காசியின் அரசன் யுத்தம் செய்ய செல்கிறார்

0:00 0:00

காசியின் அரசன் யுத்தம் செய்ய செல்கிறார்

நராந்தகன் முன்னிலையில அஸ்திரங்களோடும், மதம் பிடிச்ச யானைகளோடும், வேகமா ஓடி ஆக்கிரமிக்கிற குதிரைகளோடும் அசுரசேனை காஷிக்கு கிளம்பியது

அசுராளுக்கு பிரேரணமாக க்ரூர சப்தங்கள் உள்ள வாத்தியங்கள் வாசிக்கப்பட்டிருந்தது

அந்த சப்தத்தால பூகம்பம் வந்த போல காசி நடுங்க ஆரம்பிச்சது

ஒரு காவலாளி காசிராஜா கிட்ட வந்து சொன்னேன்

காசிய ஆக்கிரமிக்க நராந்தகன் சேனையோட பூர்வத்திலிருந்து வந்துண்டு இருக்கான்

ராஜா தன்னோட சேனைகிட்ட சொன்னார், சஸ்திரமும் கவசமும் எடுத்துண்டு பூர்வத்துல போய் அவால தடுத்து நிறுத்துங்கோ

ராஜா மஹோத்கடன் கிட்ட சொன்னார்

காஷிக்கு ஒரு பெரிய துரிதம் வரப்போறது

அதிலிருந்து காஷியை நீங்க காப்பாத்துங்க

ராஜா பார்த்தபோது அலை வேகமாக வருவது போல அசுரா கூட்டமாக வந்துண்டு இருந்தா

நகரத்துக்குள்ள வரும்போது ஒவ்வொரு வீடா தீ வைப்பா

உள்ள இருக்கிறவால்லாம் அந்த தீக்கு பயந்து வெளியில வரும்போது அவாள கொன்னுடுவா

இப்படி பண்ணிட்டு இருந்தா அசுரா

பெண்கள், குழந்தைகள் யாரா இருந்தாலும் கொஞ்சம் கூட தய பார்க்காம அவாளை கொன்னுடுவா

ராஜாவுக்கு இது பார்த்து மிகவும் கோவம் வந்தது

அவர் வேகமா சஸ்திரங்கள் எல்லாம் எடுத்துண்டு போய் அசுர சேனையை அடிச்சு விழுத்த ஆரம்பிச்சார்

நராந்தகனால இத நம்ப முடியல

ஒரு காலத்துல தனக்கு அடிமையா வந்த ராஜா இப்போது தன்னோட சின்ன சேனையை வச்சுண்டு என்னோட பெரிய சேனையை எதிர்த்துண்டு வந்திருக்கார்

அசுர சைனிகாலுக்கு காசிராஜா அவாள கொல்ல வந்த யமனை மாதிரி தெரிஞ்சார்

ஆனா அசுரர்கள் நினைச்சார்கள்

காசிராஜாக்கு பயந்து பின்னாடி போனா நராந்தகனை நம்மளை எரிச்சு கொன்னுடுவான்

என்ன செய்யறது? காசிராஜாவை எதிர்த்து போகிறதா? நராந்தகனை எதிர்த்து போகிறதா? இது புரியாம தவிச்சுண்டு இருந்தார்கள் அசுரர்கள்

காஷிராஜா நராந்தகனோட முக்காவாசி சேனையை அழிச்சுட்டார்

நராந்தகன் கொஞ்சம் அசுராளுக்கு காஷிராஜாவோட சைனிகால மாதிரி வேஷத்தை போட்டு அனுப்பி வச்சான்

அவா போய் ஆயுதங்களால காஷிராஜாவ மிரட்டி பிடிச்சா

நராந்தகம் கிட்ட கொண்டு வந்து ஒப்படிச்சா

காஷிராஜா பிடிபட்டு விட்டார்

காசிராஜாவோட சேனையில இருந்தவா எல்லாம் வருத்தத்தோட திரும்பி போனா

ஜெயிச்ச சந்தோஷத்துல வாத்தியங்களை வாசிக்க ஆரம்பிச்சார்கள் அசுரர்கள்

நராந்தகன் காசியிலயும் பரணம் பண்ணலாம் அப்படின்னு நினைச்சுண்டு அரண்மனைக்குள்ள பிரவேஷிக்க முயற்சி செய்தான்

காசியை காப்பாத்துறதுக்கு இருந்த ஒரே உபாயம் மஹோத்கட்டம் தான்

சில சைனிகா நினைச்சா நம்ம இப்போதைக்கு அசுரர்கள் சரணத்துல போய் உயிர் பிழைக்கலாம்

மீதி இருக்கிற சைனிகா ஒரு நேரத்துல மஹோத்கடன் நம்மளையும் காசியையும் காப்பாத்துவார் அப்படின்னு நம்பிக்கையோட வேண்டிக்கொண்டிருந்தார்கள்

ஸ்ரீ கணேஷாய நமஹ

 

  • நராந்தகனின் சேனையை எதிர்கொள்ள காசிராஜன் எத்தகைய மனநிலையுடன் போர்க்களம் புகுந்தார்?
    அசுரர்கள் பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி வதைப்பதைக் கண்டு, மிகுந்த சினங்கொண்ட காசிராஜன், தர்மத்தைக் காக்க வேண்டிய சத்திரிய தர்மத்தினால் உந்தப்பட்டு, காலனைப் போன்ற உருவெடுத்துப் போர்க்களம் புகுந்தார்.
  • போர்க்களத்தில் அசுரர்கள் எதிர்கொண்ட தர்மசங்கடம் யாது?
    காசிராஜனின் பராக்கிரமத்தைக் கண்டு அஞ்சிய அசுரர்கள், பின்வாங்கினால் நராந்தகனின் கோபத்திற்கு ஆளாகி உயிரிழக்க நேரிடும் என்றும், முன்னேறினால் காசிராஜனின் ஆயுதங்களுக்குப் பலியாக நேரிடும் என்றும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தனர்.
  • அசுர சேனை காசி நகரத்தை எவ்வாறு சீர்குலைத்தது?
    அசுரர்கள் ஒவ்வொரு இல்லத்திற்கும் தீயிட்டு, அத்தீயிற்கு அஞ்சி வெளியே ஓடிவரும் அப்பாவிக் குடிமக்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தனர். இது அசுரர்களின் அதர்மமான போர் முறையை வெளிப்படுத்துகிறது.
  • நராந்தகன் காசிராஜனை வெற்றி கொள்ள கையாண்ட வஞ்சகமான வழிமுறை யாது?
    நேரடிப் போரில் காசிராஜனை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த நராந்தகன், தனது அசுரர்களைக் காசிராஜனின் படைவீரர்களைப் போல வேடமணிந்து அனுப்பி, வஞ்சனையால் அவரைச் சிறைபிடித்தான்.
  • காசிராஜன் சிறைபிடிக்கப்பட்ட பின் காசி நகர மக்களின் ஒரே புகலிடமாகத் திகழ்ந்தது யார்?
    அரசனை இழந்து வாடிய காசி மக்களின் இறுதி நம்பிக்கையாகவும், அந்தத் துயரத்திலிருந்து காசியை மீட்கவல்ல ஒரே உபாயமாகவும் விளங்கியவர் மகோத்கடர் ஆவார்.
  • இக்கதையில் வெளிப்படும் மிகச்சிறந்த தர்ம தத்துவமாக எதைக் கொள்ளலாம்?
    அதர்மம் தற்காலிகமாக வெல்வது போல் தோன்றினாலும், அந்த இக்கட்டான சூழலிலும் இறை நம்பிக்கையைக் கைவிடாமல் மகோத்கடரின் வருகைக்காகக் காத்திருந்த மக்களின் நம்பிக்கையே இங்கு மேலான தத்துவமாகத் திகழ்கிறது.
  • நராந்தகனின் வெற்றிக் களிப்பு எதைக் காட்டுகிறது?
    அசுரர்கள் தர்மத்தைக் கொன்றுவிட்டோம் என்ற அகந்தையில் வாத்தியங்களை முழங்கினர். இது ஒருவனின் அழிவுக்காலம் தொடங்கும் போது ஏற்படும் மதியீனமான சந்தோஷத்தைக் குறிக்கிறது.
  • காசி நாட்டு வீரர்களிடையே நிலவிய இருவேறு மனநிலைகள் யாவை?
    ஒரு சாரார் அசுரர்களிடம் சரணடைந்து உயிர் பிழைக்கலாம் என்று எண்ணினர்; மற்றொரு சாரார் மகோத்கடர் நிச்சயம் தங்களைக் காப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
  • காசிராஜனின் சேனையை நோக்கி நராந்தகன் கொண்ட வியப்பு யாது?
    முன்னொரு காலத்தில் தனக்கு அடிபணிந்து நடந்த ஒரு அரசன், இப்போது ஒரு சிறிய சேனையைக் கொண்டு தனது பிரம்மாண்டமான அசுர சேனையை நிலைகுலையச் செய்ததை எண்ணி நராந்தகன் வியப்படைந்தான்.
  • இச்சம்பவம் உணர்த்தும் மறைபொருள் உண்மை என்ன?
    இறைவன் ஒருவனைச் சோதிக்கும் போது அவனது உடல் வலிமையையும் வீரத்தையும் தாண்டி, அவன் எத்தகைய இக்கட்டான நிலையிலும் இறைவனிடம் சரணாகதி அடைகிறானா என்பதையே சோதிக்கிறான். காசிராஜனின் சிறைவாசம் என்பது மகோத்கடரின் திருவிளையாடல் அரங்கேற ஒரு தொடக்கமே ஆகும்.
தமிழ்

தமிழ்

கணபதி

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies