ஆனைக்காவில் அருள் புரியும்

ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
நெஞ்சில் அகலாமால் நீ நின்று புகழ் தருவாய் ஈஸ்வரியே
(ஆனைக்காவில்)
முகிலாகி கருணை என்னும் மழை பொழிவாய்
எந்த முறையீடு சொன்னாலும் வழி சொல்லுவாய்
(ஆனைக்காவில்)
காவிரி நதி என்னும் பூவரங்கம்
அதன் கரையோரம் அருள் திருவரங்கம்
இரண்டிற்கும் நாயகமாய் அமைந்த தலம்
நீ எழிலோடு அமர்ந்திடும் அமுதீசஸ்வரம்
(திரு ஆனைக்காவில்)
தாய்மையின் வடிவாய் எழுந்தருள்வாய்
உன் திருவடி பணிந்தால் நலம் தருவாய்
வைகரை மலர் போல் மணம் தருவாய்
எந்தவரம் கேட்டாலும் உடன் தருவாய்
(ஆனைக்காவில்)
காலத்தின் மாற்றமெல்லாம் உன் ஜாலங்கள்
கருணையின் ஒளிதான் உன் தீபங்கள்
தேனான இசையாவும் உன் ராகங்கள்
நான் தேடிடும் நிம்மதி உன் பதங்கள்
ஆனைக்காவில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரியே
நெஞ்சில் அகலாமால் நீ நின்று புகழ் தருவாய் ஈஸ்வரியே

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies