ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில் அன்னதானம், கோதானம் முதலிய தானங்களைத் தன் கையாலேயே செய்து விடுவானேயாகில் மரணமடைந்து செல்லும்போது பசி தாகம் எதுவும் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான். கையிலே கட்டமுதைக் கட்டிக் கொள்ளாமல் செல்பவன். பசி தாகத்தால் வருந்துவதைப் போல, தான தர்மங்களைத் தான் வாழுங் காலத்தில் தன் கையாலேயே செய்யாதவன் இறந்து செல்லும்போது வழியில் அதிகத் துன்பமடைவான். புனிதமான தலத்தில் புண்ணிய காலத்தில் செய்த நல்வினையாகிய நற்கருமம், நெய் பெய்த அக்கினி ஓங்கி வளர்வதைப் போலப் பயனாக வளரும். புண்ணிய க்ஷேத்திரமில்லாத எந்த இடத்திலாயினும், புண்ணிய காலமல்லாத் எந்தவொரு காலத்திலேனும் விருஷோற்சனம் செய்து, நல்ல ஒழுக்க சீலமில்லாத அந்தணனுக்குத் தானம் கொடுத்து விட்டாலுங் கூட அந்த . விருஷோற்சனம் என்ற புண்ணிய காமத்தின் மகிமையால், உத்தம க்ஷேத்திரத்தில் உத்தம காலத்தில் உத்தமப் பிராமணனுக்குத் தானம் கொடுத்தால் என்ன. பயன் உண்டோ , அந்தப் பலன் நிச்சயமாகக் கைகூடும். ஆகையால் ஒரு மனிதன் நற்கதியடைவதற்கு முதற் - காரணமாக அமைவது விருஷோற்சனமேயாகும். கலுழனே இன்றிருப்போர் நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகையால், நல்ல காரியங்களையும் நற்செயல்களையும் நாளை செய்து கொள்வோம் என்று நினைக்காமல் நற்கர்மங்களை நினைத்தவன்றே செய்வது நல்லது. புத்திர பாக்கியமுடையவன் தன் கையால் எந்தவொரு தருமத்தையும் செய்யாமல் இறப்பானேயாகில் நற்கதியடையமாட்டான். புத்திரனேயில்லாதவன் நல்வினைகளைச் செய்து மரிப்பானாகில் நற்கதியை அடைவான். யாகம் செய்வதையும் கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விருஷோற்சனம் செய்வதே மிகவும் உத்தமமான நற்கருமமாகும். கார்த்திகை மாதத்துப் பௌர்ணமியிலாவது. மற்றெந்தப் புண்ணிய தினத்திலாவது, உத்தராயண காலத்து சுக்கில பட்சத்திலாவது, கிருஷ்ண பட்சத்திலாவது, துவாதசியிலாவது தூய மனத்தோடு உத்தமமான திருத்தலத்தில் நல்ல திதி யோக நட்சத்திரத்தில், நல்ல முறையில் வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த ஒழுக்கமுடைய அந்தணர்களை வருந்தி அழைத்து, சுபம் ஓமம் முதலியவற்றைச் செய்வித்து தன்னைத் தூய்மையாளனாகச் செய்து கொண்டு, நவக்கிரகங்களையும் பூஜித்து, மாதுரிதேவதைகளை அர்ச்சனை . செய்து, பூர்ணாகுதி கொடுத்து மஹாவிஷ்ணுவைக் குறித்து சிரார்த்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக் கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால் நன்றாக அலங்கரித்து. மேலும் நான்கு ஆண் கன்றுகளோடு அந்தக் காளைக் கன்றானது அக்கினியை வலம் வரச் செய்து. வடதிசை நோக்கி நின்று அந்த ரிஷபக் கன்றை நோக்கி, 'தருமமே நீயே ரிஷபமானாய் பிரமனாலே ஆதியில் படைக்கப்பட்டாய்' என்று சொல்லி இறந்தவனுக்காகத் தானஞ் செய்தால் அவனைக் குறித்தும், செய்பவன் தனக்கே செய்து கொள்வானாயின் தன்னைச்
குறித்தும் அதன் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரைத் தன் கரத்தால் ஏந்தி, தன் சிரசின் மீது, புரோக்ஷித்துக் கொண்டு. ஆண்கன்றுகளோடு அந்த ரிஷபக் கன்றையும் விட்டு விட வேண்டும்.
கருடா இந்த விருஷோற்சனமானது 'இறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டதேயானால், உடனடியாக ஏகாதிஷ்ட சிரார்த்தத்தைச் செய்துவிட வேண்டும். இறவாதிருப்பவன் தனக்குத் தானாகவே செய்து கொள்வானாயின் தனக்கு பிரியமாக இருக்கும் நற்பொருள்களை அந்தணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். விருஷோற்சனம் செய்யா விட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது. ஆகையால் அந்த விருஷோற்சனம் செய்யாமலேயே. மற்ற நற்கருமங்களைத் தனக்குத் தானே செய்து கொண்டாலுங் கூட மரித்த பிறகு புத்திரர் முதலியவர்கள் பற்பல நல்வினைகளைச் செய்தும்கூட அவற்றால் எந்தவிதப் பயனுமில்லை என்று உணர்வாயாக. ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தை சபிண்டிகரணத்துக்கு முன்னதாகவே செய்து, ததியாராதனம் செய்து பலதானமும் கொடுக்க வேண்டும். பருத்தியாடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து, அதில் சாளக்கிராமம் வைத்து. ஆடை முதலியவற்றால் அலங்கரித்து, ஆராதனை செய்து, நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும். வைதரணி என்ற நதியை தீத் துன்பமில்லாமல் கடக்கும் 'பொருட்டுக் கரும்பினால் ஓடஞ் செய்து, வெண்பட்டினால் அதைச் சுற்றி, நெய் ஊற்றிய வெண்கலப் பாத்திரத்தை' அதனுள்ளே வைத்து, ஸ்ரீமந் நாராயணனை , அர்ச்சித்து அந்த இடத்தைப் பிராமணனுக்குத் தானமாகக் கொடுத்தால்' நலமுண்டு. கருடனே எள், இரும்பு, பொன், பருத்தி, உப்பு. நவதானியங்கள் ஆகியவற்றையும் தவிர்க்காமல் தகுதி வாய்ந்த அந்தணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தாலும் போதுமானது. சகதியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் திலதானமும் சய்யாதானமும் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களுக்கும் தட்சணையை அதிகமாகக் கொடுத்து அந்தணரை: உவப்புடன் ஏற்கச் செய்ய வேண்டும். சய்யாதானம் வாங்கும் அந்தணன இருக்கச் செய்து தானம் செய்வது சிறப்புடையது. புத்திரன் இல்லாமல் இறந்தவனுக்குப் பௌத்திரன் முதலியவர்களில் யாராவது செய்தால் நற்கதியுண்டாகும். தன் சக்தியை அனுசரித்து நித்தியதானம் செய்பவன் யாவனோ. அவன் தன் வாழ்வின் இறுதியில் நற்கதியை அடைவான். உடலானது திடமாக இருக்கும் போதே திருவண முதலிய க்ஷேத்திராடனமும் கங்கை யாத்திரையும் செய்ய வேண்டும். தாய் தந்தையர் இறந்த பிறகு ஆண்டாண்டுதோறும் அவர்களுக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். தாய், தந்தை, குரு முதலியவர்க்குத் தன்னால் இயன்ற புண்ணியத்தைச் செய்து கொடுக்க வேண்டும். கருடா மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது, அந்தணர்க்கு எவன்

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |