கடவுள்களில் தலைசிறந்தவர் யார் என்று ரிஷிகள் கேட்கிறார்கள்

0:00 0:00

கடவுள்களில் தலைசிறந்தவர் யார் என்று ரிஷிகள் கேட்கிறார்கள்

ஸ்வேத வராக கல்பம் ஆரம்பிச்சு சிருஷ்டி நடந்ததுக்கு அப்புறம் முனிகளுக்குள்ள எல்லாம் ஒரு விவாதம் உருவாச்சு

அவா எல்லாரும் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மா கிட்ட போய் கேட்கலாம்னு முடிவெடுத்தா

போய் கேட்டா

த்வம்ஹி சர்வ ஜகத்தாதா சர்வ காரண காரணம் கஃப்புமான் சர்வ தத்வேப்யஹ புராண பரதப் பரஹ

நீங்கதான் இந்த ஜகத்தை சிருஷ்டி பண்ணிருக்கேள்

இந்த ஜகத்தோட சிருஷ்டிக்கெல்லாம் காரணம் யாரு? நீங்களா இன்னொருத்தரா? எல்லா தத்துவங்களுக்கும் மேல உள்ள தத்துவம் யாரு? எங்களுக்கு விஸ்தாரமா சொல்லுங்கோ

பிரம்மா சொன்னார்

யதோ வாச்சோ நிவர்த்தந்த அப்ராப்ய மனசா சஹ யஸ்மாத் சர்வமிதம் பிரம்மவிஷ்ணுருத்ரேந்திர பூர்வகம் சஹபூதேந்திரியை சர்வம் பிரத்தமம் சம்பிரசூயதே

வாக்கால வர்ணிக்க முடியாத ஒரு தத்துவம்

வாக்கால தெரிஞ்சுக்க முடியாத ஒரு தத்துவம்

வாக்கால அத வர்ணிக்கலாம்னு அதுவரை போனா, வாக்குக்கே அத வர்ணிக்க முடியாதுன்னு தெரிஞ்சு திருப்பி வந்துடும்

யதோவாச்சோ நிவர்த்தந்த அப்ராப்ய மனசாசக

மனசுக்கும் அதே மாதிரிதான்

மனசாலயும் தெரிஞ்சுக்க முடியாத தத்துவம்

மனசால தெரிஞ்சுக்க முடியாதன்னா என்ன அர்த்தம்? மரம் அப்படின்னு சொன்னா நமக்கு மனசுல மரத்தோட ஸ்வரூபம் தெரியும்

காடுன்னு சொன்னா காட்டோட ஸ்வரூபம் தெரியும்

ஆனா இந்த தத்துவத்தை மனசால தெரிஞ்சுக்க முடியாது

இதுக்கு ஸ்வரூபமே கிடையாது

நம்ம இப்ப நினைக்க ஆரம்பிக்கலாம்

இதுக்கு மேல இது இருக்கு, இதுக்கு மேல இது இருக்கு

கடைசியில அந்த தத்துவம் வரைதான் போய் சேரும்

அப்புறம் நம்ம மனசுக்கே தெரியும்

நம்ம நினைச்சது அந்த தத்துவம் அல்ல

அந்த தத்துவத்தை நினைக்கவே முடியாதுன்னு

அந்த தத்துவத்திலிருந்துதான் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், இந்திராதி தேவால் பஞ்சபூதங்கள், இந்திரியங்கள் உருவாகி இருக்கிறது

ஏஷ தேவோ மஹாதேவஹ் சர்வக்ஞோ ஜகதீஷ்வரஹ் அயன்து பரயா பக்த்யா திருஷ்யதே னாந்யதா க்வச்சித்

அந்த தத்துவத்துக்கு பேர் மகாதேவர்

அவரை கண்களால பார்க்க முடியாது

அவரை பார்க்கணும்னா பரம பக்தியால தான் பார்க்க முடியும்

அயம் து பரயா பக்தியா திருஷ்யதே

பக்தியால தான் அவர் தெரியுவார்

நான்யதா க்வச்சித்

அவரை பார்க்க வேற வழியே கிடையாது

எல்லா தேவர்களும் மகாதேவரோட தர்சனத்துக்காக எப்போதும் ஆகாட்சிச்சுண்டு இருப்பா

மகாதேவர் கிட்ட பக்தி இருந்தா அவரோட பிரசாதம் அருள் கிடைக்கும்

ஆனா, அவரோட அருள் இருந்தாதான் அவர் மேல பக்தியே வரும்

விதையிலிருந்து மரம் உருவாகும்

மரத்திலிருந்து திருப்பி விதை உருவாகும்

இதுல எதுல இருந்து எது உருவாச்சுன்னு சொல்ல முடியாது

அதே மாதிரிதான் சிவபெருமாளோட பக்தியும் அருளும்

அவர் அருள் பண்ணதுனாலதான் அபௌருஷேயமான வேதமே உருவாச்சு

அவராலதான் மனுஷ்யா ஞானத்தையும் மோக்ஷத்தையும் பெறறா

சூதர் சொல்றார்

சுத்தி வளைச்சு சொல்லாம புரியுற மாதிரி சொல்றேன்

இந்த ஜகத்துல நடக்குற எல்லா அசைவுகளுக்கும் காரணம் சிவபெருமாள் தான்

இந்த ஜகத்துக்கே மூலம் சிவபெருமாள் தான்

சிவாய நமஹ

 

  • பிரம்ம தேவரிடம் முனிவர்கள் விடுத்த வினாவின் அடிப்படை நோக்கம் யாது?
    படைப்பின் தலைவனான பிரம்மாவிடமே சென்று, இந்த அகிலம் தோன்றுவதற்குக் காரணமான மூலப்பொருள் எதுவென்றும், அனைத்து தத்துவங்களுக்கும் மேலான பரம்பொருள் யார் என்றும் அறிவதே முனிவர்களின் நோக்கமாக இருந்தது.
  • சிவ தத்துவத்தை வாக்காலும் மனதாலும் எட்ட முடியாது என்பதன் உட்பொருள் என்ன?
    வாக்கு என்பது ஒரு பொருளை வர்ணிக்கப் பயன்படுவது, மனம் என்பது உருவங்களைக் கற்பனை செய்வது. ஆனால் சிவபெருமான் உருவமற்றவர், எல்லையற்றவர் என்பதால், வாக்கினால் அவரை முழுமையாக விவரிக்க இயலாமலும், மனதினால் அவரை ஒரு வடிவிற்குள் அடக்க முடியாமலும் அவை தோல்வியுற்றுத் திரும்புகின்றன.
  • பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் முதலான தெய்வங்களின் தோற்றத்திற்கு ஆதாரமாக விளங்குவது எது?
    எதிலிருந்து வாக்குத் திரும்புகிறதோ, அந்தப் பரம்பொருளாகிய மகாதேவரிடமிருந்தே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், இந்திரன் முதலான தேவர்களும், பஞ்சபூதங்களும், புலன்களும் தோன்றின.
  • பரம்பொருளைக் காண்பதற்கு உரிய ஒரே வழி எதுவென பிரம்ம தேவர் குறிப்பிடுகிறார்?
    சிவபெருமானைக் கண்களாலோ அல்லது தர்க்க அறிவினாலோ காண இயலாது. அவரைத் தரிசிப்பதற்குப் பரம பக்தி ஒன்றே வழியாகும். வேறு எதனாலும் அவரை அடைய முடியாது என்பது திண்ணம்.
  • மகாதேவர் எனும் திருநாமத்தின் சிறப்பு யாது?
    அனைத்து தேவர்களுக்கும் மேலானவர், எல்லாவற்றையும் அறிபவர் மற்றும் இந்த ஜகத்திற்கே ஈஸ்வரனாக விளங்குபவர் என்பதால் அவர் மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார்.
  • இறைவனின் அருளுக்கும் அடியாரின் பக்திக்கும் இடையேயான தொடர்பு எத்தகையது?
    இது விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து விதையும் தோன்றுவதைப் போன்ற ஒரு சுழற்சி முறையாகும். சிவனின் அருள் இருந்தால் தான் அவரிடம் பக்தி பிறக்கும், அந்தப் பக்தியின் மூலமே மீண்டும் அவருடைய அருள் கிட்டும்.
  • வேதங்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பு யாது?
    மனிதர்களால் உருவாக்கப்படாத, அபௌருஷேயமான வேதங்கள் யாவும் சிவபெருமானின் அருளாலேயே உருவாயின. அவரே வேதங்களின் சாரமாகவும் விளங்குகிறார்.
  • சிவ தத்துவத்தில் மறைந்துள்ள இரகசியம் அல்லது நுட்பமான உண்மை யாது?
    உலகிலுள்ள அனைத்து அசைவுகளுக்கும், மாற்றங்களுக்கும் மூலகாரணம் சிவபெருமானே. அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதும், இந்த ஜகத்தின் மூலமே அவர்தான் என்பதும் மறைந்துள்ள பேருண்மையாகும்.
  • மானுட வாழ்வின் உயரிய இலக்குகளான ஞானத்தையும் மோட்சத்தையும் அடைவது எப்படி?
    ஞானத்தையும் மோட்சத்தையும் சிவபெருமானின் அருளால் மட்டுமே ஒருவன் பெற முடியும். உலகப் பற்றுகளை நீக்கி, அவரிடம் சரணடைவதே அதற்கான வழியாகும்.
  • இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்த்தாவாகப் பிரம்மன் இருந்தாலும், அவர் யாரைத் துதிக்கிறார்?
    உலகைப் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்ம தேவரே, அனைத்து காரணங்களுக்கும் காரணமான சிவபெருமானையே தமக்கு மேலான தத்துவமாக ஏற்றுத் துதிக்கிறார்.
தமிழ்

தமிழ்

சிவன்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies