாலாஸ்யநாதரோடையும் தரிசனம் கிடைச்சு
சோழ அரசன் ஆனந்தத்தை அடைஞ்சார்
அதுக்கப்புறம் சித்தர் அரசனை நதிக்கரையில கொண்டு போய் திருப்பி தாண்ட வச்சார்
ஆனா என்ன ஆச்சுன்னா பெருமாளுக்கு தன்னுடைய மகிமையை பக்தர்களுக்கு தெரிய வைக்கணுமே
கோவில் மூடினபோது காவலாளிகள் மீன முத்திரை போட்டு வாசலை மூடி இருந்தா
சுந்தரேஸ்வர பெருமாள் அதையெல்லாம் தொறந்து அரசனை உள்ள கொண்டு வந்தாரே
திருப்பி மீன முத்திரைக்கு பதிலா விருஷப முத்திரையை வச்சு வாசலை மூடினார்
கார்த்தால வாசலை தொறக்க வந்தவா பார்த்தபொழுது, முத்திரை மாறி இருக்கு
அவா பாண்டியரசனை தெரிய வச்சா ஏதோ நடந்திருக்கு
சுந்தரேஸ்வரர் பெருமாளுக்கு மட்டும்தான் இது தெரியும் என்ன நடந்திருக்கு என்று
திருட்டு எதுவும் நடக்கல
பாண்டியரசன் அப்படியே பட்டினி இருந்து பெருமாள் சந்நிதியில படுத்துண்டார்
இதுக்கு பதில் கிடைக்கிறது வரைக்கும் சந்நிதியை விட்டு நகர மாட்டேன்
கொஞ்ச நேரத்துல ஆகாஷவாணி கேட்டது கர்ப்ப கிரகத்திலிருந்து
சுந்தரேஸ்வர பெருமாள் நடந்ததையெல்லாம் சொன்னார்
எல்லாருக்கும் ஆச்சரியமாச்சு
சத்ருவாகிய சோழ அரசனுக்கு எப்படி சுந்தரேஸ்வர பெருமாள் அனுக்கிரகம் பண்ணி இருக்கார் பாருங்கோ
பெருமாளுக்கு அப்படி சத்ரு மித்திர பாவம் கிடையாது இல்லையா? எல்லா பக்தர்களும் அவருக்கு சமம்தான்
இங்கே நம்ம ஹாலாஸ்யநாதர் சொல்றோமே, ஹாலாஸ்யம் என்றால் ஆலவாய்
ஆலவாய் ஹாலாஸ்யம் மதுரை
இந்த ஹாலாஸ்ய மஹாத்மியத்துக்கு மூல கிரந்தம்
திருவிளையாடல் புராணம், பரம்ஜோதி மினுவர் எழுதின திருவிளையாடல் புராணம்
நீலகண்ட தீக்ஷிதர் இதை சம்ஸ்கிருதத்திலேயும் மொழிமாற்றம் பண்ணி இருக்கார்
சிவலீலாமிருதம்னு அதுக்கு பேரு
ஹாலாஸ்யநாதாய நமஹ
Astrology
Bhagavad Gita
Bhagavatam
Bharat Matha
Devi
Devi Mahatmyam
Ganapathy
Garuda Puranam
Glory of Venkatesha
Hanuman
Kathopanishad
Mahabharatam
Mantra Shastra
Mystique
Practical Wisdom
Purana Stories
Radhe Radhe
Ramayana
Rare Topics
Rigveda Explained
Rituals
Sages and Saints
Shiva
Spiritual books
Sri Suktam
Story of Sri Yantra
Temples
Vedas
Vishnu Sahasranama
Yoga Vasishta