ஐயப்பன் என்பதன் அர்த்தம்

0:00 0:00

ஐயப்ப சுவாமியோட நாமகரணம் நடந்தது

அதுக்கப்புறம் சிவபெருமாளும் பார்வதி தேவியுமா சுவாமியை கைலாசத்துக்கு அழைச்சுண்டு வந்தா

சுவாமிக்கு வித்தை எல்லாம் கத்து கொடுத்தது சாக்ஷாத் சிவபெருமாளே

வேதங்களும் சாஸ்திரங்களும் எல்லாம் சுவாமி கத்துண்டார் தன்னுடைய அப்பாகிட்ட இருந்து

சிவபெருமாள் ஒருக்கா பார்த்தபோது, பூமியில கலியுகத்தோட பிரபாவம் ரொம்ப அதிகமா இருக்கிறதா தெரிய வந்தது

திருட்டு, ஹிம்சை எல்லாம் ரொம்ப அதிகமா இருந்தது

மனுஷியா உழைக்கிறத விட்டு மத்தவா உழைச்சதோட பலத்தை பலமா பிடுங்கி வாங்கிண்டு இருந்தா

இதுக்கெல்லாம் மேல மஹிஷியோட கொடுமைகள்

மஹிஷி பூமியில மட்டும் இல்ல ௰௪(14) லோகங்கள்லயும் நாசம் பண்ணிட்டு இருந்தா

சிவபெருமாள் ஐயப்ப சுவாமிய கூப்பிட்டு சொன்னார்

லோகத்துல தர்மத்தை சம்ஸ்தாபன பண்ண பொறந்தவன் நீ

மஹிஷியை அழிக்க பொறந்தவன் நீ

ஆனா பூமியில போய் ஒரு ராஜாவோட ௰௨(12) வருஷம் இருந்ததுக்கு அப்புறம்தான் இது பண்ண முடியும்

அப்படித்தான் மஹிஷி பிரம்மா கிட்ட இருந்து வரம் வாங்கி இருக்கா

பூமியில பத்மதளம்னு ஒரு ராஜ்ஜியம் இருக்கு

இதுதான் பந்தளம்

அந்த பந்தளத்து அரசனோட நீ ௰௨(12)  வருஷம் இருக்கணும்

அதுக்கப்புறம் நீ மஹிஷியை வதம் பண்ணனும்

அதுக்கப்புறம்

௪ (4) லட்சத்தி   ௩௰௨(32)ஆயிரம் வருஷம் கலியுகம் முடியறது வரைக்கும் நீ பூமியிலேயே இருந்து லோகக்ஷேமத்துக்காக தபஸ் பண்ணனும்

இதுக்காக நீ பந்தளத்தை விட்டு காட்டுக்கு போகணும்

இந்த லோகத்துல இருக்கக்கூடிய எல்லா மனுஷாளும் ஒரு நாள் இல்லைன்னா இன்னொரு நாள் உன்னோட பின்னாடி பக்தியோட வருவா

பஞ்சபூதங்கள் அஞ்சு

அந்த பஞ்சபூதங்களுக்கு நீ நாதன் அப்பா

அதனால உன் பெயர் அஞ்சப்பன் அப்படின்னு பிரசித்தமாகும்

இந்த அஞ்சப்பன் தான் இப்போ ஐயப்பனா மாறினது

இப்போ நான் உன்னோட கழுத்துல அழகான ஒரு மணி கட்ட போறேன்

இதனால உனக்கு மணிகண்டன்னும் ஒரு பேர் வரும்

இப்பொழுது பந்தல அரசனுக்கு குழந்தைகள் கிடையாது

புத்திர பிராப்திக்காக அரசனும் அரசியும் பிரார்த்தனை பண்ணிட்டு இருக்கா

நீ பூமிக்கு போயி பம்பா நதி கரையில சின்ன குழந்தையா படுத்துண்டு இருக்கணும்

அந்த அரசன் அப்போ அங்க வந்து உன்ன பார்த்ததும் புத்திரன் என்கிற வாத்ஸல்யம் வந்து உன்ன தன்னுடைய அரண்மனைக்கு எடுத்துண்டு போவார்

அப்படி சிவபெருமாள்ட்டையும், பார்வதி அம்பாள்ட்டையும், கணபதிகிட்டயும், சுப்ரமணிய சுவாமிகிட்டயும் சொல்லி, ஐயப்ப சுவாமி பூமியில வந்து சேர்ந்தார்

கைலாசத்துல இருக்கும்போதே ஐயப்ப சுவாமியோட திருமணம் ஆயிருந்தது

பிரபாதேவியோட பிரபாதேவி பராசக்தியோட சொரூபம்

சுவாமியே சரணமையப்பா

 

  • ஐயப்ப சுவாமிக்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் பயிற்றுவித்தது யார்?
    ஐயப்ப சுவாமிக்கு சாக்ஷாத் சிவபெருமானே குருவாக இருந்து சகல வித்தைகளையும், வேத சாஸ்திரங்களையும் பயிற்றுவித்தார்.
  • சிவபெருமான் மணிகண்டனை பூமிக்கு அனுப்பத் திருவுளம் கொண்டதற்கான காரணம் யாது?
    கலியுகத்தின் பிரபாவத்தால் பெருகிய திருட்டு, வன்முறை மற்றும் அதர்மங்களை வேரறுக்கவும், பதினான்கு லோகங்களையும் துன்புறுத்திய மஹிஷியை சம்ஹாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டவும் சிவபெருமான் சுவாமியை பூமிக்கு அனுப்பினார்.
  • மஹிஷி பெற்ற வரத்தின்படி ஐயப்ப சுவாமி எத்தகைய நிபந்தனைக்கு உட்பட்டு அவளை வதம் செய்ய வேண்டியிருந்தது?
    பூலோகத்தில் ஒரு மன்னனிடம் பன்னிரண்டு ஆண்டுகள் வளர்ந்த பின்னரே மஹிஷியை வதம் செய்ய முடியும் என்ற பிரம்மதேவனின் வரத்தின்படி, சுவாமி பந்தள மன்னனிடம் வளர வேண்டியிருந்தது.
  • பத்மதளம் என்று அழைக்கப்பட்ட தேசம் தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது?
    ஆதியில் பத்மதளம் என்று அழைக்கப்பட்ட அந்தப் புண்ணிய தேசமே தற்போது பந்தளம் என்று போற்றப்படுகிறது.
  • அஞ்சப்பன் என்னும் திருநாமம் சுவாமிக்கு ஏற்படக் காரணமான தத்துவம் என்ன?
    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்கும் ஐயப்ப சுவாமியே நாதன் (தலைவன்) என்பதால், அவர் அஞ்சப்பன் என்று அழைக்கப்படுகிறார். இதுவே மருவி ஐயப்பன் என்று நிலைபெற்றது.
  • மணிகண்டன் என்ற திருநாமம் சுவாமிக்கு எவ்வாறு சூட்டப்பட்டது? பூலோகம் செல்லும் வேளையில் சிவபெருமான் சுவாமியின் கழுத்தில் அழகான ஒரு மணியைக் கட்டியருளினார். இதனால் அவர் மணிகண்டன் என்று திருநாமம் பெற்றார்.
  • பந்தள மன்னன் ஐயப்பனை எவ்வாறு கண்டெடுத்தார்?
    புத்திர பாக்கியம் வேண்டி தவம் புரிந்த பந்தள மன்னன், பம்பா நதிக்கரையில் சிவபெருமான் ஆணைப்படி கைக்குழந்தையாகக் கிடந்த மணிகண்டனைக் கண்டு, வாத்ஸல்யத்துடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
  • பூலோகத்தில் அதர்மத்தை அழித்த பின் சுவாமி மேற்கொண்ட சங்கல்பம் என்ன?
    மஹிஷியை வதம் செய்த பின்னர், கலியுகம் முடியும் வரையிலான நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் உலக நலனுக்காகக் காட்டில் தவம் புரிய சுவாமி திருவுளம் கொண்டார்.
  • கைலாசத்தில் இருக்கும்போதே ஐயப்ப சுவாமிக்குத் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் தேவியின் பெயர் என்ன?
    கைலாசத்தில் இருக்கும்போதே சுவாமிக்குத் திருமணம் நடைபெற்றது. பராசக்தியின் சொரூபமான பிரபா தேவியே சுவாமியின் தேவியாவார்.
  • ஐயப்ப அவதாரத்தின் நோக்கமாக சிவபெருமான் குறிப்பிட்ட ரகசியம் என்ன?
    தர்மத்தை நிலைநாட்டுவது மற்றும் மஹிஷியை வதம் செய்வது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் உலக மக்கள் அனைவரும் பக்தியுடன் சுவாமியைத் தேடி வரும் மார்க்கத்தை உருவாக்குவதே இந்த அவதாரத்தின் மறைபொருளாகும்.
தமிழ்

தமிழ்

ஐயப்பன்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies