ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா

 

Raksha Raksha jagan Mata

 

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா

மங்கள வாரம் சொல்லிட வேணும்
மங்கள கண்டிகை ஸ்லோகம்
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா

படைப்பவள் அவளே, காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி
ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி
திருவருள் தருவாள் தேவி
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா

கருணையின் கங்கை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்..
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா
சர்வ சக்தி ஜெயதுர்கா

 

Copyright © 2023 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |