கௌரி பீஜ மந்திரத்தை பூஜிக்கும் முறை

0:00 0:00

கௌரி பீஜ மந்திரத்தை பூஜிக்கும் முறை

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல் - கௌரிக்கு உபதேசம் செய்த கதை

மதுரையில விரூபாக்ஷன் ஒரு பிராமணர் இருந்தார். நல்ல வித்வான், நல்ல பக்தி, ஸ்ரத்தை எல்லாம் உண்டு. ஆசார அனுஷ்டானம் எல்லாம் பார்ப்பார். அவரது மனைவி சுவ்ரதா. ஆனால் அவாளுக்கு குழந்தை பிறக்கல. பூர்வ ஜென்மத்துல ஏதோ பெரிய பாவம் பண்ணி இருந்தா.

அவ சுந்தரேஸ்வர பெருமான் கோவில்ல சப்த மாதாக்களோட சந்நிதியில கௌரி மந்திரத்தினால நிறைய தபஸ் பண்ணா. புள்ளை குழந்தை பிறக்கலைனா கூட ஒரு நல்ல பெண் குழந்தை பிறந்தது. ரெண்டு பேருக்கும் சந்தோஷமாச்சு. அந்த குழந்தைக்கு கௌரினு பெயர் வச்சா.

அஞ்சு வயசு ஆன பொழுது அந்த குழந்தை தன்னுடைய அப்பாகிட்ட கேட்டா:

"மோக்ஷம் கிடைக்க நீங்க என்ன அனுஷ்டானம் பண்றேளோ, அதை எனக்கு உபதேசம் பண்ணுங்கோ."

விரூபாக்ஷனுக்கு ஆச்சரியமாச்சு. கண்டிப்பா இந்த குழந்தைக்கு மீனாட்சி அம்பாளோட அருள் உண்டு. அவர் சொன்னார்: "அம்பாள் ஜகத்துக்கே மாதா, எல்லா வேதங்களோடயும் சாக்ஷாத் ஸ்வரூபம். பக்தாள் மேல அவ்வளவு பிரியம் அம்பாளுக்கு. அந்த அம்பாளோட பீஜ மந்திரம் 'ஹ்ரீம்' (Hreem)."

'ஹ்ரீம்' மந்திரத்தின் பெருமைகள்:

  • இந்த பீஜ மந்திரம் எல்லா பாவங்களையும் நசிப்பிக்கும்.

  • எல்லா ஆபத்தையும் தடுக்கும்.

  • எல்லா ஆசையையும் நிறைவேற்றும்.

  • பிரம்மா, பெருமாள், எல்லா தேவர்கள், சித்தர்கள், யக்ஷ, கந்தர்வா எல்லாரும் இந்த பீஜ மந்திரத்தை உபாசனை பண்றா.

  • பரப்பிரம்மா ஸ்வரூபம் என்ன கேட்டா ஹ்ரீம் என்கிற இந்த பீஜ மந்திரம் தான்.

  • இந்த மந்திரத்துக்கு ரிஷி தக்ஷிணாமூர்த்தி, சந்தஸ் காயத்ரி, தேவதை கௌரி.

தியானிக்கும் முறை:

தன்னுடைய ஹிருதயமாகிய ஆகாசத்துல அம்பாள தியானம் பண்ணனும். அந்த ஆகாசத்துக்கு நடுவுல ஒரு கடல் - அம்ருதத்தால ஒரு கடல். அதுல ஒரு ரத்ன தீபம். அந்த தீபத்துல ஒரு மாணிக்க மண்டபம். அந்த மண்டபத்துல ஒரு தாமரை மேல சிவபெருமான் உட்கார்ந்து இருக்கார். சுவாமிக்கு நாலு கை, அதுல பாசம், அங்குசம், அபய முத்திரை, வரத முத்திரை. சுவாமியோட வஸ்திரம் எல்லாம் தனி தங்கம்.

சுவாமி மடியில அம்பாள் உட்கார்ந்து இருக்கா. சுந்தரமான முகம், அதுல புன்னகை, கண்கள்ல கருணை, ஆயிரம் சூரியனோட பிரபை. சிகப்பு பட்டு புடவை. வலது கையில தாமரை, இடது கையில அம்ருத கலசம். பக்கத்துலேயே பிள்ளையாரும் முருகரும் இருக்கா. அவாள பார்த்து அம்பாள் சந்தோஷப்பட்டுண்டு இருக்கா. இந்த மாதிரி அம்பாள தியானம் பண்ணி இந்த மந்திரம் ஜபம் பண்ணனும்.

ஜபத்தின் பலன்கள்:

  • லக்ஷ ஜபம் பண்ணா அம்பாள் லோகத்துல வசிக்கலாம்.

  • ரெண்டு லக்ஷ ஜபம் பண்ணா எப்பவும் அம்பாள் பக்கமே இருக்கலாம்.

  • மூணு லக்ஷ ஜபிச்சா அம்பாளோட ரூபம் கிடைக்கும். பார்த்தா அம்பாள் மாதிரி ஆயிடுவா.

  • நாலு லக்ஷ ஜபிச்சா அம்பாளோடயே சேர்ந்துடலாம் (சாயுஜ்யம்).

இப்படி விரூபாக்ஷன் தன்னுடைய அஞ்சு வயசு கன்னிகைக்கு உபதேசம் பண்ணார். அந்த குழந்தைக்கு பிற்காலத்துல அம்பாளே பரம பதத்தை கொடுத்தா.

 

தமிழ்

தமிழ்

திருவிளையாடல்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies