அஸ்வினி நட்சத்திரம்

Ashwini Nakshatra Symbol

 

மேஷ ராசியின் 0 டிகிரி முதல் 13 டிகிரி 20 நிமிடங்கள் வரை பரவும் நட்சத்திரம்  அஸ்வினி நட்சத்திரம். வேத ஜோதிடத்தின் படி இது முதல் நட்சத்திரமாகும். நவீன ஜோதிடத்தின்படி இதில் β மற்றும் γ Arietis நட்சத்திரங்கள் அடங்கும்.

 

Click below to listen to Ashwini Nakshatra Mantra 

 

Ashwini Nakshatra Mantra 108 Times | Ashwini Nakshatra Devta Mantra | Nakshatra Vedic Mantra Jaap

  

 

குணாதிசயங்கள்

  • தைரியம்.
  • புத்திசாலித்தனம்.
  • நல்ல ஞாபகம்.
  • மீண்டும் மீண்டும் கற்பதில் ஆர்வம்.
  • பரந்த நெற்றி.
  • பெரிய கண்கள்.
  • அமைதியானவர்.
  • இரக்க குணமுள்ளவர்.
  • அழுத்தத்திற்கு இணங்க மாட்டார்.
  • சில நேரத்தில் பிடிவாதமானவர்.
  • நீண்ட காலத்துக்காக  முடிவு எடுப்பவர்.
  • உதவும் குணம் உள்ளவர்.
  • கடின உழைப்பாளி.
  • சிலரிடம் குடிக்கும் பழக்கம் இருக்கும்.
  • குணமாக்கும் திறமை காணப்படும்.
  • பிரபலமானவர்.
  • அதிர்ஷ்டசாலி.
  •  நீதியோடு செயல்படுபவர்கள்.
  •  மரியாதை கிடைக்கும்.
  •  நல்ல ஆலோசகர்.
  •  மாயாஜாலத்தில் விருப்பமுடையவர்.
  •  செலவாளி.
  •  எளிதில் கோபப்படுபவர்.
  •  பரபரப்புடன் எப்போதும் இருப்பவர்.
  •  பேசிக் கொண்டே இருப்பவர்.
  •  சண்டை போடும் பழக்கம்.
  •  பயணிப்பதில் விருப்பமுடையவர்.
  •  உடன் பிறப்பு உடன் கருத்து வேறுபாடு உடையவர்.
  •  சொத்துக்களை பற்றி கவலை கொள்பவர்.
  •  பெரிய செல்வந்தர் இல்லை.

 

சாதகமற்ற நட்சத்திரங்கள்

  • கிருத்திகை
  • மிருகசீரிடம்
  • புனர்பூசம்
  • விசாகம் 4ஆம் பாதம்
  • அனுஷம்
  • கேட்டை

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை மேற்கூறிய நட்சத்திரங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் மற்றும்  இந்த நட்சத்திரங்களில் அவர்களுடைய பங்காளிகள்  இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

உடல்நிலை பிரச்சனைகள்

  •   தலையில் காயங்கள்.
  •   புண்கள்
  •   முடக்கு வாதம்
  •   மூளையில் ரத்தக் உறைதல்
  •   மூளைக்காய்ச்சல்
  •   மூளையில் ரத்தப்போக்கு
  •   பக்கவாதம்
  •   வலிப்பு நோய்
  •   தூக்கமின்மை
  •   மலேரியா.
  •   சின்னம்மை

 

அஸ்வினி நட்சத்திரத்தின் தோஷம்

அஸ்வினி நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கண்டாந்த தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள்.

கண்டன்டந்த சாந்தி பரிகாரம் நடத்திக் கொள்ளலாம். 

கண்டாந்த தோஷத்தில் பிறந்தவர்கள் குடும்பத்திற்கு கெட்ட பெயரும், சங்கடமும் ஏற்படுத்துவார்கள்.

 

தொழில் அமைப்பு

புத்திசாலித்தனமும், கடின உழைப்பாளியுமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வேலையையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். 

அவர்கள் தங்கள் கோபத்தையும் உணர்ச்சி வசப்படுவதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற சில தொழில்கள் -

  • காவல்துறை அதிகாரி
  • பாதுகாப்பு துறை
  • ரயில்வே
  • தொழில் முனைவோர்
  • சட்டம்
  • இரும்பு மற்றும்  தாமிரம் தொழில்
  • ஆசிரியர்
  • பத்திரிகைத்துறை
  • எழுத்துத் துறை
  • மருத்துவர்
  • குதிரை சவாரி அல்லது குதிரை சார்ந்த தொழில்
  • யோகா பயிற்சியாளர்

 

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வைரம் அணியலாமா?

அணியக்கூடாது. 

 

அதிர்ஷ்டக் கல்

வைடூரியம்.

 

அஸ்வினி நட்சத்திரத்தின் நிறம் எது?

சிவப்பு

 

பெயர்

அவகஹடாதி அமைப்பின் படி அஸ்வினி நட்சத்திரத்தி பெயர்களின் தொடக்க எழுத்து இவ்வாறாக:

  • முதல் பாதம்/ சரணம் – சூ
  • இரண்டாம் பாதம்/ சரணம் - சே 
  • மூன்றாம் பாதம்/ சரணம்- சோ 
  • நான்காம் பாதம்/ சரணம் - லா 

இந்த எழுத்துக்களை பாரம்பரிய முறைப்படி நட்சத்திர பெயர் வைக்க, பெயர் சூட்டும் விழாவின்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில சமூகத்தில் மூதாதையர்களின் பெயர்களை வைக்கும் நடைமுறை பழக்கத்தில் உள்ளது. 

இதனால் ஒரு தீமையும் இல்லை.

பதிவுகளுக்காகவும், நடைமுறைகளுக்காகவும் வேறு அதிகாரபூர்வ பெயர்களை வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. 

இதற்கு வியாவகாரிகப் பெயர் என்று பெயர். 

மேல் சொல்லப்பட்ட முறைப்படி கூறப்பட்ட நட்சத்திர பெயர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும்.

அதிகாரப்பூர்வ பெயர்களில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சேர்க்கப்பட கூடாத எழுத்துக்கள்  - அ, க்ஷ, ச, ண, ட, ர, ள, வ.

 

திருமண வாழ்க்கை

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்பமாட்டார்கள். 

அவர்கள் எவரொருவர்  தன்னுடைய தனித்துவத்திற்க்கு மரியாதை தருவார்களோ அப்படிப்பட்டவர்களை வாழ்க்கை துணைவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவர்கள் பாதுகாப்பானவர்களும் அக்கறையுள்ளவரும் ஆவார்கள். 

அவர்கள் சந்தோஷமாக குடும்ப பொறுப்புக்களை ஏற்றும் நடத்தியும் கொள்வார்கள். 

அவர்கள் எளிமையான சுபாவத்தை உடையவர்கள். 

அதனால் எளிதாக தங்களுடைய துணைவர்களை புரிந்துக் கொள்வார்கள். 

அவர்கள் திருமணத்திற்கு பிறகும், தங்களின் பெற்றோர்களுடனும், உடன்பிறந்தவர்களுடனும் நல்ல உறவை கொண்டிருப்பார்கள்.

 

பரிகாரம்

 

மந்திரம்

ஓம் அஸ்வினீகுமாராப்யாம் நம꞉

 

அஸ்வினி நட்சத்திரம்

  • இறைவன் - அஸ்வினி குமாரர்கள்
  • கிரகம் - கேது 
  • மிருகம் - குதிரை
  • மரம் - எட்டி மரம்
  • பறவை - வைரி (Accipiter badius)
  • பூதம் - பூமி 
  • கணம் - தேவகணம்
  • யோனி - குதிரை, புருஷ யோனி
  •  நாடி - ஆதிய நாடி
  • குறியீடு - குதிரையின் தலை

 

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |