ஸ்ரீ பாதம் சேவிக்க

உதயாதி நாழிகையில் உன் சுப்ரபாதம் உளமாற கேட்கிறேனே
உறங்கிடும் போதும் உன் தாமரை பாதங்கள் உள்ளத்தில் சேர்க்கிறேனே
சதகோடி சூரியப்பிரகாசம் உன் திருமுக சந்நிதியில் பார்க்கிறேனே
சரணாகதி யென்று அன்னமையன் போல் உன் தாள்களில் வீழ்கிறேனே

பல்லவி:
ஸ்ரீ பாதம் சேவிக்க ஸ்ரீ ஏழுமலை வந்து கோபாலன் புகழ் பாடுவோம்
நம் குறை தீர்ந்து கொண்டாடுவோம்

அனுபல்லவி:
மா பாவம் செய்தாலும் மன்னிக்கும் மகாராஜன் மலை மீது படி ஏறுவோம்
அவன் மலர் பாதம் தினம் காணுவோம்
ஒரு கையில் திரு சங்கு ஒரு கையில் ஸ்ரீ சக்ரம்
உலகாளும் நம் நாயகன் நம் உயிர் காக்கும் எழில் மாயவன்

சரணம்:
உருகாத மனம் ஏது இரு காலை மறவாது அதி காலை பாராயணம்
அவன் திரு நாமம் நாராயணம்
நாள்தோறும் கல்யாணம் தீராத சந்தோஷம்
நம் நாதன் மலை மீதிலே
அவன் தருகின்ற நல் வாழ்விலே
பாதாதி கேசம் ஸ்ரீ பகவானை பாருங்கள்
பாலாஜி என பாடுங்கள்
உடன் பறந்தோடும் நம் பாவங்கள்

Devotional Music

Devotional Music

பக்தி பாடல்கள்

Click on any topic to open

0

Copyright © 2026 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize

We use cookies